Ads

உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2021) நிபந்தனைகளுக்குட்பட்டு ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் திறக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2021) நிபந்தனைகளுக்குட்பட்டு ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் திறக்க அனுமதி - மாவட்ட ஆட்சியர் உத்தரவு !

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலும் , தருமபுரி மாவட்டம் , பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் , கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட ஒகேனக்கல் வாழ் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் , பொதுமக்களின் சுற்றுலா ஆர்வத்தை முன்னிட்டும் உலக சுற்றுலா தினமான 27.09.2021 அன்று முதல் கீழ்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது . 

1 . ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து , மடம் செக்போஸ்ட் , ஒகேனக்கல் பேருந்து நிலையம் மற்றும் ஆலம்பாடி செக்போஸ்ட் ஆகிய இடங்களில் சோதனை செய்யப்படுவார்கள் . 

கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி :

2. சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் . ( தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கான சான்று அல்லது ஆன்லைன் ஆதாரம் காண்பிக்கப்பட வேண்டும் ) 

3. ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள் , எண்ணெய் மசாஜ் தொழிலாளிகள் , சமையல் செய்பவர்கள் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்யப்பட வேண்டும் 

மாஸ்க் அணிவது கட்டாயம் :

4. எண்ணெய் மசாஜ் தொழிலாளிகள் , சமையல் செய்பவர்கள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்வசம் அணிவது கட்டாயமாகும். 

5. சுற்றுலா பயணிகள் தடைசெய்யப்பட்ட நெகழிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் . மேலும் சுற்றுலா தலத்தை தூய்மையாக பராமரிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் . 

அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி இல்லை :

6 .சுற்றுலா பயணிகளுக்கு அருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது . மேலும் பரிசல்களில் சென்று சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது . 


7. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல் , தனிநபர் இடைவெளி மற்றும் அடிக்கடி கைகழுவுதல் உள்ளிட்டவை அவசியமாகும் . இதனை மீறுபவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். 

8. சுற்றுலா பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டிகள் பரிசல்களில் செல்லும்போது உயிர் காக்கும் பாதுகாப்பு கவசம் ( Life Jackets ) மற்றும் முக்கவசம் அணிவது கட்டாயமாகும் . தனிநபர் இடைவெளி அவசியமாகும் . 

காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே அனுமதி :

9. ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளுக்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுகிறது . மடம் செக்போஸ்டில் தனியார் வாகனங்கள் பிற்பகல் 4.30 மணிக்கு ஒகேனக்கல் நோக்கி செல்ல அனுமதிக்கப்படாது .