Ads

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்க்கு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பான கோரிக்கைகள் !

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்க்கு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பான கோரிக்கைகள்  ! 

பெறுநர்  : 

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் 

தமிழ்நாடு அரசு , தலைமைச் செயலகம் , 

சென்னை - 600 009 . 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு,  வணக்கம். 

தாங்கள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்து தாங்கள் ஆற்றி வரும் அரும்பணிகளுக்காக, எங்களின் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . 26.08.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் , கல்வி மானியக் கோரிக்கை சம்பந்தமான விவாதங்கள் நடைபெற்று அவைகளுக்கு தாங்கள் பதில் அளிக்கும்போது , கீழ்க்காணும் அறிவிப்புக்களை தாங்கள் அறிவித்தால் தமிழக ஆசிரியர் சமுதாயம் தங்களை நெஞ்சார வாழ்த்தி மகிழும் . அதன் மூலம் எங்களுடைய உள்ளங்களில் நீங்கள் , நீங்கா இடம் பெறுவீர்கள் என்பதையும் தங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் . 

1 . தற்போது பள்ளிக்கல்வித் துறையிலும் , உயர் கல்வித்துறையிலும் காணப்படும் குழப்பங்களுக்கு அடிப்படை காரணம் - கல்வி - ஒன்றிய அரசின் பொதுப் பட்டியலில் இருப்பதுதான் . ஆகவே இந்த குழப்பங்களை அடியோடு அகற்றிட , அரசியல் அமைப்புச் சட்டத்தில் முன்பிருந்ததைப் போன்று கல்வியை மாநில அரசுப் பட்டியலுக்கு மாற்றிட சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பிட வேண்டுகிறோம் .

2. பள்ளிக்கல்வித்துறையில் , எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாமல் இருக்க , மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆசிரியர் சங்கத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திட வேண்டுகிறோம் . 

3. ஆசிரியர் மாணவர் விகிதம் 1:25 ஆக குறைத்திட வேண்டுகிறோம் . 

4. மேல்நிலை வகுப்புகளில் ( 11 , 12 - ஆம் வகுப்பு ) இருப்பதைப் போன்று 6 முதல் 10 வகுப்புகளுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் அப்பாடத்தில் பட்டம் பெற்றுள்ள பட்டதாரி பாட ஆசிரியரை நியமிக்க வேண்டுகிறோம் . இதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன் உயர்ந்து தமிழகத்தில் கல்வித்தரம் உயரும் . 

5. 2011 மற்றும் 2012 ஆகிய வருடங்களில் பணியில் அமர்த்தப்பட்ட , அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு , ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) இருந்து விலக்களித்து , அவர்கள் நியமன நாளில் இருந்து பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர் . சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் TET- இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . அதைப் போலவே , அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணியாற்றிக்கொண்டிருக்கும் , சுமார் 1500 ஆசிரியர்களுக்கு ( இவர்களும் 2011 மற்றும் 2012 - ம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டவர்கள் ) ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) இருந்து விலக்களித்து , அவர்களையும் பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணிவரன்முறை செய்து அவர்களின் வீடுகளில் விளக்கேற்றி வைக்குமாறு வேண்டுகிறோம் . 

6. தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக ஆசிரியர்கள் பணிக்கு தேவையான கல்வித் தகுதிகளை விட கூடுதலாக உயர்கல்வி தகுதிகள் பெற்றிருந்தால் , அக்கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் ( இரண்டு இன்கிரிமென்ட்டுக்கு சமமாக ) வழங்க பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது , அரசாணை பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது . அதனை கடந்த ஆட்சியில் பறிமுதல் செய்துவிட்டார்கள் . ஆகவே அதனை மீண்டும் வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் . 

7. ஆசிரியர்களுக்கு ஒளிவு மறைவு அற்ற கலந்தாய்வு முறையில் பொது இடமாறுதல் , ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது . கடந்த மூன்றுஆண்டுகளாக - அவ்வாறு நடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மீண்டும் அதை நடத்தி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற வழிவகுக்குமாறு தங்களை கனிவுடன் வேண்டுகிறோம் . 

8. அவ்வாறு கலந்தாய்வு பொது இடமாறுதல் வழங்கும்போது ; i ) பதவி உயர்வின்போது , சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லாமல் , வேறு மாவட்டங்களுக்கு பதவி உயர்வில் சென்றவர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டுகிறோம் . ii ) உபரி என்ற பெயரில் , வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கிட வேண்டுகிறோம் . 

9. ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொது இடமாறுதல் வழங்கிட உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்படவேண்டுகிறோம் . அவ்வாறு பிறப்பிக்கும் போது , அரசுப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கும் , மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கும் இடமாறுதலில் செல்ல வழி வகுக்கும் அலகு விட்டு அலகு செல்வதற்கு வழிவகுக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டுகிறோம் . 

10. இடமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்துவதை ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்திட வேண்டுகிறோம் . 

11 . 2003 - லிருந்து 2006 வரையில் பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை நியமன நாளிலிருந்து பணிவரன்முறை செய்திட வேண்டுகிறோம் . 

இவண் , Hunning ( URE A. அ.மாயவன் , Ex . MLC S. பக்தவச்சலம் நிறுவனத் தலைவர் மாநிலத் தலைவர் K. ஜெயக்குமார் S. சேதுசெல்வம் மாநிலப் பொருளாளர் பொதுச்செயலாளர்