Ads

2022 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - Public Holidays List Download

 2022 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் - Public Holidays List Download 

விடுமுறை நாட்கள் - 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2022 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து - ஆணை வெளியிடப்படுகின்றது..

2022 - ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக பின்வரும் ஆணையினை தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது : ( 1 ) பொது விடுமுறை நாட்கள் : இந்த ஆணையில் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட விடுமுறை நாட்கள் . 1881 - ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் ( மத்தியச் சட்டம் XXVI / 1881 ) கீழ் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் . அரசு விடுமுறை நாட்கள் : தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும் , பின்வரும் நாட்களில் மூடப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது : -- அ ) இந்த ஆணையில் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட நாட்கள் ( 01.04.2022 அன்று முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக ) . ஆ ) 2022 - ஆம் ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் . கு.பி.பா ] 2. மேலே அறிவிக்கையிடப்பட்ட பொது விடுமுறை நாட்கள் , மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் / கழகங்கள் / வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும்..