Ads

பள்ளிச் செல்லா குழந்தைகள் - குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 15.10.2021 வரை தொடர்ந்து நடத்திட உத்தரவு !

 பள்ளிச் செல்லா குழந்தைகள் - குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 15.10.2021 வரை தொடர்ந்து நடத்திட உத்தரவு ! 

தருமபுரி கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களின் செயல்முறைகள்

 பொருள் : ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தருமபுரி மாவட்டம் -2020-21 ஆம் ஆண்டு பள்ளிச் செல்லா குழந்தைகள் - இடைநின்ற மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி 15.10.2021 வரை தொடர்ந்து நடத்திட அறிவுறுத்துதல் - சார்பு . 

பார்வை : 1. மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , சென்னை அவர்களின் ந.க.எண் : 633 / ஆ 1 / பசெகு / 2021 நாள் : 22.09.2021 பார்வை 1 ல் மாநில திட்ட இயக்குநர் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , சென்னை அவர்களின் கடிதத்ததிற்கிணங்க 

தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கான 6-19 வயதுடைய பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் ( 0-19 ) கண்டறியும் கணக்கெடுப்பு பணி 15.10.2021 வரை தொடந்து நடத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . EMIS common pool- ல் உள்ள மாணாக்கர்களின் விவரங்களை நேரடியாக ஆய்வு செய்யும் பணியும் , அதன் தொடர்ச்சியாக பள்ளியில் மாணாக்கர்களை சேர்க்கப்பட வேண்டிய பணி இன்னும் முழுமையாக நிறைவடையாததாலும் , இக்கணக்கெடுப்பு பணியினை தொடர்ந்து 15.10.2021 வரை அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி , இக்கணக்கெடுப்பு பணியினை மேற்கொண்டு 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களை வயதிற்கேற்ற வகுப்பில் 100 சதவீதம் பள்ளியில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கர் முதல்வர்க் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் ) , மற்றும் அனைத்து அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

 பெறுதல் : 

1. அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் , தருமபுரி மாவட்டம் . ( வட்டார வள மைய மேற்பார்வையாளர் வழியாக ) 

2. முதல்வர் ( மெட்ரிக் -மழலையர் , உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ) - ( வட்டார வள மைய மேற்பார்வையாளர் வழியாக ) 3. அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் , 

2. அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர் ( பொ ) . 

3. அனைத்து ஆசிரிய பயிற்றுநர் ( வட்டார வள மைய மேற்பார்வையாளர்வழியாக ) 

நகல் : 

1. முதன்மைக் கல்வி அலுவலர் , தருமபுரி அவர்களுக்கு தகவலுக்காக அன்புடன் அனுப்பப்படுகிறது .

 2.மாவட்ட கல்வி அலுவலர்கள் , தருமபுரி , பாலக்கோடு மற்றும் அரூர் . Scanned with Camscanner