Ads

படித்ததில் பிடித்தது - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு அமைப்பின் படிப்பகம் !

படித்ததில் பிடித்தது - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு அமைப்பின் படிப்பகம் ! 
பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை... வீட்டிலும் கற்றறிந்தவர்கள் யாருமில்லை ...தனி வகுப்பிற்கு சென்று பயிலவும் பொருளாதார வசதியில்லை... என்பதும் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் விலக காரணமாகின்றன. பள்ளிக்கூடங்களில் திறமையான சில ஆசிரியர்கள் தனி வகுப்புகள் நடத்துவதால் பள்ளியில் நடக்கும் பாடங்கள் முழுமையாக மாணவர்களிடம் சென்றடைவதில்லை. இதன் விளைவாக வசதி படைத்த மாணவர்கள் அவர்களது தனி வகுப்பை நாடி செல்கின்றனர். வசதியில்லாத மாணவர்கள் புரிந்துக் கொள்ள முடியாத பாடத்தின் மீதான வெறுப்பில் பள்ளியிலிருந்து இடையில் விலகிச் செல்கின்றனர். அன்று முதல் இன்று வரை தொடரும் அவலம் இது...

 

சமதர்ம சமுதாயம் மலர
வன்முறை தேவையில்லை
கல்வியும், உழைப்பும் போதுமானது
               - காமராசர்.
சொல்லி சென்றுவிட்டார் அன்று...
சமுதர்ம சமுதாயம் மலர
கல்வி வழிசெய்கிறதா இன்று??
அவர் பிறந்தநாளில் மனதில்
எழுந்திருக்கும் கேள்வி இதுவே...
வழி செய்யும் வழியறிந்து
உழைக்க வேண்டும் என்றும்..


இந்த நிலையிலுள்ள நமது கிராமத்தின் மாணவர்களுக்கு நமது படிப்பகத்தில் மூலம் பயிற்சிப் பெற்ற ஆசிரியரைக் கொண்டு மாலை நேர வகுப்பை கட்டணமின்றி நடத்த திட்டமிட்டிருந்தோம்.நமது சமூக பணிகளுடன் இணைந்த கரங்களான இரயில் கரங்களின் உதவியுடன் மாதச் சம்பளத்தில் ஆசிரியரை நியமித்திருக்கிறோம். கூடுதல் கவனம் தேவைப்படுகின்ற மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு படிப்பகம் துணை நிற்கும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம்.

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது..