Ads

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் !

 படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ! 

சென்ற மாதத்தில் தோழர் #அரசெழிலன் அவர்களிடமிருந்து அழைப்பு.நமது நூலக செயல்பாடுகளை பாராட்டியும், படிப்பக குழந்தைகளின் எண்ணிக்கையையும், முகவரி குறித்தும் கேட்டிருந்தார். சில வாரங்களுக்கு முன்பு அவரது பெயரில் பார்சல் வந்திருந்தது. பார்சலை பிரித்து பார்க்க, சமூகத்தின் மீதான அவரது பேரன்பு வியக்க வைத்தது.

மாணவர்களின் நலன் கருதி பயனுள்ள பல பொருட்களை அனுப்பியிருந்தார். நூலக புத்தகங்களுக்கான அலமாரி, கதைப் புத்தகங்கள், ஆங்கில அகராதிகள், தேர்வு அட்டைகள்,வரைபட புத்தகங்கள், பிழையின்றி தமிழ் கற்க பிழை தவிர் ஏடுகள்,தேர்வுக்கு தயாராகும் வழிகாட்டி புத்தகங்கள் என படிப்பக மாணவர்கள் அனைவருக்கும் அனுப்பியிருந்தார். மேலும் சுவையான கருப்பட்டி வெல்லம் கலந்த தேங்காய் மிட்டாய்களையும் அனுப்பி குழந்தைகளுக்கு மகிழ்வை தந்திருந்தார்.

சமூகத்தின் எங்கோ ஓரிடத்தில் நடைபெறும் நற்செயல்களை பாராட்டுவதுடன் தனது நேரத்தை செலவிட்டு அவர்களுக்காக மெனக்கிட்டு இயங்கும் இவர்களைப் போன்ற சமூக அக்கறை கொண்ட மனிதர்களுக்கு நன்றி என்ற சிறு வார்த்தை போதாதுதான். ஆனாலும் நன்றி கூறினேன். பதிலுக்காக அவர் கூறியது,

"நன்றி எல்லாம் எதற்கு தோழர்?... உங்களது நற்செயல்களை ஊக்குவிக்கும் சிறுமுயற்சி என்பதோடு முடித்துக் கொண்டார்.தொடரட்டும் தோழர்.

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது..