Ads

படித்ததில் பிடித்தது - சொர்க்கம் இருக்குமாயின் கனவில் நான் சென்று வந்த இடம் சொர்க்கம் தான் !

படித்ததில் பிடித்தது  - சொர்க்கம் இருக்குமாயின் கனவில் நான் சென்று வந்த இடம் சொர்க்கம் தான் 

விடியற்காலையில் எழுந்திருக்கிறேன். வாசல் கதவை திறந்து வீதியில் நடந்து செல்கிறேன். வழியெங்கும் வண்ண வண்ண மலர்களைக் காண்கிறேன். தூரத்து குளக்கரை கண்ணில்படுகிறது. ஆடுகளும், மாடுகளும் ஆங்காங்கே மேய்ந்துக் கொண்டிருக்கின்றன.

செல்லும் வழியில் தேவதைகள் போன்ற குழந்தைகள் நடனம் ஆடிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வயதான பெரியவர்கள் புன்னகை பூத்த பார்வை என் மீது தெளித்துவிட்டு செல்கிறார்கள்.குளக்கரையை அடைகிறேன். நீர் முழுவதும் சிவப்பு நிற அல்லிகளால் நிரம்பி வழிகிறது. குழந்தைகளின் வருகையால் குளத்தின் அழகு கூடி இருக்க, அவர்கள் மலர்களைப் பறிப்பதும், நீந்துவதுமாக குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் ஒரு குழந்தை தான் பறித்த அல்லி மலர்களை என்னிடம் நீட்டுகிறாள்.....

மிக அருகில் என்னை அதட்டும் ஒரு குரல் கேட்கிறது.."சசி, மணி 6.30 ஆயிடுச்சு எப்ப சமைக்கிறது?" இணையரின் குரல்தான்...எழுந்த வேகத்தில் ஓடி நிற்கிறேன். gas stove ன் முன்னே (அனிச்சை செயலாக) கண்களை கசக்கி விட்டு பார்க்கிறேன். அத்தனையும் கனவாக மறைந்து போயிருந்தது. சொர்க்கம், நரகம் என்பதில் நம்பிக்கையில்லை. ஆனாலும் சொர்க்கம் இருக்குமாயின் கனவில் நான் சென்று வந்த இடம் சொர்க்கம் தான்....இதுபோன்ற கனவுகளை அடிக்கடி வேண்டுகிறேன்....( இப்படி வாழ்ந்த வாழ்க்கையைத்தான் தொலைத்து விட்டோமே என்ற ஏக்கத்தின் ஆழ்மனநினைவு கனவுவாக)