Ads

FIT India Quiz Programme ( வினாடி வினா ) - மாணவர்கள் இணையவாயிலாக பங்கேற்க பதிவு செய்தல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 FIT India Quiz Programme ( வினாடி வினா ) - மாணவர்கள் இணையவாயிலாக பங்கேற்க பதிவு செய்தல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் 

  FIT India Quiz Programme ( வினாடி வினா ) - அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் , தனியார் / சுயநிதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இணையவாயிலாக பங்கேற்க பதிவு செய்தல் - சார்பு . 

பார்வை : பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் , ந.க.எண் .048001 / எம் / எஸ் 4 / 2019 , நாள் 20.09.2021 பார்வையில் காணும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின் படி FIT India movement , Sports Authority of India மற்றும் Ministry of Youth Affairs and Sports இணைந்து நடத்தும் தேசிய அளவிலான FIT India Quiz Programme ( வினாடி வினா ) என்கின்ற நிகழ்வு 29.10.2021 முதல் இணையவாயிலாக ( Online mode ) தமிழ் , ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது . இப்போட்டிகளில் 8 ஆம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் . 

எனவே , மேற்காண் போட்டிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் இரண்டு மாணவ / மாணவிகள் கட்டணம் ஏதும் இன்றி பங்கேற்கலாம் . மேலும் , இரண்டு மாணவ / மாணவிகளுக்கு மேல் பங்கேற்கும் ஒவ்வொரு நபருக்கும் இணைப்பில் உள்ள அரசின் சுற்றறிக்கையில் உள்ளவாறு கட்டணம் செலுத்த வேண்டும் . எனவே , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் , தனியார் / சுயநிதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த தலைமையாசிரியர்கள் கட்டாயம் தங்கள் பள்ளியைச் சார்ந்த மாணவர்களின் பெயர்களை FIT India இணையதளத்தில் ( www.fitindia.gov.in ) 30.09.2021 -ற்கு முன் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் . 

மேலும் , பதிவுசெய்த மாணவர்களின் விவரத்தினை 01.10.2021 அன்று தவறாமல் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மேற்குறிப்பிட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் , சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்காண் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமிருந்து விவரத்தினை பெற்று அதன் தொகுப்பு அறிக்கையினை 04.10.2021 அன்று மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் தவறாமல் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 

இணைப்பு :

1.பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் . 

2.Fit India Quiz Revised Circular .  

3.Fit India Quiz Registration Guidelines .  


பெறுநர் :

1.மாவட்டக் கல்வி அலுவலர்கள் , கள்ளக்குறிச்சி / உளுந்தூர்பேட்டை / திருக்கோவிலூர் . ( தொடர் நடவடிக்கைக்காக ) 

2. அரசு / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் , தனியார் / சுயநிதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்.