Ads

T20 எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போன வேர்ல்ட்கப்!

 எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போன வேர்ல்ட்கப்!

சின்னப் பசங்க என்ன பெருசா பண்ணிடுவாங்கன்னு நினைச்ச வேர்ல்ட்கப்!!
அடுத்த தலைமுறை வீரர்களை, அடையாளம் காட்டிய வேர்ல்ட்கப்!!!
T20 ஃபார்மட்டோட ப்ளூபிரிண்ட் எப்படி இருக்கும்ன்னு, எல்லாருக்கும் புரியவச்ச வேர்ல்ட்கப்!!!!
பாகிஸ்தானை பெனாலிட்டில, பதறவச்ச வேர்ல்ட்கப்!!!!!
யுவி 6 சிக்ஸ் அடிச்சு, இங்கிலாந்து தலைல, இடியை இறக்குன வேர்ல்ட்கப்!!!!!!
தினேஷ் கார்த்திக் ஜான்டி ரோட்ஸா மாறி, சவுத்ஆப்பிரிக்காவை சறுக்க வச்ச வேர்ல்ட்கப்!!!!!!
செமி ஃபைனல்ல இந்தியா ஜெயிக்காதுன்னு சொன்ன ரவி சாஸ்திரிட்டயே போய், நீங்க சொன்னது தப்புன்னு நிருபிச்சுட்டோம்ன்னு தோனி கெத்தா சொன்ன வேர்ல்ட்கப்!!!!!!
அரகண்ட் ஆஸியை எப்படி தோக்கடிப்போறோம்ன்னு நினைச்சு பயந்தப்ப யுவி நான் இருக்கேன்னு சொல்லி சொல்லி அடிச்ச வேர்ல்ட்கப்
செமில பேட்டிங் ஆடியாச்சு, பௌலிங்ல எப்படி டிஃபெண்ட் பன்றதுன்னு நினைச்சப்ப, ஶ்ரீசாந்த் இரண்டு ஓப்பனர்களின் ஸ்டெம்பை பல அடி பறக்கவிட்ட வேர்ல்ட்கப்!!!!
ஃபைனல்ல பங்காளிககூட மத்த பேட்ஸ்மேன் எல்லாம் திணறனுப்ப காப்பாளரா வந்து நின்னு காம்பிர் ஆடிய வேர்ல்ட்கப் !!!!!
பாகிஸ்தானை எப்படிச் சுருட்டுறதுன்னு நினைச்சப்ப பதான் பட்டாசா பவுலிங் போட்ட வேர்ல்ட்கப்!!!!!
கடைசி ஓவர்ல யாரைப் பந்துவீச வைக்கலாம் ஹர்பஜனா இல்லை புதுபையன் ஜோகிந்தர் சர்மாவான்னு குழப்பம் வந்தப்ப ஜோகிந்தரை கூப்பிட்டு தைரியமா போடு தோத்தா பலியை நான் ஏத்துக்கிறேன்னு சொல்லி சிக்ஸ் போனப்ப கூட பதறாமல் அடுத்த பந்துக்கு தோனி விரிச்ச வலையில் பங்காளிக சிக்குன வேர்ல்ட்கப்!!!!!
The Perfect Trap delivery Laid in last over என்று தோனியின் மாஸ்டர் மைண்ட்டை இன்றுவரை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடவைக்ககூடிய வேர்ல்ட்கப்
ஐபிஎல்லுக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்த வேர்ல்ட்கப்!!!!!
சேவாக், ரோஹித் ஷர்மா, உத்தப்பா, ஆர்பி சிங் , ஹர்பஜன்ன்னு எல்லாருடைய மொத்த முயற்சியில் கிடைச்ச வேர்ல்ட்கப் .
இன்றுவரை நாம் ஜெயித்த ஒரே ஒரு டி20 வேர்ல்ட்கப், நடக்க இருக்கும் உலகக் கோப்பையில் ஜெயிக்க, உந்துகோலாக இருக்கக்கூடிய கதைகளைக் கொண்ட வேர்ல்ட்கப் .