Ads

+1 பொதுத்தேர்வு மார்ச் 2021 - மதிப்பெண் பட்டியல் ( TML ) - இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்

+1 பொதுத்தேர்வு மார்ச் 2021 - மதிப்பெண் பட்டியல் ( TML ) - இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்தல் சார்ந்த அறிவுரைகள்  

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச் 2021 - பள்ளித் தலைமையாசிரியர் - மதிப்பெண் பட்டியல்கள் ( Statement of Marks ) மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) - இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக 

* முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்களது மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் , 2020-2021 - ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் ( Statement of Marks ) மற்றும் பள்ளிக்குரிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) ஆகியவற்றை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக பின்வரும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . 

1. அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் , 30.09.2021 ( வியாழக்கிழமை ) முற்பகல் | பிற்பகல் 11.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று , பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி 2020-2021 - ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பயின்ற தங்கள் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் ( Statement ) of marks ) மற்றும் பள்ளிக்குரிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ( TML ) , ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் .. 

2. அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் பட்டியல்களில் உள்ள விவரங்களை பள்ளித் தலைமையாசிரியர் சரிபார்த்து , அவற்றில் மாணவர் / பெற்றோர்களது பெயர் , தலைப்பெழுத்து , பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் , தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் மற்றும் பள்ளி முத்திரையினை இட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் . மதிப்பெண் பட்டியல்களில் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டிருந்தால் மட்டுமே , அம்மதிப்பெண் பட்டியல் செல்லத்தக்கது . 

3. மேற்குறிப்பிட்டவாறு சான்றொப்பமிட்ட மதிப்பெண் பட்டியல்களை ( Statement of marks ) ) 30.09.2021 பிற்பகல் 01.00 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கு வழங்குதல் வேண்டும் . 

4. மார்ச் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு தற்போது மதிப்பெண் பட்டியல் ( Statement of marks ) மட்டும் வழங்கப்படும் . அரசுத் தேர்வுத் துறையால் அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் ( Printed Mark Certificate ) வழங்கப்படும் வரை மட்டுமே இம்மதிப்பெண் பட்டியல் செல்லும் . 

5. மதிப்பெண் பட்டியல்களை மாணவர்களுக்கு வழங்கிய பின்பு , மதிப்பெண் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்கள் குறித்த விவரங்களையும் பள்ளித் தலைமையாசிரியர் பட்டியலாக தயாரித்து வைத்தல் வேண்டும் . அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மாணவர்களது விவரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் . ஓம் / இயக்குநர் நகல் : 1. அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் . 2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் .