சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதியோர் நலம் - சர்வதேச முதியோர் தினத்தை அக்டோபர் 1 ம் தேதி கொண்டாடுதல் - பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்துதல் - குறித்து ,
2021 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாளன்று சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடுவதற்குத் திட்டத் தொடராணை வழங்கியும் , மாநில அளவில் கொண்டாடுவதற்கு ரூ .2,50,000 / -மும் , மாவட்ட அளவில் கொண்டாடுவதற்கு ஒரு மாவட்டத்திற்கு ரூ .10.000 /- வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூ .3,20,000 / -மும் ஆக மொத்தம் ரூ .5,70,000 / -க்கு செலவினம் மேற்கொள்ள அனுமதியும் , நிதி ஒப்பளிப்பும் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது . ( க.பி.பா. ) -2 2. சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் , 1 , 2021 அன்று இணைப்பில் உள்ள உறுதிமொழியினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் முதியோர்களை பராமரிக்கும் வண்ணமாக 2021 - ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் உறுதிமொழி எடுப்பதற்கு ஏதுவாக இணைப்பில் கண்டுள்ளவாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் .
சர்வதேச முதியோர் தின உறுதிமொழி - அக்டோபர் 1
முதியோர் தின உறுதிமொழி :
![]() |
| சர்வதேச முதியோர் தின உறுதிமொழி |

