Ads

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Basic Quiz - ஆசிரியர்கள் வினா விடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Basic Quiz - ஆசிரியர்கள் வினா விடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாட SCERT இயக்குநர் உத்தரவு!

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் 

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் Basic Quiz - ular நடத்துதல் ஆசிரியர்கள் வினாவிடைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் கலந்துரையாடுதல் - தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்துதல் - சார்பு 


18.09.2021 மற்றும் 21.09.2021 ஆகிய 2 நாட்களில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Hi - Tech lab மூலம் Basic Quiz- யினை அனைத்துப் பாடங்களுக்கும் நடத்த ஆணையிடப்பட்டது . இந்த வினாக்களையும் , விடைகளையும் அந்தந்தப் பாட ஆசிரியர்கள் மாணவர்களுடன் வகுப்பறையில் சரியான விடைகளுக்கான விளக்கத்தினை அளிப்பதுடன் தவறான விடைகளுக்கான காரணத்தினையும் மாணவர்கள் எளிதில் புரிந்திடும் வகையில் கலந்துரையாடி , மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுபடுத்திட வேண்டும் . இது போல ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடுதல் பணியினை உரிய பாட ஆசிரியர்கள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .