Ads

மலரும் நினைவுகள் - 2016 ஆம் ஆண்டு அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காக நடைபெற்ற அடிப்படைக் கணினிப் பயிற்சி

மலரும் நினைவுகள்  - 2016 ஆம் ஆண்டு அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காக நடைபெற்ற அடிப்படைக் கணினிப் பயிற்சி



A3 *Edusoft Computer Training..முதல் நாள் நிகழ்வுகள்.26.09.2016

                     முதல்நாள் காலையிலேயே 9 மணிக்குள்ளாகவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆசிரியர்கள் சுமார் 80 ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்திருந்தனர். பண்டிகை விழாவின் குதூகலத்தோடு ஒவ்வொருவரும் ஆர்வமாக வந்தி ருக்க ....பயிற்சி ஒருங்கிணைப்பாளர் Sathiyavel துணைக்குழு நண்பர்களோடு  பயிற்சியை ஆரம்பிக்க ஆயத்தமானார். 

       பயிற்சியை தலைமையேற்று நடத்த V.R.S.பொறியியல் கல்லூரியின் தாளாளர் திரு சரவணன் அவர்க ளும்...முன்னிலை வகித்து நடத்த கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் அவர்களும் அழைக்கப்பட... தமிழ்த்தாய் வாழ்த்துடனே.... குத்துவிளக்கு ஏற்றி ....விழா ஆரம்பமானது.

         வரவேற்பு உரையை A3 இன் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உமாமகேஸ்வரி அவர்கள் வழங்க, வாழ்த்துரைகளை ....அர்ஜுனன் வில் வித்தைக்கதைகளில் ஆரம்பித்து ..

ராக்கெட் விடும் தொழில்நுட்பம் கூறி.... திண்ணைப் பள்ளிகளில் ஆரம்பித்து மணலில் எழுதிய காலங்கள்....ஆசிரியர் கற்பித்தல் முறைகள் பரிணாமம் அடைந்து இன்று Pen drive இல் copy செய்து படிப்பது வரையிலும் கூறி, இந்திய மனிதவளத்தின் சக்தி எத்தகையது  அது எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறி....நல்ல எண்ணங்கள் வெற்றிப்பாதைகளை அமைக்கும் ...ஆகவே இந்த A3 இன் பயம் வெற்றியைத்தரும் என வாழ்த்துரை வழங்கினார்.

            முதல்வர் முனைவர் அன்பழகன் அவர்கள்....சாதாரண நிகழ்வாக எண்ணி வந்தேன்...ஆனால் இத்தனை ஆசிரியர்கள் இவ்வளவு ஆர்வமாக இணைந்து பயிற்சியை தன்னார்வமாக எடுத்துக்கொண்டு மாணவர்களுக்கான தேடலில் இருப்பது போற்றுதலுக்குரியது         எனக்கூறி வாழ்த்துரை வழங்கி 

அமர்ந்தார்.

             A3 இன் நோக்கங்களாக.... "ஆசிரியர்களின் ஆளுமையை வளர்த்து மாணவர் மைய வகுப்பறைகளை அதிகமாக்கி சமுதாய மாற்றத்திற்கு நகர்வதே "..என ஆசிரியர் Ajay Rex முன்மொழிய இதுவரை A3 கடந்து வந்த பாதையை ஒரு  AV (Audio Visual) ஆகத் தயாரித்து ஆசிரியர் ஜான் திரையிட்டார்...

               இந்தக் கணினிப்பயிற்சியின் நோக்கம் பற்றி ஒருங்கிணைப்பாளர் சத்தியவேல் அவர்கள் விளக்கம் கூறி...ஆசிரியர் சண்முகம் இந்தக் கணினிப்பயிற்சிக்கான ஒரு காணொலி  ஆவணம் தயாரித்துத் திரையிட்டு அனைவர் ஆர்வத்தையும் தூண்டி இறுதியில் பயிற்சி ஆரம்பமானது.

               தொடர்ந்து மற்றொரு பகுதியில் நாணயக்கண்காட்சியை ஆசிரியர் சுரேஷ் அவர்கள் காட்சிப்படுத்த... அதையும் தாளாளர் சரவணன் அவர்கள் திறந்து வைத்தார்.

               அதே நேரத்தில் பயிற்சிக்கான பாடப்பொருள்கள் அடங்கிய DVD தாளாளரின் கரங்களால் வெளியிடப்பட பங்கேற்பாளருள் ஒருவரான திருவண்ணாமலை மாவட்டத் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி பெற்றுக்கொண்டார் .தொடர்ந்து திருவாரூர் மாவட்ட ஆசிரியை AxciJohn AxciJohn ஆங்கிலப் புத்தகம் நமது மாணவர் பயன்பாட்டிற்காக தயாரித்து தாளாளர் கரங்களால் வெளியீடு செய்யப்பட்டது.

                  பயிற்சியின் முதல் நிகழ்வாக விழுப்புரம் ஆசிரியரும்    K Seenu Vasan அவர்கள் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி  வந்திருந்த அனைவரையும் Hardware Computer Engineer களாக மாற்ற உறுதி எடுத்து அதே போல நிறைவேற்றினார்.ஆம் ஒரு பழுதடைந்த கணினியின் CPU வைக் கொண்டு வந்து பிரித்து...சேர்த்து Demo செய்து பங்கேற்பாளர்களை நேரில் செய்யவைத்து....Mother Board,Ram, Processor,Fan,Hard Disk ,என கணினியின் உள் பாகங்களை பிரித்து....இணைத்து ...Power supply  தந்து....அத்தனை சமாச்சாரங்களையும் லட்டுபோல கொடுத்து வகுப்பறையை உயிரோட்டமாக்கியதோடு மிக நல்ல புரிதலை ஆசிரியர்களது மத்தியில் அடித்தளமிடக்காரணமாக இருந்தார் என்றால் மிகையாகது.

                        ஒரு கணினி என்றால் 10 வகையான பகுதிகளின் பெயரை அறிந்து கொள்ளுதலே Hardware class என்பதையும் அதன் செயல்பாடுகளைப் பற்றிய மிக விளக்கமான நேரிடை அனுபவத்தையும் ஆசிரியர்களுக்குக் கொடுத்தார்.அதே போன்று ஒரு OS installation எவ்வாறு செய்யவேண்டும் எனவும் அடுத்தடுத்தப் படிநிலைகளில் தொடர்ந்து செய்துகாட்டி விளக்கம் கூற பங்கேற்பாளர்கள் அவரவர் மடிக் கணினியில் அதை முயற்சி செய்து Operating Systemsoftware , Application software, Driver software பற்றிய வகுப்பு  செயல்விளக்கத்தோடு  நிறைவடைந்தது.

                      தொடர்ந்து இராமநாதபுரம் ஆசிரியர் மெல்வின் அவர்களது வகுப்பு. Libre Office....கட்டற்ற மென் பொருள் (Open Resource) application software துணைகொண்டு செயல் விளக்கம் தரப்பட்டது. Microsoft office tools ஆனது  மிக அதிநவீனமாக இருந்தாலும் அது காசு கொடுத்து நாம் வாங்க வேண்டும்.அதை பெரும்பாலும் நாம் செய்யாமல் Crack version மட்டுமோ அல்லது வேறு வழிகளிலோதான் பயன்படுத்தி வருகிறோம்.ஆனால் இந்த libre office tools are free and also virus free.நம் மாணவர் சமுதாயத்திற்கு நாம் சிறந்த நேர்மையான வழிகளைக் கையாள முன்னெடுக்கும் செயலாகவே இந்த பயன்பாட்டுச்செயலி . ஆகவே நாம் இனிவரும் காலங்களில் கட்டற்ற மென்பொருட்களை(OPEN RESOURCES) அனைத்து ஆசிரியர்களும்  பயன்படுத்தி அவர்கள் வழியாக மாணவர்களைப் பயன்படுத்த வைப்பதே இந்தப் பயிற்சியின் அடிப்படைநோக்கம்.

           தொடர்ந்து Tips&Tools class.திருவாரூர் மாவட்ட  Suresh Numismatist அவர்களின்  Tips &Tools...இந்த வகுப்பு மாலை 6 மணிமுதல்.. Hands on Training ஆக நடந்தது.Post Image,CCleaner,Google Translater, all Google apps....முதலான அன்றாடப்பயன்பாட்டிற்குத் தேவையான இன்றியமையாத Tips வகுப்பாக அமைந்து இரவு 9மணிவரை தொடர்ந்தது. மதிய உணவு முடிந்து ஆசிரியர் ஜான் பீட்டர் குழு ,ஒரு கல்வியை மையமாகக்கொண்ட நாடகம் 

அரங்கேற்றம் செய்தது.இவ்வாறாக A3 Edusoft பயிற்சியின் முதல்நாள் பயிற்சி முடிவுக்கு வந்தது. நன்றி

S.உமாமகேஸ்வரி A3 Team.