Ads

பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டம் 2021-2022

பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டம் 2021-2022 

2021-2022 ஆம் கல்வியாண்டு - பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டு ஆதிதிராவிடர் / மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை வழங்க தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 
பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை
பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை

1. பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை விண்ணப்பத்தின் பின்புறம் தாசில்தாரர் அவர்களிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விண்ணப்பத்துடன் சாதிச்சான்று , மாணவிகளின் பெயரிலான வங்கி கணக்கு புத்தக நகல் இணைக்க வேண்டும் . ( பெற்றோர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் பெற்றோர்களின் அஞ்சலக கணக்கு எண் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது ) வங்கி கணக்கு புத்தக நகல் ( கணக்கு எண் மற்றும் IFSC code ) தெளிவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் . 

2. குடும்ப ஆண்டு வருமான சான்று இனி வரும் காலங்களில் தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் . 

3.மாணவிகளின் வங்கி கணக்கு எண் Active -ல் இருக்க வேண்டும் . 

4.கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை IFHRMS- ல் போடப்பட உள்ளது . அதனால் காலதாமதத்தை தவிர்த்து நவம்பர் 2021 ம் மாதம் முடிவதற்குள்ளாக விண்ணப்பத்தினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . 

5.இவ்வலுவலகத்திலிருந்து அனுப்பப்படும் Excel format- ல் அனைத்து பள்ளிகளும் மாணவிகளின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் . 

6.ஆதிதிராவிடர் / அருந்ததியர் / மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் ( SC / SCA / SCC / ) மாணவிகளுக்கு ஒரு விண்ணப்பமாகவும் , பழங்குடியின ( ST ) மாணவிகளுக்கு தனி விண்ணப்பமாகவும் சமர்ப்பிக்க வேண்டும் . Excel Sheet- ல் பதிவு செய்வதும் தனித்தனியாக விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் . மேலும் ஏதேனும் விவரங்கள் தேவைப்படின் இவ்வலுவலகத்தில் கல்வி உதவித்தொகை பிரிவில் தொடர்பு கொள்ளவும் . இந்த விவரங்களை அனைத்து துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . காலதாமத்தை தவிர்க்கவும் . ( விண்ணப்பங்களின் முதல் பக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தொலைப்பேசி எண்ணை குறிப்பிடவும் )