675 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை !

675 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை ! 

675 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை ! 

பள்ளிக்கல்வி - தற்காலிக பணியிடங்கள் -2010-2011 - ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு , நகராட்சி மற்றும் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 675 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் - செப்டம்பர் 2021 - ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - குறித்து . 

பார்வை 

1. அரசாணை ( நிலை ) எண் .142 , பள்ளிக் கல்வி ( மேநிக 2 ) துறை நாள் 20.05.2010 . 2. அரசாணை நிலை ) எண் .177 . பள்ளிக் கல்வி ( மேநிக 2 ) துறை , நாள் 05.07.2010 . 3. அரசாணை ( நிலை ) எண் .558 , பள்ளிக் கல்வித் [ பக 5 ( 1 ) ] துறை , நாள் 09.08.2018 4. 

பள்ளிக் கல்வி ஆணையரின் கடித ந.க.எண் . 021972 / எல் / இ 3 / 2021 , நாள் 09.09.2021 . 

1. 125 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 625 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. .

2 ) பார்வை 2 ல் காணும் அரசாணையில் , 10 அரசு / நகராட்சி / மாநகராட்சி / உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்த அனுமதி அளித்தும் , மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும் பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் 5 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 50 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9300-34800.4800 தரஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்பப்படும் நாள் முதல் ஒரு வருட காலத்திற்கு தோற்றுவித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன . 

3 ) பார்வை 3 ல் காணும் அரசாணையில் மேற்காணும் பணியிடங்களுக்கு கடைசியாக 01.06.2018 முதல் 31.05.2021 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது . 

4 ) மேற்காணும் தற்காலிக பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் 31.05.2024 வரை மேலும் மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க பள்ளிக் கல்வி ஆணையர் அரசிற்கு கருத்துரு அனுப்பியுள்ளார் . மேலும் , தற்பொழுது , இப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 2021 - ஆம் மாதத்திற்கு ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதியம் வழங்க ஊதிய கொடுப்பாணையினை ( Pay Authorization ) வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார் . 

5 ) மேலே குறிப்பிட்டுள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் 31.05.2024 வரை மேலும் மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குவது குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது . இந்நிலையில் , இக்கடிதத்தின் இணைப்பில் கண்டுள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 2021 ஆம் மாதத்திற்கான ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை ( Pay Authorization ) வழங்கப்படுகிறது . மேற்படி அலுவலர்களுக்கான செப்டம்பர் 2021 - ஆம் மாதத்திற்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் , அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில் , ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது