மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் மாதாந்திர விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்த அனுமதி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கான நேரடி வகுப்புகள் 1-11-2021 முதல் நடத்த அனுமதி :
மேலும் , மருத்துவ நிபுணர்கள் , கல்வியாளர்கள் , பெற்றோர்களின் ஆலோசனையின்படி , 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன . அதே போல் , 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் , பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் , கல்வியாளர்கள் , பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு , அனைத்து பள்ளிகளிலும் ,
1 ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள் , கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் . அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் ,
தமிழ்நாட்டில் 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறை :
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் , அரசு ஆணை எண் . 552 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , நாள் 11.09.2021 - ன்படி , 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது . கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் , அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும் , தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று ( 28-9-2021 ) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இதன் அடிப்படையில் , எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதன் காரணமாக , கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டும் , நோய்த் தொற்று பரவலைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும் , அரசு ஆணை எண் .552 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , நாள் 11.09.2021 ன்படி , விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 31.10.2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் .
திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை :
- சமுதாயம் ,
- அரசியல் ,
- கலாச்சார நிகழ்வுகள் ,
- திருவிழாக்கள் ,
- குடமுழுக்கு உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் .
நோய்த்தொற்று பரவாமல் இருக்க பெருமளவில் மக்கள் ஒன்று கூடக்கூடிய நாட்களாகிய வெள்ளி , சனி , ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் . மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் , விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் . பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி பொதுமக்கள் , தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு , பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வருகை புரிந்து தலைமைச்செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருகின்றனர் . பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன் , அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் , திங்கட்கிழமை தோறும் , பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் , மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் ஆகியவற்றை கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது .
கடைகளிலும் , பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு , கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் :
- கடைகளின் நுழைவு வாயிலில் , வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் ( land sanitizer with dispenser ) கட்டாயமாக வைக்கப்படுவதோடு , உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் ( thermal screening ) .
- கடைகளில் பணிபுரிபவர்களும் , வாடிக்கையாளர்களும் கட்டாயம். முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் . அனைத்து கடைகளும் , குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு , கடைகளில் , சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது,
- கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது , ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் . ஆகிய நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம் :
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல் , நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் , சிகிச்சை அளித்தல் , தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ( Test Track - Treat - Vaccination - Covid - 19 Appropriate Behaviour ) கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் , கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு , நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில் , நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை ( Micro Level ) ) வரையறை செய்து , நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி , தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வேண்டும் . வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் . நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் .
விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் :



