Ads

தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரி - முதுநிலை கல்வியியல் படிப்பு - எம்.எட் . , ( Post Graduate Courses- M.Ed. ) சேர்க்கை : 2021-2022

தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரி - முதுநிலை கல்வியியல் படிப்பு - எம்.எட் . , ( Post Graduate Courses- M.Ed. ) சேர்க்கை : 2021-2022

 

முதுநிலை கல்வியியல் படிப்பு - எம்.எட் . , ( Post Graduate Courses- M.Ed. ) சேர்க்கை : 2021-2022 

தமிழகத்தில் உள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள முதுநிலை கல்வியியல் பட்டப்படிப்பு ( எம்.எட் .. ) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான ( 2021 2022 ) விண்ணப்பங்களை இணையதளம் வழியாக 04.10.2021 முதல் 13.10.2021 வரை www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் . இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது .

 விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ .60 / - ( ரூ . அறுபது மட்டும் ) செலுத்தப்படவேண்டும் . SC / ST விண்ணப்பதாரர்கள்விண்ணப்ப பதிவுக்கட்டணம் ரூ .2 / - ( ரூ . இரண்டு மட்டும் ) செலுத்தினால் போதுமானது . மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும் . இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்தக் கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் , சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasaedu.in மற்றும் www.tngasaedu.org என்ற இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது . 

இணைய தளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-28260098 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம் . இது தொடர்பாக care@tngasaedu.org மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம் . care@tngasaedu.org  என்ற மின்னஞ்சல் முகவரி விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம் . 

இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் " The Director . Directorate of Collegiate Education . Chennai - 6 " என்ற பெயரில் 04/10/2021 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம் . அனைத்து சேர்க்கை உதவிமையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம் . இணையதள வாயிலாக விண்ணப்பப் பதிவு துவங்கும் நாள் இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் தொடர்பு எண் - 044 -28260098 04.10.2021 13.10.2021 கல்லூரிக் கல்வி இயக்குநர்