Ads

Staff Selection Commission (SSC) போட்டித் தேர்விற்கான பாடக்குறிப்புகள் tamilnaducareerservices.tn.gov.in என்ற தமிழக அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது !

 Staff Selection Commission (SSC) போட்டித் தேர்விற்கான பாடக்குறிப்புகள் tamilnaducareerservices.tn.gov.in என்ற தமிழக அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ! 

பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் 

ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் ( Staff Selection Commission ) பல்வேறு துறைகளில் , 

  1. பல்நோக்கு பணியாளர் , 
  2. பெண்கள் படைப்பயிற்றுநர் , 
  3. மருத்துவ உதவியாளர் , 
  4. பொறுப்பாளர் , போன்ற 3261 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன .

 இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் . இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2021 ஆகும் . பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக அளவில் பணிநியமனம் பெறுவதற்கு ஏதுவாக இப்போட்டித்தேர்விற்கான அனைத்து பாடக்குறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் " tamilnaducareerservices.tn.gov.in " என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன . ஆகவே , இப்போட்டித்தேர்வினை எழுத விரும்பும் இளைஞர்கள் இவ்விணையதளத்தில் பதிவு செய்து பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயனடையலாம் . இதுமட்டுமின்றி , தேவையான பாடக்குறிப்புகள் அனைத்து அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கும் இவ்விணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . 

மேலும் , தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களின் வாயிலாக பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கென ( Staff Selection Commission Exam ) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாகவோ | இணைய வழியாகவோ நடத்தப்படவுள்ளன . எனவே , தங்களது மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..