படித்தல் மிகவும் பிடித்த செய்தி - அரசு பள்ளியில் பனை ஓலையில் கூடைகள், மீன், கண்ணாடி, கிளி , ஹெலிகாப்டர் கிரீடம் செய்யும் பயிற்சி

படித்தல் மிகவும் பிடித்த செய்தி - அரசு பள்ளியில் பனை ஓலையில் கூடைகள், மீன், கண்ணாடி, கிளி , ஹெலிகாப்டர் கிரீடம் செய்யும் பயிற்சி  

சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பனை சார்ந்த பொருட்களைக் குழந்தைகளிடம் அறிமுகப்படுத்தி, அதனை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம் ...

 

அது சார்ந்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம் என்ற திட்டத்துடன் பயிற்சியாளரைத் தொடர்பு கொண்டேன். ஒரு மாணவருக்கு ரூபாய் 1700 வரை பயிற்சி கட்டணம் தேவைப்படும் என தெரிந்தது. நம்மிடம் 45க்கும் மேற்பட்ட படிப்பக குழந்தைகள் இருப்பதால் அதற்கான நிதி வசதி இல்லாமல் இருந்தது.
அப்பொழுது தான் கிள்ளைப் பகுதியில் செயல்படும் FHF மையத்தின் மூலம் கிராமப்புறப்புறப் பெண்களுக்கு பனை சார்ந்த பொருட்களில் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக அன்புத்தோழி ராஜி மூலம் அறிந்து கொண்டேன்.
எங்கள் படிப்பக குழந்தைகளுக்கும் பயிற்சி தேவைப்படுகிறது என்றேன்.
"நீங்கள் ஒருவர் பயிற்சி பெற்றால் உங்கள் மாணவர்களுக்கு நீங்களே கற்றுத் தரலாமா?" என்று தோழி யோசனைக் கூற, எனக்கும் நீண்டநாளாக பனை சார்ந்த பொருட்களில் பயிற்சி பெற விருப்பம் இருந்ததால் உடனடியாக பயிற்சியில் கலந்து கொண்டேன்.
ஒருவார கால பயிற்சிக்கு பின்பு அதை நமது மாணவர்களிடம் கொண்டு சென்றேன். என்னை விட வேகமாக கற்றுக்கொண்டு வருகிறார்கள். முதல் இரண்டு வாரங்கள் முடிவடைந்த நிலையில் பனை ஓலையில் கூடைகள், மீன், கண்ணாடி, கிளி , ஹெலிகாப்டர் கிரீடம் என பலவற்றை செய்து அசத்தி வருகிறார்கள். தொடர்ந்து வார இறுதி நாட்களில் மேலும் பயிற்சி பெற இருக்கிறார்கள்.
கலைப் பொருட்களாக மட்டுமன்றி பழந்தமிழர்களின் அன்றாட தேவைகளில் பனைப் பொருட்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் நெகிழி போன்ற பொருட்களுக்கு மாற்றாக பனை பொருட்களை பயன்படுத்த வரும் தலைமுறையினரை ஊக்குவிப்போம்.
பேரன்பு தோழி # Raji Rachel அவர்களுக்கு நன்றிகள் பல...

படித்தல் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - சமூக அக்கறையோடு பதிவிட்டுள்ள இந்த செய்தி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற முகநூல் ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.