படித்ததில் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - மழை இதமானது தான் - ஆனால் தொடர்மழை ??
மழை இதமானது தான் - ஆனால் தொடர்மழை ??
இயற்கையின் அனைத்தையும்
ரசிக்கத் தெரிந்த என் கண்கள்
மழையை மட்டும் ரசிக்க மறுக்கிறது.
கடந்தகால பாதிப்புகளின்
நினைவாக ரசிக்க மறுக்கிறது..
நினைவு தெரிந்த நாள் முதல்
12ம் வகுப்பு வரை மழை காலங்கள் எங்களது உறக்கத்தை களவாடி சென்றிருக்கிறது...
கூரை வழியாக விழுகின்ற மழைத்துளியை ஏந்தும் பாத்திரங்கள் வீட்டின் பரப்பை அடைத்துக்கொள்ள, மிச்சமுள்ள இடத்தில் படுக்க
முடியாமல் தூங்கி விழுந்த
நாட்கள் நினைவுக்கு வருகிறது..
தொடர் மழையின் ஒருநாளில் அய்யனார்குளம் உடைத்துக் கொள்ள தெருவெங்கும் வெள்ளம் புரண்டோட சுவரின் ஒரு புறம் இடிந்து வீடுமுழுவதும் நீர் சூழ்ந்திருக்கும் நள்ளிரவில்
தலையில் என்னை சுமந்தபடி நின்ற தந்தை நினைவுக்கு வருகிறார்...
அந்த நாட்களில் நனைந்த விறகுகள் எழுப்பிய புகையினால்
படிக்க முடியாமல் நான் தவிக்க,
அதே புகையில் கண்களைக் கசக்கிக் கொண்டே சமைத்துப் பரிமாறிய
அம்மா நினைவுக்கு வருகிறார்..
எங்கும் ஈரம் நிறைந்திருக்க
புத்தகப்பை நனைந்து, நோட்டு புத்தகங்கள் ஒன்றோடொன்று
ஒட்டிக்கொள்ள விளக்கொளியின் சூட்டில் அவற்றை உலரவைத்து தந்த தம்பி நினைவுக்கு வருகிறான்...
வளர்ந்து வந்த இந்த சூழலிலிருந்து கரையேற கல்வி ஒன்றே வழியென்று வழிகாட்டிய அண்ணலை வணங்கி
10ம் வகுப்பு தேர்வில் முதல் மாணவியாக
தொடர்நது மகளின் படிப்பிற்கு
வீடு தடையாக கூடாதென
புது வீடு கட்ட தந்தை வாங்கிய
கடன் நினைவிற்கு வருகிறது...
இன்று நான் கரையேறிவிட்ட நிலையிலும் மழையை இரசிக்க முடியவில்லை...
தொடர் மழையின் பாதிப்பால் உறக்கமின்றி தவிக்கும் என் தம்பி, தங்கைகள் நினைவிற்கு வருகிறார்கள்
(படம் : தொடர் மழையினால் பாதிப்படைந்த நமது படிப்பக மாணவியின் இல்லம்)

படித்தல் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - சமூக அக்கறையோடு பதிவிட்டுள்ள இந்த செய்தி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற முகநூல் ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.