G.O 221 - 7.5 % இடஒதுக்கீடு மூலமாக பொறியியல் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் - அரசாணை வெளியீடு !

G.O 221 - 7.5 % இடஒதுக்கீடு மூலமாக பொறியியல் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்விக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் - அரசானை வெளியீடு !

அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களான கல்விக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் *** ஆணை :  

20.9.2021 அன்று . மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது : - " அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களான கல்விக் கட்டணம் , விடுதிக் கட்டணம் , உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் " . 

2. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் . 2021 ( சட்டம் எண் . 14 / 2021 ) இன்படி , பல்கலைக்கழகங்கள் , தனியார் கல்லூரிகள் , அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் , வேளாண்மை , கால்நடை மருத்துவம் , மீன்வளம் , சட்டம் மற்றும் பிற தொழிற்கல்வி பட்டப் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கையில் , மாநில அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் பயின்ற மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு ( 7.5 % ) முன்னுரிமையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது . 

3. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன . 

4 . 20.9.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு . மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் உரிய கருத்துருவினை கீழ்க்கண்டவாறு அரசுக்கு அனுப்பியுள்ளார் : 

( 1 ) 2021-22 ஆம் கல்வியாண்டில் பொறியியல் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5 விழுக்காடு முன்னுரிமையின் அடிப்படையில் சேர்ந்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,876 ஆகும் . 

( ii ) மொத்த படிப்புக் கட்டணம் ( Course fee ) என்பது , சேர்க்கைக் கட்டணம் , கல்விக் கட்டணம் , நூலகக் கட்டணம் , இணைய கட்டணம் மற்றும் சமூக நிதி ( Internet Fee and Society Charges ) , வளர்ச்சி நிதி , சிறப்புக் கட்டணம் , கணினி நிதி , கல்வி ஊடக சேவை நிதி ( Education Media Service Charges ) . பல்கலைக் கழக கலை மற்றும் தொழில் சேவை நிதி ( University Cultural and Professional Society Fee ) , மாணவர் விபத்து மற்றும் மருத்துவ சேவை நிதி . பதிவு மற்றும் சேர்க்கைக் கட்டணம் , சான்றிதழ் சரிபார்ப்புக் கட்டணம் , செஞ்சிலுவைச் சங்கம் உறுப்பினர் கட்டணம் மற்றும் கொடி நாள் நிதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் . விடுதிக் கட்டணம் ( Hostel fee ) என்பது நுழைவுக் கட்டணம் , நிர்வாகக் கட்டணம் , விடுதி அடிப்படை வசதிக் கட்டணம் ( Hostel Amenities Fees ) , வளர்ச்சிக் கட்டணம் , அறை வாடகை , மின்சார கட்டணம் . பாதுகாப்பு நிதி ( Security Charges } மற்றும் மாதாந்திர உணவுக்கான கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் . 

( iii ) கட்டணங்களை நிர்ணயிக்கும் குழுவால் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன . அதன்படி , ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் மாணாக்கர்களுக்கு தரச் சான்று பெறாத ( Non - accredited ) ரூ .50,000 / -ம் , தரச் சான்று பெற்ற ( Accredited ) படிப்புகளுக்கு ரூ .55,000 / -ம் ஒருமுறை பெறப்படும் வளர்ச்சி நிதியாக ( Development charges ) ரூ .5,000 / -ஆக குழு . கட்டணங்களை நிர்ணயித்துள்ளது . வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிக் படிப்புகளுக்கு கட்டணங்களையும் இக்குழு நிர்ணயிக்கிறது . மேலே தெரிவிக்கப்பட்டுள்ள கட்டணங்களானது . கல்விக் கட்டணம் . நுழைவுக் கட்டணம் . சிறப்புக் கட்டணம் , ஆய்வகம் / கணினி / இணையக் கட்டணம் , நூலகக் கட்டணம் , விளையாட்டுக் கட்டணம் , அடிப்படை வசதிக்கான கட்டணம் , கூடுதல் பாடத்திட்டக் கட்டணம் மற்றும் இதர தொடர் செலவினங்களையும் உள்ளடக்கியதாகும் . கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தின்படி சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு படிப்புக் கட்டணத்தை வழங்கலாம் . 

( iv ) மாநிலம் முழுவதிலும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பெறப்படும் விடுதிக் கட்டணம் கல்லூரிகளுக்கிடையே வேறுபடுகிறது . தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் ரூ .41.600 / - விடுதிக் கட்டணமாக பெறப்படுகிறது . 

( v ) மேலும் மாநிலத்தில் பல இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளிலும் விடுதிக் கட்டணமாக ரூ .40,000 / - பெறப்படுகிறது . எனவே , தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் ஒரு மாணவருக்கான ஆண்டு விடுதிக் கட்டணமாக ரூ .40,000 / - என நிர்ணயிக்கலாம் . மேற்காண் கட்டணங்கள் தவிர வேறு எந்த கட்டணங்களையும் அல்லது நிதியையும் மாணாக்கர்களிடம் பெறக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலாம் . 

( vi ) கல்லூரி பேருந்துகளைப் பயன்படுத்தி கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களுக்கு ( Days Scholars ) அதிகபட்சமாக ரூ .25,000 / - அல்லது கல்லூரி வசூலிக்கும் பேருந்துக் கட்டணம் இதில் எது குறைவோ , அதனை போக்குவரத்து கட்டணமாக ( Transportation Fee ) அவர்களுக்கு வழங்கலாம் . 

( vii ) மாணவர்களிடம் திருப்பி வழங்கக் கூடிய காப்புத் தொகை கட்டணம் ( Caution Deposit ) . நூலகக் கட்டணம் மற்றும் உணவு விடுதிக்கான காப்புத் தொகை கட்டணம் போன்றவற்றை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது என கல்லூரிகளுக்குத் தெரிவிக்கலாம் . கல்லூரிவாரியாக செலவினங்களை பெற்று அதனை சரிபார்த்து கல்வி நிறுவனங்களுக்கு தொகையினை பெற்றுத் தருவதற்கும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஆகும் செலவின விவரங்களைப் பெற்று அரசுக்கு அனுப்புவதற்கும் அனுமதி வழங்குமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார் . 

மேலும் முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை நடைமுறைப்படுத்துவதற்காக , 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான மாண்புமிகு படிப்புக் கட்டணம் , விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை வழங்குவதற்காக ரூ .94,65,76,981 /( ரூபாய் தொண்ணூற்று நான்கு கோடியே அறுபத்தைந்து இலட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தொன்று மட்டும் ) ஒப்பளிப்பு செய்யுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அரசினை கேட்டுக்கொண்டுள்ளார் . 

 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான படிப்புக் கட்டணம் , விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை வழங்குவதற்கான தொழில்நுட்பக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு ஆய்வு செய்து , கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது : 

7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான படிப்புக் கட்டணம் , விடுதிக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் பின்வருமாறு வழங்கப்படும் :


1 ) மொத்த படிப்புக் கட்டணம் ( Course Fee ) :

( a ) அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் , அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் , அரசு கல்லூரிகள் , அரசு உதவி பெறும் கல்லூரிகள் , அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் ஒன்றிய அரசு நிறுவனங்கள் நடத்தும் பாடப் பிரிவுகளுக்கான படிப்புக் கட்டணங்கள் அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் . 

( b ) அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் நடத்தும் சுயநிதி பாடப்பிரிவுகள் மற்றும் சுயநிதி பொறியியற் கல்லூரிகள் நடத்தும் பாடப் பிரிவுகளுக்கான படிப்புக் கட்டணங்கள் கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயம் செய்தபடி . அக்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் . ( எ.கா. 2021-22 ஆம் கல்வியாண்டில் , தரச் சான்று பெறாத படிப்புகளுக்கு ரூ .50,000 / -மும் , தரச் சான்று பெற்ற படிப்புகளுக்கு ரூ .55,000 / -மும் ஒருமுறை பெறப்படும் வளர்ச்சி நிதியாக ரூ .5,000 / -மும் வழங்கப்படும் ) . வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டணம் ( Placement and Training Fee ) - கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்துள்ள தொகை வழங்கப்படும் . 

ii ) விடுதிக் கட்டணம் ( Hostel Fee ) :

அதிகபட்சமாக ரூ . 40,000 / அல்லது கல்லூரி வசூலிக்கும் விடுதிக் கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகை விடுதிக் கட்டணமாக வழங்கப்படும் . போக்குவரத்து கட்டணம் ( Transportation Fee ) கல்லூரி பேருந்துகளை பயன்படுத்தி கல்லூரிக்கு வரும் மாணாக்கர்களுக்கு ( Days Scholars ) அதிகபட்சமாக ரூ .25,000 / - அல்லது கல்லூரி வசூலிக்கும் பேருந்துக் கட்டணம் இதில் எது குறைவோ அந்த தொகை போக்குவரத்து கட்டணமாக வழங்கப்படும் . தற்போது 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் மருத்துவ படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் வழியாக மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணங்கள் வழங்கப்படுகின்றன . 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் படிப்பில் பயிலும் மாணாக்கர்களுக்கான கட்டணங்களும் , தொழில்நுட்பக் கல்வி இயக்குநரின் ஒப்புதலின் அடிப்படையில் , தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் வழியாக கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் . 2021-22 ஆம் கல்வி ஆண்டில் 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு படிப்புக் கட்டணம் வழங்குவதற்காக ரூ .45.61 கோடியும் ( ரூபாய் நாற்பத்தைந்து கோடியே அறுபத்தோரு இலட்சம் மட்டும் ) . விடுதிக்கட்டணத்திற்காக ரூ .25.32 ( ரூபாய் மட்டும் ) கோடியும் இருபத்தைந்து கோடியே முப்பத்திரண்டு இலட்சம் போக்குவரத்துக் கட்டணத்திற்காக ரூ .3.35 கோடியும் ( ரூபாய் மூன்று கோடியே முப்பத்தைந்து இலட்சம் மட்டும் ) இந்த கல்வியாண்டு ( 2021 2022 ) வழங்குவதற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கு ( Tamil Nadu Medical Services Corporation Ltd. ) பின்வரும் அட்டவணைப்படி அரசால் ஒப்பளிப்பு செய்யப்படுகிறது . தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வழங்கும் ஒப்புதல் ஆணை மற்றும் சான்றொப்பம் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு / கல்லூரிகளுக்கு உரிய தொகையினை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் விடுவிக்க வேண்டும் . இனிவரும் ஆண்டுகளிலும் இந்த நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் . ( ரூபாய் கோடியில் ) ..

ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் நூறு விழுக்காடு படிப்புக் கட்டணம் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் விடுதிக் கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணத்தில் காலாண்டுக்கான கட்டணம் முன்னதாக விடுவிக்கப்பட வேண்டும் . 

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கீழ்க்கண்ட அறிவுறுத்தல்களை நிறுவனங்களுக்கும் கல்வி தெரிவிக்குமாறு :

1. 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணாக்கர்களிடம் எந்த கட்டணத்தையும் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது

 2. மாணவர்களிடம் திருப்பி வழங்கக் கூடிய காப்புத் தொகை கட்டணம் ( Caution Deposit ) , நூலகக் கட்டணம் மற்றும் உணவு விடுதி காப்புத் தொகை கட்டணம் ( Mess Fee Deposit ) போன்றவற்றையும் மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்கக் கூடாது . 

3. ஒவ்வொரு கல்லூரிகளிலும் 7.5 விழுக்காடு முன்னுரிமை அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் மாணாக்கர்களின் குறையினை தீர்ப்பதற்காக குறைதீர்ப்பு பிரிவு ( Redressal Cel ) உருவாக்கப்பட வேண்டும் . ( உ ) இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணாக்கர்களுக்கு பிற படிப்புதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்படாததை உறுதி செய்யுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கேட்டுக்கொள்ளப்படுகிறார் . 

6. மேலே பத்தி 5 - இல் ஒப்பளிக்கப்பட்ட தொகையினை பெற்று , தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கு ( Tamil Nadu Medical Services Corporation Ltd. ) வழங்குவதற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 

7. மேலே பத்தி 5 - இல் ஒப்பளிக்கப்பட்ட தொகை கீழ்க்கண்ட புதிய கணக்கு தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும் :

8. மேலே பத்தி 7 -இல் துவக்கப்பட்ட புதிய கணக்குத் தலைப்பிற்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அவர்கள் மதிப்பீடு , கணக்கு நேரமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரியாவார் . 

9. மேற்படி புதிய கணக்குத் தலைப்பை தங்களது பதிவேடுகளில் துவக்கிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் / கருவூல் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 

10. மேலே 5 இல் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ள செலவினம் ஒரு புதுப்பணியாகும் ( New Service ) . மேற்காண் செலவினத் தொகையினை முதற்கண் தன்னுடைய நிதியிலிருந்து செலவிடுவதற்கு தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது . 2021-22 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் சேர்க்கப்பட்ட பின் . தொழில்நுட்பக் கல்வி இயக்குநரால் அத்தொகை பெறப்பட்டு மருத்துவ சேவைகள் கழகத்திற்கு வழங்கப்படும் . மேலும் இச்செலவினத்தை 2021-22 ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் ( Supplementry Estimate ) சேர்க்கும் பொருட்டு உரிய செயற்குறிப்பினை உரிய நேரத்தில் இதற்கான குறிப்புடம் நிதி ( வ.செ .1 ) த் துறைக்கு அனுப்புமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்