படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு அமைப்பு சகோதரியை பாராட்டி முகமறியா மனிதரின் வாழ்த்து செய்தி
முகமறியா மனிதர் பல மைல் தூரத்திலிருந்து கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி மனதால் நெருங்கி ஊக்குவிக்கிறார்.
இப்படி சில மனிதர்கள் இருக்க,
தினம் முகம் பார்த்துப் பழகும் சிலர்,
ஊடகங்கள் நமது செயல்பாடுகளைத் தாங்கி வரும் வேளைகளில் முகத்தைத் தூக்கி வைத்து, முகம் பாராமல் அருகிலிருந்தும் தொலைவில் சென்றுவிடுகிறார்கள்.
இப்படியும் சில மனிதர்கள்....
யார் எப்படியிருப்பினும் நாம் பயணிக்கும் பாதையில் உண்மையும், நேர்மையும் இருக்கும் பட்சத்தில் பாதை விலகாமல் நாளும் பணி செய்து வாழ்வதே கடமையென தொடர்ந்து பயணிப்போம்.
(பல வருடங்களுக்கு பிறகு கடிதம் மூலம் செய்தி கண்ட மகிழ்ச்சி.. மகிழ்வித்தவருக்கு நன்றி)
குறிப்பு :
படித்தல் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - சமூக அக்கறையோடு பதிவிட்டுள்ள இந்த செய்தி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற முகநூல் ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.