Ads

மனமொத்த மாறுதல் Mutual Transfer விண்னைப்பங்களை இன்றே 28.02.22 பெற்று பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

மனமொத்த மாறுதல் Mutual Transfer விண்னைப்பங்களை இன்றே 28.02.22 பெற்று பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

2021 2022 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் EMIS மூலம் பொது மாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு பணிகள் 21.01.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்படி அரசாணையின் வ.எண் . ( 6 ) -ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி , ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை 28.02.2022 முற்பகல் பெற்று , பரிசீலனை செய்து அன்று பிற்பகல் ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் , மனமொத்த மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் 28.02.2022 பிற்பகல் விடுவித்து 01.03.2022 அன்று பணியில் சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .