10,371 ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

 10,371 ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

பள்ளி ஆசிரியர்கள்,  கல்லூரி , பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக்,   விரிவுரையாளர்கள் என 10,371 காலி பணியிடங்களை நடப்பு ஆண்டில் நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி,  ஆசிரியர் தகுதி தேர்வானது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடைபெறும்.

TRB - Vacancy Details, Revised Tentative Annual Recrutiment Planner 2022 - Download Here


  • 2407 முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வானது நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
  • 155 SCERT விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பானது ஜூலை - 2022 மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு அக்டோபர் 2022 நடைபெறும். 
  • 1874 பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது செப்டம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு டிசம்பர் 2022 நடைபெறும்.
  • 3987 இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது செப்டம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும். தேர்வு டிசம்பர் 2022 நடைபெறும்.
  • 1358 கல்லூரி உதவி பேராசிரியர்கள்,  493 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மற்றும்  97 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பாணையானது அடுத்தடுத்து வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


10,371 Teachers  Post Recruitment - Expected Time Table - Download here