Sollum Porulum - சொல்லும் பொருளும் TNPSC GROUP 4 [2013 to 2019] - Previous Year Question & Answers

Sollum Porulum - சொல்லும் பொருளும் TNPSC GROUP 4 [2013 to 2019] - Previous Year Question & Answers







1. பொருளறிந்து பொருத்துக : (2019 G4)

(a) தடக்கர் - கரடி

(b) எண்கு - காட்சி

(c) வள்உகிர் - பெரிய யானை

(d) தெரிசனம் - கூர்மையான நகம்

a. 3 1 4 2

b. 1 4 3 2

c. 1 2 3 4

d. 1 3 2 4

Answer: a. 3 1 4 2




2. சொல்லுக்கேற்ற பொருளறிக : (2019 G4)

a. வலிமை - திண்மை

b. நாண் - தன்னைக்குறிப்பது

c. கான் - பார்

d. துணி – துன்பம்

Answer: a. வலிமை - திண்மை



3. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் (2019 G4) றுண்டாகச் செய்வான் வினை

- இவ்வடிகளில் கைத்தொன்று - பொருள் யாது?

a. படை கவசம்

b. படை கருவிகள்

c. கைப்பொருள்

d. வலிமையான ஆயுதம்

Answer: c. கைப்பொருள்



4. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய - இத்தொடரில் உள்ள "துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க. (2018 G4)

a. மாணிக்கம்

b. மரகதம்

c. இரத்தினம்

d. பவளம்

Answer: d. பவளம்



5. "வித்தொடு சென்ற வட்டி”

என்னும் நற்றிணை வரியில் குறிப்பிடப்படும் வட்டி என்பதன் பொருள் என்ன? (2018 G4)

a. பனையோலைப் பெட்டி

b. வயல்

c. வட்ட வடிவு

d. எல்லை

Answer: a. பனையோலைப் பெட்டி



6. சொல்லைப் பொருளோடு பொருத்துக: (2018 G4)

. (a) வனப்பு 1.காடு

. (b) அடவி 2.பக்கம்

. (c) மருங்கு 3.இனிமை

. (d) மதுரம் 4.அழகு

a. 2 1 4 3

b. 3 2 1 4

c. 4 1 2 3

d. 1 2 3 4

Answer: c. 4 1 2 3



7. “என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க. (2018 G4)

a. பவளம்

b. முத்து

c. மாணிக்கம்

d. மரக்தம்

Answer: c. மாணிக்கம்



8. கடிகை என்பதன் பொருள் யாது? (2016 G4)

a. அணிகலன்

b. கடித்தல்

c. கடுகு

d. காரம்

Answer: a. அணிகலன்



9. செறு என்பதன் பொருள் (2016 G4)

a. செருக்கு

b. சேறு

c. சோறு

d. வயல்

Answer: d. வயல்



10. பொருத்துக: (2016 G4)

சிந்தை - நீர்

நவ்வி - மேகம்

முகில் - எண்ணம்

புனல் - மான்

a. 2 1 3 4

b. 1 3 4 2

c. 3 4 2 1

d. 4 3 1 2

Answer: c. 3 4 2 1



11. வாரணம், பெளவம், பரவை, புணரி என்பது--------------யைக் குறிக்கும். (2016 G4)

a. சிங்கம்

b. கடல்

c. மாலை

d. சந்தனம்

Answer: b. கடல்



12. மடங்கல்- என்னும் சொல்லின் பொருள் (2016 G4)

a. மடக்குதல்

b. புலி

c. மடங்குதல்

d. சிங்கம்

Answer: d. சிங்கம்



13. இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல் (2016 G4)

a. பொன்மனம்

b. ஆர்த்து

c. உற்றார்

d. சார்பு

Answer: c. உற்றார்



14. அங்காப்பு என்பதன் பொருள் (2016 G4)

a. சலிப்படைதல்

b. வாயைத் திறத்தல்

c. அலட்டிக் கொள்ளுதல்

d. வளைகாப்பு

Answer: b. வாயைத் திறத்தல்



15. யாப்பு என்றால்---- என்பது பொருள் (2014 G4)

a. அடித்தல்

b. சிதைத்தல்

c. கட்டுதல்

d. துவைத்தல்

Answer: c. கட்டுதல்



16. கண்ணகி- எனும் சொல்லின் பொருள் (2014 G4)

a. கடும் சொற்களைப் பேசுபவள்

b. கண் தானம் செய்தவள்

c. கண்களால் நகுபவள்

d. கண் தானம் பெற்றவள்

Answer: c. கண்களால் நகுபவள்



17. சதகம் என்பது--------பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும் (2014 G4)

a. ஐம்பது

b. நூறு

c. ஆயிரம்

d. பத்தாயிரம்

Answer: b. நூறு



18. வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள் (2014 G4)

a. நிலம்

b. மலை

c. காடு

d. நாடு

Answer: b. மலை



19. முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை - இதில் மகடூஉ என்பது------- (2014 G4)

a. மகள்

b. மகன்

c. பெண்

d. ஆண்

Answer: c. பெண்



20. பொருத்துக - சரியான விடையைத் தேர்ந்தெடு (2014 G4)

(a) விசும்பு 1. தந்தம்

(b) மருப்பு 2. வானம்

(c) கனல் 3.யானை

(d) களிறு 4. நெருப்பு

a. 2 1 4 3

b. 3 2 1 4

c. 1 3 4 2

d. 4 3 2 1

Answer: a. 2 1 4 3



21. பொருள் தேர்க.

அங்காப்பு - என்பது (2014 G4)

a. வாயைப் பிளத்தல்

b. அங்கம் காப்பு

c. அகம் காத்தல்

d. வாயைத் திறத்தல்

Answer: d. வாயைத் திறத்தல்



22. பட்டியல் I ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க. (2013 G4)

(a) புள் 1.விரைவு

(b) குலவு 2.கலப்பை

(c) மேழி 3.அன்னம்

(d) ஒல்லை 4.விளங்கும்

a. 2 4 1 3

b. 4 1 2 3

c. 3 1 4 2

d. 3 4 2 1

Answer: d. 3 4 2 1



23. சரியான பொருள் தருக (2013 G4)

இந்து

a. நிலவு

b. துன்பம்

c. படகு

d. தலைவன்

Answer: a. நிலவு



24. பொருத்துக : (2013 VAO)

சொல் - பொருள்

(a) களபம் - 1. அம்பு

(b) புயம் - 2. பெயர்

(c) நாமம் - 3. சந்தனம்

(d) பகழி - 4. தோள்

(A) 1 2 3 4

(B) 2 3 4 1

(C) 3 4 2 1

(D) 4 2 1 3

Answer: (C) 3 4 2 1



25. ‘பாம்பு’ என்னும் பொருளைத் தராத சொல்லைத் தேர்வு செய்க. (2013 VAO)

(A) பாந்தள்

(B) முழை

(C) உரகம்

(D) பன்னகம்

Answer: (B) முழை



26. பொருத்துக : (2013 VAO)

சொல் - பொருள்

(a) கேசரி - 1. துன்பம்

(b) பூதரம் - 2. குடை

(c) கவிகை - 3. மலை

(d) இடர் - 4. சிங்கம்

(A) 4 2 3 1

(B) 1 3 2 4

(C) 4 3 2 1

(D) 2 1 4 3

Answer: (C) 4 3 2 1



27. ‘சலவர்’ என்னும் சொல்லிற்கு உரிய பொருள் (2013 VAO)

(A) தூய்மையானவர்

(B) வஞ்சகர்

(C) மென்மையானவர்

(D) கடுமையானவர்

Answer: (B) வஞ்சகர்



28. கடலைக் குறிக்காதச் சொல்லைக் கண்டறிக : (2013 VAO)

(A) பௌவம்

(B) புணை

(C) புணரி

(D) பரவை

Answer: (B) புணை



29. பொருந்தா இணையைக் கண்டறிக : (2013 VAO)

(A) நூல் - வரை

(B) தாள் - வணங்கு

(C) களை - பறி

(D) நார் - கிழி

Answer: (A) நூல் - வரை



30. சொல் - பொருள் (2014 VAO)

(a) கலாபம் - 1. கிளி

(b) விவேகன் - 2. பொய்கை

(c) வாவி - 3. ஞானி

(d) அஞ்சுகம் - 4. தோகை

(A) 4 3 2 1

(B) 4 2 3 1

(C) 4 2 1 3

(D) 3 4 2 1

Answer: (A) 4 3 2 1


31. சொல்லுக்கேற்ற பொருளை பொருத்துக :(2014 VAO)

(a) அம்பி - 1. குஞ்சி

(b) அல் - 2. பறை

(c) துடி - 3. இருள்

(d) தலைமூடி - 4. படகு

(A) 4 3 2 1

(B) 1 2 3 4

(C) 2 3 4 1

(D) 3 4 1 2

Answer: (A) 4 3 2 1



32. பொருந்தாததைச் சுட்டுக. (2014 VAO)

(A) வாதம்

(B) ஏமம்

(C) பித்தம்

(D) சீதம்

Answer: (B) ஏமம்



33. ‘பீலிபெய் சாகாடும்’ என்பதில் ‘சாகாடு’ என்ற சொல்லின் பொருள் (2016 VAO)

(A) சுடுகாடு

(B) வண்டி

(C) மண்டி

(D) இடுகாடு

Answer: (B) வண்டி



34. ‘நவ்வி’ எனும் சொல்லின் பொருள் (2016 VAO)

(A) மான்

(B) நாய்

(C) நரி

(D) செந்நாய்

Answer: (A) மான்