தற்செயல் விடுப்பு விதிகள் / Casual Leave Rules in Tamil
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு விண்ணப்பப் படிவம் மற்றும் தற்செயல் விடுப்பு எடுப்பதற்கான விதிகள் தமிழில்தற்செயல் விடுப்பு விதிகள் / Casual Leave Rules in Tamil :
1 ) ஒரு ஆண்டுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும் . தற்செயல் விடுப்பை அரசு விடுமுறைகள் , ஈடு செய் விடுப்பு முதலியவற்றுடன் இனைத்தும் எடுக்கலாம் . ஆனால் ஒரே நேரத்தில் எடுக்கும் மொத்த விடுப்பு பத்து நாட்களுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் . ( அடிப்படை விதியின் இணைப்பு VII இருப்பினும் 11 வது / 12 வது நாள் எதிர்பாராத விதமாக அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டால் பத்து நாட்களுக்கு மேலும் தற்செயல் விடுப்பு அனுபவிக்கலாம் . ( அ.ஆ. எண் . 309 , நிர்வாகத்துறை , நாள் 16.8.93 )
2 ) முன்னரே ஒப்புதல் பெறும் தற்செயல் விடுப்புக்கான விண்ணப்பத்தில் விடுப்பிற்கான காரணம் குறிப்பிடத் தேவையில்லை - ( அரசாணை எண் 1410 , நிர்வாகத்துறை நாள் 2.12.1997 )
3 ) தற்காலிகப் பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு இரண்டு மாதங்களுக்கு மூன்று நாட்கள் என்ற அளவில் ( மொத்தத்தில் 12 நாட்களுக்கு அதிகமாகாமல் ) இவ்விடுப்பு வழங்கப்படும் .
4 ) கணக்கில் தற்செயல் விடுப்பு இல்லாதவருக்கு முன் அனுமதியுடன் ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் - ( அடிப்படை விதி 67 ன் துணை விதி ( 3 ) .
5 ) 30 நாள் பணி முடித்த சில்லரைச் செலவின ஊழியர்களுக்கும் தற்செயல் விடுப்பு வழங்கப்படும் - ( அரசாணை எண் 1180. நிர்வாகத்துறை நாள் , 15.12.1986 )
6 ) சமீபத்தில் ஓய்வு பெற இருப்பவர்களுக்கு பணிக்காலத்தைக் கணக்கிடாமல் தற்செயல் விடுப்பு வழங்கலாம் . உதாரணமாக ஜனவரியில் ஓய்வு பெறும் ஒருவருக்கு அந்த ஆண்டுக்குரிய 12 நாள் தற்செயல் விடுப்பு வழங்கலாம் - ( அரசு கூ.எண் .61559 / 82-4 , நிர்வாகத் துறை , நாள் 17.1.1983 )
7 ) இரவு காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்கலாம் - ( அரசு க.எண் . 22402 / பணி எண் 93-1 , நிர்வாகத்துறை , நாள் 4.5.93 )