தன் மீது அரசு வாங்கிய கடனை திருப்பி அடைத்த திருச்சி இளைஞர் - நன்றி கூறிய நிதித்துறை!
தமிழக அரசின் கடனை அடைக்க சவூதி அரேபியாவில் இருந்து பொறியாளர் ஒருவர் 90 ஆயிரத்து 558 ரூபாயை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் கொப்பம்பட்டியை சேர்ந்த சின்னராஜா செல்லதுரை, சுவுதியில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவர், தமிழக அரசின் கடனை அடைக்க, ஒவ்வொருவர் மீதும் உள்ள 90 ஆயிரத்து 558 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். 6 மாதங்களாக சேர்த்து வைத்து அனுப்பியதாக சின்னராஜா செல்லதுரை தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, தமிழக நிதித்துறை இணை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.