Ads

மலையும் எதிரொலியும் | 4th Std Tamil - Term 3 | Lesson 6 - Book Back Question And Answers

மலையும் எதிரொலியும் | 4th Std Tamil - Term 3 | Lesson 6 - Book Back Question And Answers


விடுகதைக்குரிய சரியான படத்தைத் தேர்ந்தெடுப்போமா?

Question 1.
வட்டமாய் இருந்திடுவேன் உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்ணுவதில்லை. நான் யார்? 

Answer:
தட்டு



Question 2.
உயரமாய் இருந்திடுவேன்; பச்சை ஆடை உடுத்தியிருப்பேன்; குளிர்ச்சியான தண்ணீரைக் கொட்டுவேன். நான் யார்?



Answer:

மலை

Question 3.
நீல நிறமாய்த் தோன்றிடுவேன். ஓயாமல் அலைந்திடுவேன். தவழ்ந்து தவழ்ந்து வந்திடுவேன். நான் யார்?

Answer:
கடல்

Question 4.
நீ பார்த்தால் நானும் பார்ப்பேன். நீ சிரித்தால் நானும் சிரிப்பேன். நீ செய்தால் நானும் செய்வேன். நான் யார்?


விடை:
கண்ணாடி

Question 5.
தரையிலே ஊர்ந்திடுவேன். வானத்திலே பறந்திடுவேன். கடலைத் தாண்டிடுவேன். மக்களைச் சுமந்து செல்வேன். நான் யார்?

 

Answer:
விமானம்


குறிப்புகளைப் படி, விடையைக் கண்டுபிடி


Answer



அறிந்து கொள்வோம்

உலகின் மிக உயரமான சிகரம். – இமயமலையில் உள்ள எவரெஸ்ட்
தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் – ஆனைமலையிலுள்ள ஆனைமுடி
எழுவாய், பயனிலை அறிவோமா?
கீழ்க்காணும் தொடர்களில் எழுவாயைக் கண்டறிந்து வட்டமிடுக


 

Answer

 


கீழ்க்காணும் தொடர்களைப் பயனிலைகளுக்கேற்றவாறு அட்டவணைப்படுத்துக.
1. அவர் சிறந்த மருத்துவர்.
2. என்னை அழைத்தவர் யார்?
3. அருளரசன் நல்ல மாணவன்
4. நேற்று அழகன் ஊருக்குச் சென்றான்.
5. முக்கனிகள் யாவை?
6. புலி உறுமியது.


 Answer


 

நிரப்புக :

1. தந்தையும் மகனும் ………………. பகுதியில் நடந்து சென்றனர்.
2. நம்முடைய ………………. எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று என்று தந்தை கூறினார்.
3. தந்தை மலையிடம் ………………. என்றார்.
4. தந்தை மகனிடம் ………………. வளர்த்துக் கொள்” என்றார்.
5. நாம் செய்கின்ற செயல்களே ………………. ‘விளைவிக்கின்றன.
Answer:
1. தந்தையும் மகனும் மலைப் பகுதியில் நடந்து சென்றனர்.
2. நம்முடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்றன்று என்று தந்தை கூறினார்.
3. தந்தை மலையிடம் “நீ வெற்றி வீரன்” என்றார்.
4. தந்தை மகனிடம் “திறமையை வளர்த்துக் கொள்” என்றார்.
5. நாம் செய்கின்ற செயல்களே நன்மையையும், தீமையையும் ‘விளைவிக்கின்றன.