Team Visit - எதை எதை ஆய்வு செய்யப்படும்? - பட்டியல் - மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு - CEO Proceedings

Team Visit - எதை எதை ஆய்வு செய்யப்படும்? - பட்டியல் - மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு - CEO Proceedings


சிவகங்கை மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், பள்ளித் துணை ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளையும் ஒன்றிய வாரியாக 21.11.2022 முதல் குழு ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொருவாரமும் குறிப்பிட்ட ஒரு நாளில் நடத்தப்படும். 

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் பள்ளி வளாகத் தூய்மை கழிவறை தூய்மை வகுப்பறை தூய்மை, குடிநீர் வசதி, பதிவேடுகள் பராமரிப்பு, EMIS பதிவுகள் உள்ளிட்ட இணைப்பில் காணும் அட்டவணையில் உள்ள அனைத்து செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதால் அனைத்து தலைமை ஆசிரியர்களும் இச்செயல்பாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குழு ஆய்வு நடைபெறும் பள்ளிகள் விபரங்கள் ஆய்வு உறுப்பினர்களுக்கு அன்றைய தினம் காலை 7 மணிக்கு தெரிவிக்கப்படும். குழு ஆய்வு நடைபெறும் பள்ளிகளுக்கு ஒன்றிய தலைமையிடம் அல்லது அருகில் உள்ள பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மற்றும் குழு ஆய்வு அலுவலர்கள் கலந்து கொள்ளும் வகையில் மீளாய்வுக் கூட்டம் நடைபெறும்.