'சம வேலைக்கு, சம ஊதியம்' கோரி - வரும் 27ம் தேதி முதல் ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு !
ஊதிய உயர்வு கோரி, வரும் 27ம் தேதியில் இருந்து, தொடர் போராட்டம் நடத்தப்படும் என, அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கத்தின், மாநில பொது செயலர் ராபர்ட் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஏற்கனவே பணியாற்றும் மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கவில்லை.
எனவே, 'சம வேலைக்கு, சம ஊதியம்' என்ற கோரிக்கைக்காக தொடர்ந்து, அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது, மத்திய அரசின் துப்புரவு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் தான், எங்களுக்கும், வழங்கப்படுகிறது. மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவதை விட, எங்களுக்கு ஊதியம் குறைவாக உள்ளது.
ஒரே பதவி, ஒரே பணியில் உள்ளவர்களுக்கு, சம ஊதியம் வழங்க, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
எனவே, இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 27ம் தேதி முதல், சென்னையில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
__________________________________________________________
__________________________________________________________
SSTA-2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு கல்வித்துறை உயர் அதிகாரிகளுடனான இன்றைய 06.12.2022 சந்திப்பு
📌 இன்று 06.12.2022 நமது ஒற்றை கோரிக்கையான "சம வேலைக்கு" "சம ஊதிய" கோரிக்கையை நிறைவேற்ற டிசம்பர் 27 -முதல் நடைபெறவிருக்கும் தொடர் உண்ணாவிரதம் குறித்து முறையாக அரசுக்கு தகவல் அளிக்க இன்று 06.12.2022 மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை ஆணையர், உயர்திரு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து 12 ஆண்டுகளாக தீராமல் உள்ள நமது ஒற்றை கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
📌 பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இரண்டு முறை நமது "சம வேலைக்கு" "சம ஊதிய "கோரிக்கை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதித்துறைக்கு அனுப்பினோம் ஆனால் நிதி சார்ந்த அனைத்தும் திருப்பப்பட்டது,நிதி சார்ந்த பிரச்சனை என்பதால் தாமதமாகிறது உங்கள் நிலையை கூறி தற்போது மீண்டும் முயற்சிக்கிறோம் என கூறினர்.
📌 நம்மால் ஆன அனைத்து வழிகளிலும் முயன்றால் தான் நமது ஒற்றை கோரிக்கை நிறைவேறும். நமது போராட்டம் அரசை எதிர்த்து அல்ல மாண்புமிகு சமூக நீதி காக்கும் தமிழக முதல்வர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அகிம்சை வழியிலான அறவழிப் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டால் கண்டிப்பாக 100% எதிர்வரும் ஏப்ரல் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் முடிந்து விடும்.
📌🤔 இந்தக் கோரிக்கை தவறானது, இது முற்றிலும் வாய்ப்பே இல்லை என்று கூறியவர்கள் மத்தியில் இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது ஆளும் அரசின் தேர்தல் அறிக்கையில் வர வைத்து நிறைவேற்றும் தருவாயில் கொண்டு வந்துள்ளோம்.நமது வலிமைமிக்க போராட்டங்களால் தான் இது சாத்தியமானது.இப்போதும் இதை வென்றெடுப்பது நமது கையில் மட்டுமே உள்ளது.💪🏻💪🏻💪🏻
தமிழக முதல்வர் மனது வைத்தால் மட்டுமே நமது ஒற்றை கோரிக்கை முடிக்க முடியும். நம்முடைய பிரச்சனையும், வேதனையும் நமது முதல்வருக்கு நன்றாக தெரியும். நம்மோடு இரண்டு முறை போராட்டக் களத்தில் நமக்காக குரல் கொடுத்து நம்முடைய வேதனையை தீர்க்க வேண்டுமென தோளோடு தோள் நின்றவர்,நாம் நினைவூட்டினால் கண்டிப்பாக விரைந்து ஒற்றை கோரிக்கையை முடித்துக் கொடுப்பார்.
📌 சென்ற முறையை காட்டிலும் இம்முறை நம்முடைய எண்ணிக்கை அதிகமானால் மட்டுமே நம் வெற்றி உறுதியாகும், முதல்வரின் கவனத்தையும் ஈர்க்கும்.
வெற்றியென்பதும் எளிதல்ல...!!!
அதைவிட்டு விடும் எண்ணம் நமக்கில்லை...!!!
தகவல் பகிர்வு
✍🏻✍🏻 மாநில தலைமை
SSTA-2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழு

