14 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் முற்றுகை போராட்டத்திற்கு டிட்டோஜாக் ஆதரவு தரக்கோரி - SSTA மாநிலத்தலைமை கடிதம் !

14 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து வரும் இடைநிலை ஆசிரியர்களின் தொடர் முற்றுகை போராட்டத்திற்கு டிட்டோஜாக் ஆதரவு தரக்கோரி - SSTA மாநிலத்தலைமை கடிதம் ! 







 


Click here to download pdf

மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வித்துறையிலுள்ள ஆசிரிய இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) ஒருங்கிணைப்பாளர்கள். 

 2009-க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சமவேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி 19.02.2024 முதல் நடைபெறவிருக்கும் தொடர் முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவளித்தல் சார்பாக, 

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவில் திமுக கழக ஆட்சி இருந்தபோது 01.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வஊதியம் 11,170 என்றும் 01.06.2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 8000 எனவும் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டது. "ஒரே பதவி" "ஒரே பணி" ஒரே கல்வித்தகுதி" என அனைத்தும் இருந்தபோதும் அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டது. பணி நியமனம் பெற்று பத்தாண்டுகள் தொலை தூர மாவட்டங்களில் குறைந்த வஊதியத்தில் 20,000 ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது சார்ந்து கடந்த காலங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு நமது முதல்வர் அவர்கள் இரண்டு முறை நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்து போராட்டக் களத்திலிருக்கும் பெண் ஆசிரியர்கள் பட்டினியில் மயங்கி விழுந்த வேதனையான சூழ்நிலையினை கண்டு மனதுருகி உடனடியாக இவர்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய "சம வேலைக்கு" "சம ஊதியம்' வழங்க வேண்டுமென அறிக்கையை வெளியிட்டு ஆதரவு தந்து எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கையை 311 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. எங்களோடு பணியில் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்று வருகிறார்கள். தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்களுக்கு மேலாகியும் பல முறை முயன்றும் தேர்தல் அறிக்கை-311ல் இடம் பெற்றுள்ள எங்களது ஒற்றைக் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த ஊதிய முரண்பாட்டை களைய மாண்புமிகு முதல்வர் அவர்களால் 01.01.2023 புத்தாண்டில் மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைக்கும் போது மூன்றே மாதத்தில் குழுவின் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து காலதாமதம் ஆவதால் கடந்த, 2023-செப்டம்பர் மாதம் பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் எங்களது இயக்கத்தின் சார்பாக மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெ அக்டோபர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற மாண்புமிகு கல்வி அமை செய்தியாளர்கள் சந்திப்பில் மூன்று மாதத்தில் அதற்கென அமைக்கப்பட்ட கு அறிக்கை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது நான்கு மாதங்கள் முடிந்து ஐந்தாவது மாதத்திலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள "சமவேலைக்கு" "சம ஊதியத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென 19.02.2024 முதல் பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்திட உள்ளோம்.

திமுக தேர்தல் அறிக்கையிலும் எங்கள் கோரிக்கையை 311 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. எங்களோடு பணியில் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்று வருகிறார்கள். தற்போது திமுக ஆட்சிக்கு வந்து 30 மாதங்களுக்கு மேலாகியும் பல முறை முயன்றும் தேர்தல் அறிக்கை- 311ல் இடம் பெற்றுள்ள எங்களது ஒற்றைக் கோரிக்கை நிறைவேறவில்லை. இந்த ஊதிய முரண்பாட்டை களைய மாண்புமிகு முதல்வர் அவர்களால் 01.01.2023 புத்தாண்டில் மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைக்கும் போது மூன்றே மாதத்தில் குழுவின் அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து காலதாமதம் ஆவதால் கடந்த 2023-செப்டம்பர் மாதம் பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற மாண்புமிகு கல்வி அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் மூன்று மாதத்தில் அதற்கென அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது நான்கு மாதங்கள் முடிந்து ஐந்தாவது மாதத்திலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஓய்வு பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள "சமவேலைக்கு" "சம ஊதியத்தினை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென 19.02.2024 முதல் பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்திட உள்ளோம். அனைத்து இயக்கங்களும் ஒவ்வொரு விதமான கருத்துக்களையும் போராட்ட வடிவங்களையும் முன்னெடுத்து வருவது அனைவரும் அறிந்ததே. அதில் ஒவ்வொருவருக்கும் சில கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அனைவரும் போராடுவது ஆசிரியர் இனத்திற்கானது என்ற நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே அமைகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு கருத்துக்களில் முரண்பாட்டாலும் ஆசிரியர்கள் பொதுவாக பாதிக்கப்படும்போது அதற்காக ஒருவரை ஒருவர் ஆதரிப்பது என்பது இயக்க நடைமுறையாகும். எனவே இது ஒரு தனிப்பட்ட இயக்கம் நடத்தும் போராட்டம் என்றில்லாமல் ஒட்டுமொத்தமாக இடைநிலை ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து நடைபெறவிருக்கும் போராட்டம் ஆகும். மேலும் பாதிக்கப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர்களும் தொடக்க கல்வித் துறையில் உள்ள அனைத்து இயக்கங்களிலும் உறுப்பினராக உள்ளார்கள். எனவே நடைபெறவிருக்கும் இந்த தொடர் போராட்டத்திற்கு தங்களது இயக்கத்தின் சார்பாக முழு ஆதரவை வழங்கிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம். 2019- ஜனவரி ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தில் கடைசி நாளில் அனைவரையும் அப்போதிருந்த அரசு கைது செய்யும் போது எங்களது கோரிக்கை இல்லாவிட்டாலும் எங்களது இயக்கத்தை முழுமையாக ஈடுபடுத்தி அதில் எங்கள் இயக்கத்தை சேர்ந்த 73 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்ததையும் நினைவு கூறுகிறோம். மேலும் எங்களுடைய மாநில துணைச் தலைவர் அதில் பாதிக்கப்பட்டு தற்போதும் அதே நிலையிலேயே இருந்து வருகிறார் என்பதையும் இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். எங்களுடைய மாதாந்திர வாழ்வாதாரப் பிரச்சினை "சம வேலைக்கு "சம ஊதிய" பிரச்சினை முடிந்தவுடன் எங்களுடைய ஓய்வூதிய கால பிரச்சனையான சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்தல் மற்றும் தொடக்கக்கல்வித்துறை எதிர்நோக்கும் அனைத்து பிரச்சனைகளிலும் ஒற்றுமையாக இணைந்து பயணிப்போம் என்பதை கூறிக் கொள்கிறோம்.