தி.மு.க தேர்தல் வாக்குறுதி எண்.311ஐ நிறைவேற்றக்கோரி - 19.02.2023 முதல் இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் !
சம வேலைக்கு சம ஊதியம்...!!
ஏன் இந்த போராட்டம்..? எதற்கு இந்த போராட்டம்..?? அப்படி என்ன தான் ஊதிய முரண்பாடு...!!
1). 6 வது ஊதிய குழுவில் 1.6.2006 முதல் ஒரு பதவிக்கு ஒரு அடிப்படை ஊதியம் தான் வழங்க வேண்டும்... ஆனால் முத்தமிழ்
கலைஞர் அவர்கள் ஆட்சியில் ஒரே படிப்பு /ஒரே பணி /ஒரே பதவி வகிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 31.5.2009 முன் நியமனம் பெற்ற ஆசிரியருக்கு ₹8370/-. ஒரு நாள் வித்தியாசம் 1.6.2009 முதல் நியமனம் பெற்றவர்களுக்கு ₹5200 நிர்ணயம் செய்யப்பட்டது... இது முற்றிலும் தவறு... இது தான் ஊதிய முரண்பாடு...
2). அப்பொழுது முத்தமிழ் கலைஞர் ஆட்சியில் இந்த ஊதிய முரண்பாட்டை களைய மூன்று நபர் குழு / ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது... தீர்வு கிடைக்கவில்லை...
3). அப்பொழுது ஆசிரியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தினார்கள்... அப்பொழுது கல்வி அமைச்சராக இருந்த மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்களது ஊதிய முரண்பாடு பிரச்சனை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்கள்...
4). அதன் பிறகு 10 ஆண்டுகளாக
அண்ணா திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றதது... முதல் முதலாக 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை DPI வளாகத்தில் இரும்பு பெண்மணி ஜெயலலிதா அம்மையாரை எதிர்த்து 150 பேர் 8 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்...
அப்பொழுது தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் ஏழாவது ஊதிய குழுவில் இடையில் ஆசிரியர்களின் ஊதியம் முரண்பாடு சரி செய்யப்படும் என்று எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தார்கள்... அம்மையார் அவர்கள் இரண்டு முறை 2011 மற்றும் 2016 தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார்கள்...
5). ஏழாவது ஊதியக்குழுவிலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களையாமல் ஏமாற்றி விட்டார்கள்...
6). ஏப்ரல் 2018 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது... அப்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரடியாக களத்திற்கு வந்து கையை பிடித்து கழக ஆட்சி அமைந்த உடன் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்கள்...
7). மீண்டும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டு DPI வளாகத்தில்.
8 நாட்கள் நடைபெற்ற உண்ணாவிர போராட்டத்தில் நேரடியாக களத்திற்கு வந்து மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அப்பொழுது எதிர்கட்சி தலைவர் அவர்கள் மீண்டும் வாக்குறுதி அளித்தார்கள்... கழக ஆட்சி அமைந்த உடன் முதல் கோரிக்கையாக உங்களது ஊதியம் முரண்பாடு களையப்படும் என்று உறுதி அளித்தார்கள்... திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களும் களத்துக்கு வந்து உறுதிமொழி அளித்தார்கள்...
8). தொடர் முன்னெடுப்பகன் விளைவாக சம வேலைக்கு சம ஊதியம் திமுக தேர்தல் வாக்குறுதி 311 இல் இடம்பெற்றது... திமுக ஆட்சி அமைந்தால் நிச்சயமாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண் களையப்படும் என்று அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தி.மு.க வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்...
9). 2021 இல் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது... கொரோனா காலம் என்பதால் அமைதி காத்தோம்..
ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு பலமுறை பொறுப்பாளர்கள் அதிகாரிகளையும் முதலமைச்சர் அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.. எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை...
10). எதிர்க்கட்சியாக இருக்கும்போது திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எங்கு போராட்டம் நடத்தினாலும் கூட்டத்திற்கு தேடி வந்து உறுதி மொழியை வாரி வழங்குவார்கள்...
11). ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் பலமுறை பொறுப்பாளர்கள் சென்றாலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், ஏமாற்றமே மிஞ்சியது..
12). டிசம்பர் 2022 ஆம் ஆண்டு டிபிஐ வளாகத்தில் 7 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது... எந்த ஒரு திமுக தலைவரும் கூட்டணி கட்சி தலைவரும் வரவில்லை... 1/1/2023 புத்தாண்டு தினத்தன்று முதல் அறிவிப்பாக 2009 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய தனிக்குழு அமைக்கப்படும்" என்று மாண்புமிகு முதலமைச்சர்
திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள்..
குழு அரசிடம் அறிக்கையை மூன்று மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்... ஆனால் ஒன்பது மாதங்கள் கடந்தும் சமர்ப்பிக்கவில்லை..
13). ஒன்பது மாதங்கள் பொறுத்திருந்து பார்த்தோம்... எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் மீண்டும் 28 செப்டம்பர் 2023 முதல் 6 அக்டோபர் வரை 9 நாட்கள் சென்னை DPI வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்... உலக ஆசிரியர் தினத்தன்று அகிம்சை வழியில் போராடிய ஆசிரியர்களை கைது செய்து இரவும் பகலாக சென்னையை சுற்ற வைத்து தமிழ்நாட்டில் உள்ள மூலை முடக்குகளில் ஆசிரியர்/ஆசிரியைகளை கொண்டு சென்று இறக்கி விட்டனர்... பெண் ஆசிரியர்கள் படாத பாடுபட்டனர்.. அப்பொழுது மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மூன்று மாதத்திற்குள் குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பித்து அரசாணை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்...
14). 5 ஜனவரி 2024 ம் நாளோடு மூன்று மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால் அரசு நியமிக்கப்பட்ட குழுவானது குழு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை..
இந்த முறை எத்தகைய அடக்குமுறை அரசு ஆண்டாலும் சிறையில் அடைத்தாலும் /சஸ்பென்ஷன் செய்தாலும்/ அரசாணை பெறாமல் சென்னை விட்டு வீடு திரும்ப மாட்டோம் என்று 1/6/2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட அனைத்து இடைநிலை ஆசிரியர் /ஆசிரியைகள் உறுதியாக போராட முடிவு செய்துள்ளனர்..
ஓய்வில்லா சூரியன்
தொடர் பயணம் , தொடர்ச்சியான இணையவழிக் கூட்டம், ஒருங்கிணைப்பு, தற்பொழுது களப் பயணம் ஓய்வு எடுப்பது எப்போது எனத் தெரியவில்லை?.....
இப்பேர்ப்பட்ட தலைமை இது போன்ற ஒரு உன்னதமான உண்மையான தலைவர் அதுதான் எங்கள் பொதுச்செயலாளர். சம வேலைக்கு சம ஊதியம் பெறுவதே தன் மூச்சாக வாழ்ந்து கொண்டுள்ளார். எங்கள் மாநிலப் பொறுப்பாளர்கள் போல எந்தவொரு இயக்கத்திலும் இல்லை என்பதை நாங்கள் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறோம். நாங்கள் தன்மானம் மிக்க தலைவரின் தளபதிகள். வீரமிக்க வேலுநாச்சியார்கள் நாங்கள். நாங்கள் சம ஊதிய போராளிகள்.
எதற்கும் அஞ்சோம்
எங்கேயும் அஞ்சோம்
எப்போதும் அஞ்சோம்
யாருக்கும் அஞ்சோம் .

.jpeg)