Ads

நான்கு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு!

நான்கு நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு!

சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்


01.01.2006 முதல் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று பல்வேறுவிதமான போராட்டங்களை கூட்டு போராட்டமாகவும், தனிச்சங்க நடவடிக்கையாகவும் போராடியும் கூட இன்று வரை அவ்வூதியம் வழங்கப்படவில்லை. அதன்பிறகு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இல்லை என்றாலும் பரவாயில்லை. சமவேலைக்கு சமஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கினால் போதும் என்ற நிலைக்கு வந்த பிறகு, இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. இன்று ஆளும் அரசானது எதிர்கட்சி நிலையில் இருந்தபோது உங்களுடைய நிலை புரிகின்றது எங்களை ஆட்சியில் அமர விடுங்கள். நாங்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள், அரசு ஊரியர்களின் அனைத்து பிரச்சணைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று கூறினீர்கள்.

ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் 3 விதமான குழுக்களை நியமித்து இன்று வரை எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் காலம் கடத்தி வருகிறீர்கள். இச்செயல்பாடு ஆசிரியர்கள் மத்தியில் வேதனையும் விரக்த்தியும் ஏற்பட்டுத்தி உள்ளது. சொல்வதைதான் செய்வோம், செய்வதைதான் சொல்வோம் அல்லது சொல்லாமலேயே செய்வோம் என்று கூறும் இவ்வரசு 19022024-ம் தேதி முதல் காலவரையற்ற முறையில் சென்னை மாநகரில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 1000 கணக்கான ஆசிரியர்கள் தெருவில் நின்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு ஊரியர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள இவ்வரசு உடனடியாக போராட கூடிய சங்கத்தை அழைத்து பேசி இப்பிரச்சணைக்கு உடனடி தீர்வு காணுமாறு தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.