Ads

டிட்டோ-ஜாக்கில் உள்ள அனைத்து சங்கத் தலைவர்களுக்கும் இடைநிலை ஆசிரியரின் வேண்டுகோள் பதிவு!

டிட்டோ-ஜாக்கில் உள்ள அனைத்து சங்கத் தலைவர்களுக்கும் இடைநிலை ஆசிரியரின் வேண்டுகோள் பதிவு!

நான் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.

2009 க்குப்பின் பணியில் சேர்ந்த ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் அனைத்து சங்கங்களிலும் தான் உள்ளனர்.

ஒவ்வொரு முறையும் ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தும் பொழுதும் ஏன் கண்டும் காணாமலும் ஒரு அறிக்கையோடு ஒதுங்கிக் கொள்கிறீர்கள்.

 *ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒவ்வொரு சங்கங்களிலும் குறைந்த அளவிலான உறுப்பினர்களாவது கண்டிப்பாக இருக்கின்றனர்.* 

அவர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள். 

ஊதிய முரண்பட்டால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நம் சங்கத்தில் குறைவாகத்தான் உள்ளனர் .அவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று அவர்களை ஒதுக்கி விட்டு விட்டீர்களா?

ஏன் இந்த அலட்சியம்?

 *அடுத்ததாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப போகிறார்கள்.* 

அவர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக இணையத் தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா?

ஏன் இந்த அலட்சியம்?

 *ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நம் முன்னோர்கள் பல வருடங்களாக போராடிப் பெற்றுத் தந்த பலன்களை தான் இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.* 

 அப்படி ஏதாவது கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக பெற்றுத் தந்த உரிமைகளைப் பற்றிக் கூற முடியுமா?

இல்லவே இல்லை.

ஒரு பக்கம் அரசியல் காரணங்களுக்காக அரசியல்வாதிகள் சங்கத்தை உடைத்து நமக்குள் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்.

இன்னொரு பக்கம் நமக்குள் ஒற்றுமை இல்லாததால் நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறோம்.

 *இனியும் காலம் தாழ்த்தாது என்னுடைய சக ஆசிரியர் பாதிக்கப்படுகிறார் என்ற உன்னத நோக்கத்தோடு அனைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களும் போராட்டக் களத்தில் தோளோடு தோள்கொடுப்பதே ஆசிரியர்களுக்கு அழகு.* 

ஒன்றுபட்ட போராட்டமே வென்று காட்டும்.