Ads

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வெற்றி பெற ஆதரவுக்கரம் நீட்டுகிறோம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு அறிக்கை வெளியீடு!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வெற்றி பெற ஆதரவுக்கரம் நீட்டுகிறோம் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு அறிக்கை வெளியீடு!


இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வெற்றி பெற்று கோரிக்கைகள் நிறைவேறட்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு கரம் நீட்டுகிறது.

மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொள்கை முடிவாக அறிவித்து 1988 முதல் போராட்டங்களை நடத்தி இரண்டு ஊதிய குழுவில் இணையான ஊதியத்தை பெற்று தந்தது. அதன் பிறகு ஏழாவது ஊதியக்குழுவை தமிழக அரசு அமல்படுத்துகின்ற நிலையில் ஊதிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இணையான ஊதியத்தை தமிழக அரசும் வழங்க வேண்டும் என கூட்டணி தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்புக்கு தாமதம் ஏற்படுவதால், முன்னேற்பாடாக இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரி வருகின்றனர். இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கையை முன்வைத்து போராடி வருகிறது. இதனை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனி சங்க நடவடிக்கையாகவும். டிட்டோஜாக் அமைப்புடன் இணைந்தும். தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகிறது.

மேலும், இந்த கோரிக்கையை பிரத்தியேகமாக முன்வைத்து இடைநிலை ஆசிரியர்கள் தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில்







இன்று (19,20,21.02.2024) போராட்டம் நடத்துகின்றனர். இது தொடர்பாக இடைநிலை ஆசிரியர்களை ஒருங்கிணைத்து வரும் சகோதரர் இராபர்ட் அவர்களும் என்னிடம் தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டுள்ளார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னெடுத்த கோரிக்கையை, முன்னுறுத்தி தனித்துவத்துடன் போராடிவரும் அன்பு தம்பிகளுக்கு என்றென்றும் ஆதரவு உண்டு. தங்களது போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தோம். அதையே மீண்டும் இந்த கடிதத்தின் மூலம் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கலையும் வகையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கொள்கை முடிவை நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் தனியாக போராடுகிறார்கள் என்று அரசு குறைத்து மதிப்பிட வேண்டாம். தனித்த கோரிக்கைகளுக்காக போராடுகிறார்களே தவிர ஒட்டுமொத்த ஆசிரியர்களின் உணர்வுகளையும் ஒருங்கிணைத்து களம் காண்கிறார்கள். இவர்களின் போராட்டத்திற்காக ஆதரவு தெரிவித்து உரிய முறையில் களமிறங்க தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தயாராக இருக்கிறது.

இதை உணர்ந்து தமிழக அரசு உரிய தீர்வுகளை, இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும். வழக்கமாக அரசுகள் மேற்கொள்ளும் அடக்குமுறைகளை கையாளாமல், உணர்வு பூர்வமாக நடைபெறும் உரிமைப் போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தீவிர போராட்டத்தை முன்னெடுத்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும். அவர்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள சகோதரர் இராபர்ட் அவர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். போராடுவோம்! வெற்றி பெறுவோம்!!

வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!!! வாழ்த்துகள்.