Ads

சமவேலைக்கு சமஊதியம் போராட்டம் - இடைநிலை ஆசிரியர்களின் மனவலிமைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

சமவேலைக்கு சமஊதியம் போராட்டம் - இடைநிலை ஆசிரியர்களின் மனவலிமைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்!

காலம் கடத்தினால் போராட்டம் நீர்த்துப்போகும் என்று ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

வியாழன், வெள்ளி கடந்துவிட்டால் சனி, ஞாயிறு விடுமுறையில் போராட்டம் இருக்காது. மீண்டும் திங்கள் அன்று அனைவரும் போராட்டத்திற்கு வரமாட்டார்கள். மனச்சோர்வுற்று பின் தங்கிவிடுவார்கள் என்று கருதுகிறார்கள். 

இது நம்முடைய மனவலிமைக்கு ஆட்சியாளர்கள் விடுத்துள்ள சவால்! 

ஆனால் ஆட்சியாளர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள்.

இலட்சிய உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நாம் ஒருபோதும் மனச்சோர்வு அடைய மாட்டோம் என்பதை ஆட்சியாளர்களுக்கு புரியவைக்க வேண்டும்!.

போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த இன்றுமுதல் உண்ணாவிரதத்துடன் கூடிய முற்றுகையை மாநில தலைமை அறிவித்துள்ளது. 

அரசுக்கு மேலும் அரசியல் ரீதியான அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும்!

அதற்கு இன்னும் வலிமையான போரட்ட வியூகங்களை வகுக்க வேண்டும்! 

மாநில தலைமை அதற்கான வேலையை தொடங்கிவிட்டது!

ஆசிரியர்கள் செய்யவேண்டியது எத்தகைய பூச்சாண்டிகள் காட்டினாலும் நம்முடைய மனவலிமையை சிறிதும் இழக்காமல் ஒற்றுமையாக களம் காண்பது மட்டுமே!

நாம் ஊதிய உயர்வுக்காக போராடவில்லை.!

ஊதிய சமத்துவம் என்னும் உயர்ந்த நோக்கத்திற்காக போராடுகிறோம்!

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக போராடுகிறோம்!

இந்த 21ம் நூற்றாண்டிலும் சக மனிதனிடம் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிராக போராடுகிறோம்! 

சமத்துவத்திற்கான போராட்டம் எப்போதும் தோற்றதில்லை. நாம் நிச்சயம் வெல்வோம்!

எவ்வளவு நாள் ஆனாலும் எத்தகைய பூச்சாண்டிகள் காட்டினாலும் நம்முடைய மனவலிமையை சிறிதும் இழக்காமல் இறுதிவரை உறுதியோடு போராடுவோம்!

இறுதி வெற்றி நமதே!

#சமவேலைக்கு_சமஊதியம்