டிட்டோ-ஜாக் போராட்டம் - ஆசிரியர்களை கைது செய்வதை விடுத்து, அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் - SSTA அறிக்கை !!

டிட்டோ-ஜாக் போராட்டம் - ஆசிரியர்களை கைது செய்வதை விடுத்து, அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் - SSTA அறிக்கை !!



தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.போராடிவரும் டிட்டோஜாக் மாநில பொறுப்பாளர்களை அழைத்து பேசி சமூக தீர்வு காண வேண்டுமென SSTA அமைப்பு வலியுறுத்தல்.

தமிழக அரசு தேர்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் சமூகநீதி காத்திடும் தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல்காலத்தில் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எண் 311- இடைநிலை ஆசியர் ஊதிய முரண்பாடுகள் களையப்படும், தேர்தல் வாக்குறுதி எண்: 309- பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் வாக்குறுதிகளை உடனடியாக விரைந்து நிறைவேற்ற வேண்டும். தற்போது போராடி வரும் டிட்டோ-ஜாக் அமைப்பின் கோரிக்கைகளில் பிரதான கோரிக்கையான தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை பெரிதும் பாதிக்கக்கூடிய ஊதிய முரண்பாடுகள், இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவது உள்ளது. 

இதனை கருத்தில் கொண்டு அரசாணை எண்: 243-ல் மாற்றம் செய்து இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வழிவகை செய்ய வேண்டும். மேலும், கடந்த 6வது ஊதியக்குழு அமல்படுத்திய போது ஏற்பட்ட இடைநிலை ஆசியர் ஊதிய முரண்பாடுகள் தற்போது வரை நீடித்து பெரும் பாதிப்பை கொடுத்து வருகிறது. இம்முரண்பாட்டினை களைந்திட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். போராடி வரும் டிட்டோ-ஜாக் அமைப்பினரை கைது செய்வதை விடுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் அன்போடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். 

இப்படிக்கு, 
மாநில பொதுச்செயலாளர்