Ads

சென்னை உயர்நீதிமன்றத்தில் SSTA இயக்கம் சார்பாக தொடுக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய வழக்கு (Incentive Case) விவரம் !!

சென்னை உயர்நீதிமன்றத்தில் SSTA இயக்கம் சார்பாக தொடுக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய வழக்கு (Incentive Case) விவரம் !! 

சென்னை உயர்நீதிமன்றத்தில் SSTA-வின் மற்றொரு INCENTIVE வழக்கு




நமது SSTA இயக்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 10.03.2020 க்கு முன்னர் முறையாக ஆணை பெற்று ஊக்க ஊதியம் வழங்காத நபர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் 10.09.2024 அன்று இதற்கான ஆணை வழங்கப்படும் அதற்கு முன்னதாக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார்.

தற்போது நமது தரப்பில் இன்னும் சில ஆசிரியர்களை கொண்டு மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்குக்கான ஆணையும் மேற்குறிப்பிட்ட 10.09.2024 ல் வழங்கப்படும் என்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வரையறைக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் சேர்த்து அடுத்த வழக்கு தொடுக்கப்படும். இது சார்ந்த அனைத்தும் வழக்குகளும் விரைவில் நல்ல முடிவுக்கு வரும்.

எந்த ஒரு அரசாணையையும் முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என பல வழக்குகளில் நீதியரசர்கள் தீர்ப்பு அளித்துள்ளார்கள்,எனவே கண்டிப்பாக 10.03.2020 க்கு முன்னர் உயர் கல்வி பயின்றவர்களுக்கு ஊக்க ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாக உள்ளது.