Ads

TNPSC - Group2, Group2A Hall Ticket Published - Direct Link to Download

.TNPSC - Group2, Group2A Hall Ticket Published - Direct Link to Download



டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.


இதில் குரூப்-2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.



குரூப் 2 ’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.




இந்தத் தேர்வுக்கு தமிழக முழுவதுதிலும் இருந்து மொத்தமாக 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.அதன்படி, முதல்நிலை எழுத்துத் தோ்வானது செப்டம்பர் 14-ஆம் தேதியன்று நடைபெறும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்தது.


இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


எழுத்துத் தோ்வானது செப்டம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் நடைபெற உள்ளது.