Ads

வினா, விடை வகைகள், பொருள்கோள்-10th Std -Tamil - Book Back Questions and Answers

வினா, விடை வகைகள், பொருள்கோள்-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.

வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.

Answer:

“காமராசர் நகர் எங்கே இருக்கிறது?” “இந்த வழியாகச் செல்லுங்கள்.” – என்று விடையளிப்பது.

காமராசர் நகர் எங்கே இருக்கிறது? – அறியாவினா

‘இந்த வழியாகச் செல்லுங்கள் ‘ என்று விடையளிப்பது. – சுட்டுவிடை

“எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவுக்கு, “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது.

எனக்கு யார் எழுதித்தருவார்கள் என்று விடையளிப்பது. – வினா எதிர்வினாதல்

Question 2.

உரையாடலில் இடம் பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.

பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)

ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். (…………………….)

பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (…………………….)

ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (…………………….)

நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களா? மாட்டீர்களா? (…………………….)

பாமகள் : ஏன் வராமல்? (…………………..)

Answer:

பாமகள் : வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)

ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். (நேர் விடை)

பாமகள் : அப்படியா! என்ன தலைப்பு? (அறியா வினா)

ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர் விடை)

நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களா? மாட்டீர்களா? (ஐய வினா)

பாமகள் : ஏன் வராமல்? (வினா எதிர் வினாதல்)

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்ப்பு

ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக.

Answer:

அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.

Answer:

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்

எ.கா: அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

1. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

Answer:

பயன்தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

2. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

Answer:

இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

3. கல்வியே ஒருவர்க்கு உயர்வு தரும்.

Answer:

நன்னெறிக் கல்வியே உயர்வு தரும்.

4. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்.

Answer:

படைப்புத்திறன் மிக்க குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்.

மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை / கட்டுரை / சிறுகதை /கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்பு: நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் மொழிநடை வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு – சிறப்புக் கூறு – நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு : சந்தித்ததும் சிந்தித்ததும் (கதை)

நூலின் மையப்பொருள்:

வாழ்வில் ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். நாம் அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடம் என்ன என்பதே மையப்பொருள்.

மொழிநடை:

வாசகர் வாசிப்புக்கு ஏற்றநடையில் இலகுவான முறையில் ஆங்கில மேற்கோளுடன் அமைந்த நூல். தெளிந்த நீரோடையினைப் போல கதையின் சொற்றொடர்கள் பொருள் தெளிவுடன் செல்கின்றது.

வெளிப்படுத்தும் கருத்து:

நம்மை வியக்க, விம்ம செய்கின்ற வகையில் நம்மை நாமே பரிசோதனை செய்து, தூண்டும் வகையில் மனதை உருக்கும் வகையில் பதிவு செய்துள்ளார். மானுடர்கள் இன்றைய நிலையில் எப்படி வாழவேண்டும்? எத்தகைய புரிதல்கள் தேவை? தன்னம்பிக்கையும் முயற்சியும் எவ்வாறு வெற்றி தரும்? ஆகிய நற்கருத்துகளை இந்நூல் வெளிப்படுத்துகின்றது.

நூலின் நயம்:

படிக்க விறுவிறுப்பாக, படித்தவுடன் தெளிவடையும் எதுகை, மோனையோடு அமைந்துள்ளது. எளிமையான சொற்கள், எதார்த்தமான கருத்துகள், உன்னதமான நீதிகள், உணர்வான சான்றுகள், சிந்திக்க வைக்கும் உணர்ச்சிப் பெருக்கு ஆகியவை நூலின் நயத்திற்குச் சான்றாகும்.

நூலின் கட்டமைப்பு:

மங்கையர் மலரில் 50 கட்டுரைகளாக வெளிவந்த நூல். மொத்தம் 200 பக்கங்களைக் கொண்டு விஜயா பதிப்பகத்தால் பதிக்கப்பட்டது. அழகிய சிந்தனையைத் தூண்டும் அட்டைப்படம், பார்வைக்கு எளிய, சிறப்பான கட்டமைப்பு கொண்டது இந்நூல்.

சிறப்புக்கூறு:

“ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள்; உண்மை நமக்குப் புரியும்” என்கிறார் ஆசிரியர். மேலும், “தன்னம்பிக்கை இருந்தால் போதும் தரணியையே ஆளலாம்” என்ற உட்கருத்து மிகச்சிறப்பாகும்.

நூல் ஆசிரியர் :

வெ. இறையன்பு.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகளை எளிமையாகவும், தெளிவாகவும் கட்டுரையாக்கும் வல்லவர், ஐ.ஏ.எஸ். அதிகாரியும் ஆவார்.

படிவத்தை நிரப்புக

Answer:

மொழியோடு விளையாடு

புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க.

தார் போன்ற நிறமுண்டு கரியுமில்லை

பார் முழுவதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

வீட்டுக்கு வருமுன்னே வருவதைக் கூறுவேன். நான் யார்?

Answer:

காகம்

தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும்………………….. யாவும் அரசுக்கே சொந்தம் நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ………………….. நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும். (புதைத்தல் / புதையல்)

2. காட்டு விலங்குகளைச் ………………….. தடை செய்யப்பட்டுள்ளது செய்த தவறுகளைச் …………………..திருந்த உதவுகிறது. (சுட்டல் / சுடுதல்)

3. காற்றின் மெல்லிய………………….. பூக்களைத் தலையாட்ட வைக்கிறது, கைகளில் நேர்த்தியான ………………….. பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல் /தொடுதல்)

4. பசுமையான ………………….. ஐக் ………………….. கண்ணுக்கு நல்லது.(காணுதல் /காட்சி)

5. பொது வாழ்வில் ………………….. கூடாது. ………………….. இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல் / நடிப்பு)

Answer:

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம் நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர் வளத்தைக் குன்றச் செய்யும். (புதைத்தல் / புதையல்)

2. காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது. (சுட்டல் / சுடுதல்)

3. காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்ட வைக்கிறது, கைகளில் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல் /தொடுதல்)

4. பசுமையான காட்சி ஐக் காணுதல் கண்ணுக்கு நல்லது.(காணுதல் /காட்சி)

5. பொது வாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பு இல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல் / நடிப்பு)

அகராதியில் காண்க.

மன்றல் திருமணம்

அடிச் சுவடு – காலடிக்குறி

அகராதி – அகரவரிசை சொற்பொருள் நூல்

தூவல் – 1 மழை / நீர்த்துளி

மருள் – மயக்கம்

செயல் திட்டம்

“பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்” – குறித்த செயல்திட்ட வரைவு முறை ஒன்றை உருவாக்கித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துக.

Answer:

அனுப்புநர்

பத்தாம் வகுப்பு மாணவர்கள்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

சென்னை – 18.

பெறுநர்

தலைமையாசிரியர் அவர்கள்,

அரசு உயர்நிலைப்பள்ளி,

சென்னை – 18.

ஐயா,

பொருள்: பள்ளித் தூய்மை குறித்த செயல் திட்ட வரைவு ஒப்புதல் வழங்கி செயல்படுத்த

வேண்டுதல் – சார்பாக.

வணக்கம். நாங்கள் நம் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளாக நம் பள்ளியை நன்கு கவனித்து வருகிறோம். அதன் மூலம் நம் பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுகளுக்குத் தடையாக இருக்கும் காரணிகளைப் பற்றி ஆய்வு செய்து வந்தோம். அவற்றை ஒரு செயல்திட்டமாக தயாரித்து தங்கள் பார்வைக்கு அனுப்பி உள்ளோம். அதன் பரிந்துரைகளை ஆராய்ந்து அதற்கு ஒப்புதல் வழங்கி நம் பள்ளியில் செயல்படுத்தி மாணவர்களாகிய எங்கள் கல்வி நலனையும் வருங்கால தலைமுறையினரின் கல்வி நலனையும் காக்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

நன்றி

இடம் : சென்னை

நாள் : 13.03.2020

இப்படிக்கு,

அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள்.

பள்ளித் தூய்மை

நல்ல நீரும் நல்ல காற்றும் சூழலுமே வாழ்விற்கு ஆதாரம். அந்த வகையில் மாணவராகிய நாங்கள் தலைமை ஆசிரியர் ஒப்புதலோடு பின்வரும் செயல்திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.

வகுப்பறையில் உணவுக்கழிவுகளைப் போடாது இருத்தல்.

குப்பைத்தொட்டிகளை உலர வைத்துப் பயன்படுத்துதல்.

கழிப்பறைகளைத் தூய்மையாக வைத்தல்.

பாதுகாக்கப்பட்ட தூய்மையான நீரைக் குடித்தல்.

மேற்கண்ட செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி பள்ளியையும், பாரதத்தையும் தூய்மையாக்கித் தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்.

காட்சியைக் கவிதையாக்குக.

Answer:

நிற்க அதற்குத் தக

Answer:

கலைச்சொல் அறிவோம்

Emblem – சின்னம்

Thesis – ஆய்வேடு

Intellectual – அறிவாளர்

symbolism – குறியீட்டியல்

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

“இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது. …………… வினா. ‘அதோ அங்கே நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது ………………விடை

அ) ஐயவினா, வினா எதிர் வினாதல்

ஆ) அறிவினா, மறைவிடை

இ) அறியாவினா, சுட்டுவிடை

ஈ) கொளல் வினா, இனமொழி விடை

Answer:

இ) அறியாவினா, சுட்டுவிடை

குறுவினா

Question 1.

இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப்பக்கம் இருக்கிறது? இதோ.

இருக்கிறது! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

Answer:

அ) மின்விளக்கின் சொடுக்கி எந்தப்பக்கம் இருக்கிறது?

– அறியாவினா

ஆ) இதோ…. இருக்கிறதே!

– சுட்டு விடை

இ) சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

– ஐயவினா

சிறுவினா

Question 1.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

Answer:

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

இப்பாடலில் அமைந்துள்ள பொருள்கோள் ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

பொருள்கோள் இலக்கணம்:

பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்றுநீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைதல் ஆற்றுநீர்ப் பொருள்கோள்.

பொருள்கோள் விளக்கம் :

இப்பாடலில் முயற்சி செல்வத்தைத் தரும்; முயற்சி செய்யாமை வறுமையைத் தரும் என்று பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகப் பொருள் கொள்ளும் முறையில் அமைந்திருப்பதால் இது ஆற்று நீர்ப்பொருள்கோள் ஆயிற்று.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது ……………………………..

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல் வினா

Answer:

ஆ) அறியாவினா

Question 2.

பிறருக்குப் பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது ……………………………..

அ) ஏவல் வினா

ஆ) கொளல் வினா

இ) ஐய வினா

ஈ) கொடை வினா

Answer:

ஈ) கொடை வினா

Question 3.

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ……………………………..

அ) மறைவிடை

ஆ) இனமொழிவிடை

இ) நேர்விடை

ஈ) ஏவல்விடை

Answer:

ஈ) ஏவல்விடை

Question 4.

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ……………………………..

அ) உறுவது கூறல் விடை

ஆ) உற்றது உறைத்தல் விடை

இ) இனமொழி விடை

ஈ) வினா எதிர் வினாதல் விடை

Answer:

அ) உறுவது கூறல் விடை

Question 5.

உடன்பட்டுக் கூறும் விடை ……………………………..

அ) சுட்டுவிடை

ஆ) மறைவிடை

இ) நேர்விடை

ஈ) ஏவல்விடை

Answer:

இ) நேர்விடை

Question 6.

வினாவிற்கு வினாவை திரும்பக் கேட்பது ……………………………..

அ) ஏவல் விடை

ஆ) வினா எதிர்வினாதல் விடை

இ) மறைவிடை

ஈ) நேர்வினா

Answer:

ஆ) வினா எதிர்வினாதல் விடை

Question 7.

மறுத்துக் கூறும் விடை ……………………………..

அ) சுட்டு விடை

ஆ) மறைவிடை

இ) ஏவல்விடை

ஈ) நேர் விடை

Answer:

ஆ) மறைவிடை

Question 8.

ஆடத்தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத்தெரியும் என்று கூறுவது……………………………..

அ) வினாஎதிர் வினாதல்

ஆ) உற்றது உரைத்தல்

இ) உறுவது கூறல்

ஈ) இனமொழி விடை

Answer:

ஈ) இனமொழி விடை

Question 9.

ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா? என்று கூறுவது என்ன விடை?

அ) வினாஎதிர் வினாதல் விடை

ஆ) உற்றது உரைத்தல் விடை

இ) உறுவது கூறல் விடை

ஈ) இனமொழி விடை

Answer:

அ) வினாஎதிர் வினாதல் விடை

Question 10.

ஆசிரியர் மாணவனிடம் இப்பாடலின் பொருள் யாது?

அ) அறிவினா

ஆ) ஐயவினா

இ) அறியாவினா

ஈ) கொளல்வினா

Answer:

அ) அறிவினா

Question 11.

மாணவன் ஆசிரியரிடம் இப்பாடலின் பொருள் யாது என வினவுவது ……………………………..

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல்வினா

Answer:

ஆ) அறியாவினா

Question 12.

இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல்வினா

Answer:

இ) ஐயவினா

Question 13.

ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது ……………………………..

அ) அறிவினா

ஆ) அறியாவினா

இ) ஐயவினா

ஈ) ஏவல்வினா

Answer:

இ) ஐயவினா

Question 14.

வினா ……………………………..வகைப்படும்.

அ) நான்கு

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) ஏழு

Answer:

இ) ஆறு

Question 15.

‘என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுவது ……………………………..

அ) கொளல் வினா

ஆ) ஐய வினா

இ) கொடை வினா

ஈ) ஏவல் வினா

Answer:

இ) கொடை வினா

Question 16.

“வீட்டில் தக்காளி இல்லை, நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச்

சொல்வது

அ) ஐயவினா

ஆ) அறியாவினா

இ) கொளல் வினா

ஈ) ஏவல் வினா

Answer:

ஈ) ஏவல் வினா

Question 17.

விடை …………………………….. வகைப்படும்.

அ) ஆறு

ஆ) ஏழு

இ) எட்டு

ஈ) ஒன்பது

Answer:

இ) எட்டு

Question 18.

வெளிப்படை விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

அ) சுட்டு விடை

ஆ) மறை விடை

இ) நேர் விடை

ஈ) ஏவல் விடை

Answer:

ஈ) ஏவல் விடை

Question 19.

நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள் எத்தனை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

அ) மூன்று

Question 20.

குறிப்பு விடைகளாக இருக்கும் குறிப்பு விடைகள் எத்தனை?

அ) மூன்று

ஆ) நான்கு

இ) ஐந்து

ஈ) ஆறு

Answer:

இ) ஐந்து

Question 21.

குறிப்பு விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

அ) நேர் விடை

ஆ) ஏவல் விடை

இ) உறுவது கூறல்

ஈ) இனமொழி

Answer:

அ) நேர் விடை

Question 22.

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்கு ……………………………..என்று பெயர்.

அ) பொருள்கோள்

ஆ) வழாநிலை

இ) அணி

ஈ) வழுவமைதி

Answer:

அ) பொருள்கோள்

Question 23.

பொருள்கோள்…………………………….. வகைப்படும்.

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer:

இ) 8

Question 24.

பாடலின் தொடக்கம் முதல் முடிவு வரை நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைவது …………………………….. ஆகும்.

அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

ஆ) நிரல் நிறைப் பொருள்கோள்

இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

அ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

Question 25.

ஒரு செய்யுளில் சொற்கள் முறையே பிறழாமல் நிரல் நிறையாக அமைந்து வருவது……………………………..

அ) நிரல் நிறைப் பொருள்கோள்

ஆ) விற்பூட்டுப் பொருள்கோள்

இ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

அ) நிரல் நிறைப் பொருள்கோள்

Question 26.

நிரல் நிறைப் பொருள்கோள் ……………………………..வகைப்படும்.

அ) இரு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஆறு

Answer:

அ) இரு

Question 27.

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி, அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.

அ) விற்பூட்டுப் பொருள்கோள்

ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்

இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்

Question 28.

செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு

பொருள் கொள்ளுதல் ……………………………..ஆகும்.

அ) விற்பூட்டுப் பொருள்கோள்

ஆ) முறை நிரல் நிறைப் பொருள்கோள்

இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

ஈ) மொழிமாற்றுப் பொருள்கோள்

Answer:

இ) எதிர் நிரல் நிறைப் பொருள்கோள்

Question 29.

ஒரு செய்யுளில் பல அடிகளில் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு ஒன்றோடொன்று

கூட்டிப் பொருள் கொள்வது ……………………………..ஆகும்.

அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஆ) ஆற்று நீர்ப் பொருள்கோள்

இ) மொழிமாற்றுப் பொருள்கோள்

ஈ) நிரல் நிறைப் பொருள்கோள்

Answer:

அ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

குறுவினா

Question 1.

வினா எத்தனை வகைப்படும் அவை யாவை?

Answer:

அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா, என்று வினா ஆறு வகைப்படும்

Question 2.

அறிவினா என்றால் என்ன?

Answer:

தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது அறிவினா எனப்படும்.

சான்று: மாணவரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று ஆசிரியர் கேட்டல்.

Question 3.

அறியா வினா என்றால் என்ன?

Answer:

தான் அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவுவது அறியா வினா ஆகும். சான்று: ஆசிரியரிடம் இந்தக் கவிதையின் பொருள் யாது?’ என்று மாணவன் கேட்பது.

Question 4.

ஐய வினா என்றால் என்ன?

Answer:

ஐயம் நீங்கித் தெளிவு பெறுவதற்காகக் கேட்கப்படுவது ஐய வினா ஆகும்.

சான்று: இப்படத்தை வரைந்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல்.

Question 5.

கொளல் வினா என்றால் என்ன?

Answer:

தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது கொளல்வினா எனப்படும்.

சான்று: பத்தாம் வகுப்பு தமிழ் புத்தகம் இருக்கிறதா? என்று கடைக்காரரிடம் வினவுவது.

Question 6.

கொடை வினா என்றால் என்ன?

Answer:

பிறருக்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவும் பொருட்டு வினவுவது கொடை வினா எனப்படும். சான்று: என்னிடம் பாரதிதாசன் கவிதைகள் இரண்டு படிகள் உள்ளன. உன்னிடம் பாரதிதாசனின் கவிதைகள் இருக்கிறதா? என்று கொடுப்பதற்காக வினவுதல்.

Question 7.

ஏவல் வினா என்றால் என்ன?

Answer:

ஒரு செயலைச் செய்யுமாறு வினவுவது ஏவல் வினா எனப்படும்.

சான்று: வீட்டில் தக்காளி இல்லை நீ கடைக்குச் செல்கிறாயா? என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையை சொல்லுதல்.

Question 8.

விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer:

சுட்டு விடை, மறைவிடை, நேர்விடை, ஏவல் விடை, வினா எதிர்வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை, என்று விடை எட்டு வகைப்படும்.

Question 9.

வெளிப்படை விடைகள் எத்தனை வகை? அவை யாவை?

Answer:

சுட்டு விடை, மறை விடை, நேர் விடை ஆகிய மூன்றும் நேரடி விடைகளாக இருப்பதால் அவை வெளிப்படை விடைகள் ஆகும்.

Question 10.

குறிப்பு விடைகள் எத்தனை? அவை யாவை?

Answer:

ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை, ஆகிய ஐந்து விடைகளும் குறிப்பாக விடையை உணர்த்துவதால் இவை குறிப்பு விடைகளாகும்.

Question 11.

சுட்டுவிடையை விவரி

Answer:

‘கடைத்தெரு எங்கு உள்ளது?’ என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது’ என்று சுட்டிக் காட்டும் விடை சுட்டுவிடை எனப்படும்.

Question 12.

மறை விடை என்றால் என்ன?

Answer:

கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்குப் போகமாட்டேன்’ என மறுத்துக் கூறுவது மறைவிடை எனப்படும்.

Question 13.

நேர் விடை என்றால் என்ன? ‘கடைக்குப் போவாயா?’

Answer:

என்ற வினாவிற்குப் போவேன்’ என்று உடன்பட்டு விடையளிப்பது நேர்விடை எனப்படும்

Question 14.

ஏவல் விடை என்றால் என்ன?

Answer:

இது செய்வாயா?’ என்ற வினாவிற்கு நீயே செய்’ என்று மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவல் விடை எனப்படும்.

Question 15.

வினா எதிர் வினாதல் விடை என்றால் என்ன?

Answer:

வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.

சான்று: என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா என்று கூறுவது.

Question 16.

உற்றது உரைத்தல் விடையைக் கூறுக.

Answer:

‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் கால் வலிக்கிறது’ என்று ஏற்கனவே நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

Question 17.

உறுவது கூறல் விடை என்றால் என்ன?

Answer:

‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் கால் வலிக்கும்’ என்று இனிமேல் நேர்வதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் எனப்படும்.

Question 18.

இனமொழி விடை என்றால் என்ன?

Answer:

‘உனக்குக் கதை எழுதத் தெரியுமா?’ என்ற வினாவிற்குக் கட்டுரை எழுதத் தெரியும்’ என்று அதற்கு இனமான மற்றொன்றை விடையாகக் கூறுவது இனமொழிவிடை எனப்படும்.

Question 19.

பொருள்கோள் என்றால் என்ன?

Answer:

செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறைக்குப் பொருள்கோள் என்று பெயர்.

Question 20.

பொருள்கோள் எத்தனை வகைப்படும். அவை யாவை?

Answer:

பொருள் கோள் எட்டு வகைப்படும். அவை:

ஆற்றுநீர்ப் பொருள்கோள்

தாப்பிசைப் பொருள்கோள்

மொழிமாற்றுப் பொருள்கோள்

அளைமறி பாப்புப் பொருள்கோள்

நிரல் நிறைப் பொருள்கோள்

கொண்டு கூட்டுப் பொருள்கோள்

விற்பூட்டுப் பொருள்கோள்

அடிமறி மாற்றுப் பொருள்கோள்.

சிறுவினா

Question 1.

முறைநிரல் நிறைப் பொருள்கோளை விவரிக்க.

Answer:

பொருள்கோள் இலக்கணம்:

செய்யுளில் எழுவாயாக அமையும் பெயர்ச்சொற்களை அல்லது வினைச் சொற்களை வரிசையாக நிறுத்தி அவை ஏற்கும் பயனிலைகளையும் அவ்வரிசைப்படியே நிறுத்திப் பொருள் கொள்ளுதல் “முறை நிரல் நிறைப் பொருள்கோள்” ஆகும்.

சான்று:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. (குறள்)

விளக்கம்:

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக விளங்குமானால் அந்த வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாக அமையும்.

இக்குறளில் பண்பு, பயன் இருசொற்களை வரிசைப்படுத்தி அவற்றின் விளைவுகளாக அன்பு அறன் என்று வரிசைப்படுத்தியுள்ளார். இல்வாழ்க்கையின் பண்பு, அன்பு என்றும், அதன் பயன் அறன் என்றும் பொருள்கொள்ள வேண்டும்.

அன்புக்கு – பண்பும், அறத்துக்கு – பயன் என்று நிரல் நிரையாக நிறுத்திப் பொருள் கொள்வதால் “முறை நிரல் நிறைப் பொருள்கோள்” ஆகும்.

Question 2.

எதிர் நிரல்நிறைப் பொருள்கோளை விவரிக்க.

Answer:

பொருள்கோள் இலக்கணம்:

செய்யுளில் எழுவாய்களை வரிசைப்படுத்தி அவை ஏற்கும் பயனிலைகளை எதிர் எதிராகக் கொண்டு பொருள் கொள்ளுதல் “எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்” ஆகும்.

சான்று:

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றோரோடு ஏனை யவர் (குறள்)

விளக்கம் :

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ அதே அளவு வேற்றுமை கற்றவருக்கும், கல்லாதவருக்கும் இடையே உண்டு. இப்பாடலில் விலங்கு மக்கள் என்ற எழுவாய்களை முதல் அடியில் வரிசைப்பட நிறுத்தி விட்டு கற்றார், கல்லாதவர் (ஏனை) என்ற பயனிலைகளை அடுத்த வரிசையில் நிறுத்தி விட்டுப் பொருள் கொள்ளும்போது கற்றார் மக்கள் என்றும், கல்லாதார் விலங்கு என்றும் பயனிலைகளை எதிர் எதிராக மாற்றிப் பொருள் கொள்ளும் முறை “எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்” ஆகும்.