Ads

செயற்க்கை நுண்ணறிவு-10th Std -Tamil - Book Back Questions and Answers

செயற்க்கை நுண்ணறிவு-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.

இன்றைய செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகளைச் செய்தித்தாளிலோ இணையத்திலோ கண்டு அட்டவணையாகத் தருக.

Answer:

Question 2.

கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து, தேவைப்படும் வேளையில் வெளிப்படுத்துவதில், இன்று மூளைக்கு இணையாகத் தொழில்நுட்பமும் முன்னேறியுள்ளது.

Answer:

இக்கருத்தையும், படத்தையும் ஒப்புநோக்கிக் கலந்துரையாடுக.

யாழினி : கொடுக்கப்படுகின்ற எல்லாவற்றையும் உள்ளீடு செய்து, தேவைப்படும் வேளையில் வெளியிடுவதில் இன்று மூளைக்கு இணையாகத்தொழில் நுட்பமும் முன்னேறியுள்ளது

என்பதைப் பற்றி உன் கருத்து என்ன?

பைந்தமிழ் : இன்றைய தேவைகளை விரைவில் பூர்த்தி செய்ய பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவே பயன்படுகிறது. இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவே.

யாழினி : இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணம் என்ன?

பைந்தமிழ் : எந்த ஒரு தொழில் நுட்பமும் ஒரே நாளில் வந்து விடுவதில்லை . 1980களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும் இணையப் பயன்பாட்டின் பிறப்புமே இம்மாற்றத்திற்குக் காரணம்.

யாழினி : மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பற்றி உன்னுடைய கருத்து யாது?

பைந்தமிழ் : ‘கல்விசார் புரட்சி’ என்பதே என் கருத்து. நாம் ஒரு நூலைத் தேடி எடுத்து அதில் நாம் தேடும் சொற்களைக் கண்டு பிடிப்பதற்கு காலவிரயம் ஏற்படும். ஆனால் திறன் பேசியோ கணினியோ நாம் சொல்லச் சொல்லத்தன் அகண்டதரவுகளில் உள்ள கோடிக்கணக்கான சொற்களுடன் ஒப்பிட்டுச் சரியான சொல்லைக் கால் நொடிக்கும் குறைவான நேரத்தில் தேர்ந்தெடுத்துத் திரையில் காண்பிக்கிறது. கல்விசார் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இத்தொழில் நுட்பம் மிகவும் பயனுடையதாக அமையும். நன்றி!

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Answer:

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

Question 2.

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா

ஆ) சீலா

இ) குலா

ஈ) இலா

Answer:

ஈ) இலா

குறுவினா

Question 1.

வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

Answer:

எ.கா: செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo-ரோபோ)

செயற்கை நுண்ண றிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)

சிறுவினா

Question 1.

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

Answer:

இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.

அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.

அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை .

இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.

மனிதநேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.

பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.

Question 2.

மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.

Answer:

எதிர்காலத் தொழில்நுட்பம்

உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.

நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றி பட்டியலிடும்.

எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

நெடுவினா

Question 1.

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் “செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்” பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

Answer:

முன்னுரை:

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.

ஊர்திகளை இயக்குதல் :

எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.

இத்தகைய ஊர்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.

போக்குவரத்து நெரிசல் இருக்காது.

பயண நேரம் குறையும்.

எரிபொருள் மிச்சப்படும்.

மனிதர்களிடம் போட்டி :

மென்பொருள்கள், கவிதைகள், கதைகள், விதவிதமான எழுத்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை.

கல்வித்துறை :

கல்வித்துறையில் இத்தொழில்நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

பிற செயல்பாடுகள் :

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.

நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்.

வேலை வாய்ப்புகளில் மாற்றம் :

வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.

இயந்திர மனிதனிடம் குழந்தை :

எதிர்காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.

தோழனாய் இயந்திர மனிதன் :

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

உயிராபத்தை விளைவித்தல் :

செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.

மனித முயற்சியில் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.

வணிக வாய்ப்புகள் :

பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.

முடிவுரை:

செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) மின்ன ணுப் புரட்சி – 1. Browser

ஆ)செயல்திட்ட வரைவு – 2. Data

இ) உலாவி – 3. Computer Program

ஈ) தரவு – 4. Digital Revolution

அ) 1, 4, 3, 2

ஆ) 4, 1, 2, 3

இ) 4, 3, 2, 1

ஈ) 2, 4, 1, 3

Answer:

இ) 4, 3, 2, 1

Question 2.

பொருந்தாத இணையைக் கண்டறிக.

அ) பெப்பர் ஜப்பான் சாப்ட் வங்கி

ஆ) வாட்சன்

ஐ.பி.எம். நிறுவனம்

இ) இலா – பாரத ஸ்டேட் வங்கி

ஈ) பெப்பர்

புற்றுநோயைக் கண்டுபிடித்தது

Answer:

ஈ) பெப்பர் – புற்றுநோயைக் கண்டுபிடித்தது

Question 3.

சீன நாட்டில் சூவன்சௌ துறைமுக நகரில் கட்டப்பட்ட கோயில்…………………………

அ) சிவன் கோயில்

ஆ) பெருமாள் கோயில்

இ) முருகன் கோயில்

ஈ) பிள்ளையார் கோயில்

Answer:

அ) சிவன் கோயில்

Question 4.

உயிரினங்களில் மனிதரை உயர்த்திக்காட்டுவது அவர்களின்…………………………

அ) சிந்தனை ஆற்றல்

ஆ) செல்வம்

இ) வாழ்நாள்

ஈ) ஆற்றல்

Answer:

அ) சிந்தனை ஆற்றல்

Question 5.

…………………………களில் ஒவ்வொருவருக்குமான தனி நபர் கணினிகளின் வளர்ச்சியும், இணையப் பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணுப் புரட்சிக்குக் காரணமாயின.

அ) 1970

ஆ) 1960

இ) 1980

ஈ) 1950

Answer:

இ) 1980

Question 6.

இவ்வுலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில் நுட்பம்…………………………

அ) செயற்கை நுண்ணறிவு

ஆ) மென்பொருள்

இ) மீத்திறன் நுண்ண றிவு

ஈ) முகநூல், புலனம் போன்றவை

Answer:

அ) செயற்கை நுண்ணறிவு

Question 7.

இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர்…………………………

அ) வேர்டுஸ்மித்

ஆ) வேர்டுபீட்டர்

இ) வேட்ஸ்வொர்த்

ஈ) வேர்ல்டுஸ்மித்

Answer:

அ) வேர்டுஸ்மித்

Question 8.

வேர்டுஸ்மித் என்பதைத் தமிழில் ………………………… என்று அழைப்பர்.

அ) எழுத்தாளி

ஆ) எழுத்தாணி

இ) எழுத்தோவியம்

ஈ) குரலாளி

Answer:

அ) எழுத்தாளி

Question 9.

இதழியலில் செயற்கை நுண்ணறிவு செய்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றங்களில் ஒன்று…………………………

அ) இயல்பான மொழிநடை

ஆ) கடினமான மொழிநடை

இ) தாய்மொழிநடை

ஈ) உலக மொழிகள் இணைப்பு

Answer:

அ) இயல்பான மொழிநடை

Question 10.

2016 இல் நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்த ஐ.பி.எம். நிறுவனத்தின் கணினியின் பெயர்…………………………

அ) வாட்சன்

ஆ) வேர்டுஸ்மித்

இ) ஸ்டீவ்ஸ்மித்

ஈ) பெப்பர்

Answer:

அ) வாட்சன்

Question 11.

செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் ………………………… தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

அ) இருபதாயிரம்

ஆ) இரண்டு இலட்சம்

இ) இரண்டு கோடி

ஈ) இருபது கோடி

Answer:

இ) இரண்டு கோடி

Question 12.

…………………………உதவியாளர்களை ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று பாரதியார் மெச்சுவதுபோல் மெச்சிக்கொள்ளலாம்.

அ) மெய்நிகர்

ஆ) பொய் நிகர்

இ) செயற்கை

ஈ) முதன்மை

Answer:

அ) மெய்நிகர்

Question 13.

இவ்வுலகை இதுவரை…………………………ஆண்டு கொண்டிருக்கிறது; இனிமேல் ………………………… தான் ஆளப்போகிறது.

அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு

ஆ) செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்

இ) நுண்ண றிவு, முகநூல்

ஈ) முகநூல், புலனம்

Answer:

அ) மென்பொருள், செயற்கை நுண்ணறிவு

Question 14.

செயற்கை நுண்ணறிவின் மிகுதியான வளர்ச்சியால் ………………………… தேவை கூடியுள்ளது.

அ) மெய்நிகர் உதவியாளர்களின்

ஆ) தரவு அறிவியலாளர்களின்

இ) உதவியாளர்களின்

ஈ) அறிவியலாளர்களின்

Answer:

ஆ) தரவு அறிவியலாளர்களின்

Question 15.

ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்…………………………

அ) வாட்சன்

ஆ) பெப்பர்

இ) சோபியா

ஈ) வேர்டுஸ்மித்

Answer:

ஆ) பெப்பர்

Question 16.

உலக அளவில் அதிகம் விற்பனையாகும் ரோபோ…………………………

அ) வாட்சன்

ஆ) பெப்பர்

இ) இலா

ஈ) சோபியா

Answer:

ஆ) பெப்பர்

Question 17.

பெப்பர் ரோபோக்களின் மூன்று வகையினுள் பொருந்தாததைக் கண்டறிக.

அ) வீட்டுக்குப் பயன்படுவது

ஆ) வணிகத்துக்குப் பயன்படுவது

இ) படிப்புக்குப் பயன்படுவது

ஈ) நாட்டுக்குப் பயன்படுவது

Answer:

ஈ) நாட்டுக்குப் பயன்படுவது

Question 18.

இந்தியாவின் பெரிய வங்கி…………………………

அ) இந்தியன் வங்கி

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) கனரா வங்கி

ஈ) பரோடா வங்கி

Answer:

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

Question 19.

‘இலா’ என்ற உரையாடு மென்பொருளை உருவாக்கியது…………………………

அ) ஐ.பி.எம். நிறுவனம்

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

இ) ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்

ஈ) சாப்ட் வங்கி

Answer:

ஆ) பாரத ஸ்டேட் வங்கி

Question 20.

இதழியலில் இயல்பான மொழிநடையை உருவாக்கும் மென்பொருள்…………………………

அ) வாட்சன்

ஆ) வழிகாட்டி வரைபடம்

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி

Question 21.

தகவல்களைக் கொடுத்தால், அழகான சில கட்டுரைகளை உருவாக்கும் மென்பொருள்…………………………

அ) வாட்சன்

ஆ) வழிகாட்டி வரைபடம்

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

Question 22.

2016 இல் ஐ.பி.எம். நிறுவனத்தின் நுண்ண றிவுக் கணினி…………………………

அ) வாட்சன்

ஆ) வழிகாட்டி வரைபடம்

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

அ) வாட்சன்

Question 23.

50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களைப் பணியமர்த்தியுள்ள நாடு…………………………

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஆ) சீனா

Question 24.

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு…………………………

அ) வன்பொருள்

ஆ) மென்பொருள்

இ) இயந்திர மனிதன்

ஈ) கணினி

Answer:

ஆ) மென்பொருள்

Question 25.

“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்” என்று பாடியவர்…………………………

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) கவிமணி

ஈ) வைரமுத்து

Answer:

அ) பாரதியார்]

Question 26.

‘இலா’ மென்பொருள் ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை…………………………

அ) பத்தாயிரம்

ஆ) ஆயிரம்

இ) ஐயாயிரம்

ஈ) பத்து

Answer:

அ) பத்தாயிரம்

Question 27.

சாப்ட் வங்கி உருவாக்கிய நாடு…………………………

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஈ) ஜப்பான்

Question 28.

பெப்பர் என்பது ஒரு…………………………

அ) வன்பொருள்

ஆ) மென்பொருள்

இ) இயந்திர மனிதன்

ஈ) கணினி

Answer:

இ) இயந்திர மனிதன்

Question 29.

ஜப்பானில் வரவேற்பாளராகவும் பணியாளராகவும் உள்ள இயந்திர மனிதன்

அ) வாட்சன்…………………………

ஆ) இலா

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

ஈ) பெப்பர்

Question 30.

ஜப்பானில் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவுவிடுதிகளிலும் பயன்பாட்டில் உள்ள இயந்திர மனிதன்…………………………

அ) வாட்சன்

ஆ) இலா

இ) வேர்டுஸ்மித் (எழுத்தாளி)

ஈ) பெப்பர்

Answer:

ஈ) பெப்பர்

Question 31.

காண்டன் நகர் அமைந்துள்ள நாடு…………………………

அ) இந்தியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஆ) சீனா

Question 32.

தமிழ்க் கல்வெட்டு காணப்படும் பிற நாடு…………………………

அ) ஆஸ்திரேலியா

ஆ) சீனா

இ) அமெரிக்கா

ஈ) ஜப்பான்

Answer:

ஆ) சீனா

Question 33.

பண்டையத் தமிழர் அடிக்கடி வணிகத்திற்காகச் சென்று வந்த சீன நகர்…………………………

அ) காண்டன்

ஆ) சூவன்சௌ

இ) குப்லாய்கான்

ஈ) பெய்ஜிங்

Answer:

ஆ) சூவன்சௌ

Question 34.

சீனப்பேரரசர் அ) காண்டன்…………………………

ஆ) சூவன்சௌ

இ) குப்லாய்கான்

ஈ) பெய்ஜிங்

Answer:

இ) குப்லாய்கான்

Question 35.

சீனாவில் சிவன் கோவில் கட்டிய சீனப்பேரரசர்…………………………

அ) காண்டன்

ஆ) சூவன்சௌ

இ) குப்லாய்கான்

ஈ) பெய்ஜிங்

Answer:

இ) குப்லாய்கான்

Question 36.

பொருத்துக.

1. பெப்பர் – அ) கட்டுரை உருவாக்கும் மென்பொருள்

2. எழுத்தாளி – ஆ) இயந்திர மனிதன்

3. இலா – இ) நுண்ணறிவுக் கணினி

4. வாட்சன் – ஈ) வாடிக்கையாளர்களுடன் உரையாடும் மென்பொருள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 37.

ஸ்மார்ட்போன் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்…………………………

அ) திறன் பேசி

ஆ) தொலைபேசி

இ) அலைபேசி

ஈ) செல்பேசி

Answer:

அ) திறன் பேசி

Question 38.

…………………… தொழிற்புரட்சியின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவும் நம்மை வளப்படுத்த உதவும்.

அ) மூன்றாவது

ஆ) நான்காவது

இ) ஐந்தாவது

ஈ) இரண்டாவது

Answer:

ஆ) நான்காவது

குறுவினா

Question 1.

மின்னணுப் புரட்சிக்கான காரணங்களைக் கூறுக.

Answer:

1980களில் ஒவ்வொருவருக்குமான தனிநபர் கணினிகளின் வளர்ச்சி.

இணையப் பயன்பாட்டின் பிறப்பு. இவையே இன்றைய மின்னணுப் புரட்சிக்கான காரணங்களாகும்.

Question 2.

‘வேர்டுஸ்மித்’ குறிப்பு வரைக.

Answer:

இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.

இதற்கு ‘எழுத்தாளி’ என்று பெயர்.

இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.

Question 3.

‘வாட்சன்’ குறிப்பு வரைக.

Answer:

2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.

சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

Question 4.

செயற்கை நுண்ணறிவு நமக்கு எப்படி அறிமுகமாகிறது?

Answer:

சமூக ஊடகங்கள்.

மின்னணுச் சந்தைகள்.

இவற்றின் மூலம் செயற்கை நுண்ணறிவு நமக்கு அறிமுகமாகிறது.

Question 5.

செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில்நுட்ப வரையறையைக் கூறுக.

Answer:

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு செயல்திட்ட வரைவு.

Question 6.

செயற்கை நுண்ணறிவின் பொதுவான பணி யாது?

Answer:

மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

Question 7.

சீனாவில் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர மனிதனின் செயல்பாடுகளைக் கூறுக.

Answer:

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் குரலையும் முகத்தையும் அடையாளம் கண்டு அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கின்றன.

சீன மொழியின் வெவ்வேறு வட்டார வழக்குகளையும் கூட அவை புரிந்து கொண்டு பதில் அளிக்கின்றன.

Question 8.

‘இலா’ என்னும் மென்பொருள் குறித்து எழுதுக.

Answer:

பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.

ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.

அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.

Question 9.

இலா (ELA) என்பதன் ஆங்கில விரிவாக்கத்தை எழுதுக.

Answer:

ELA – Electronic Live Assistant

Question 10.

செயற்கை நுண்ணறிவின் சிறப்பு யாது?

Answer:

செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.

செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும்.

சிறுவினா

Question 1.

‘பெப்பர்’ குறிப்பு வரைக.

Answer:

ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.

இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.

வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.

இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.

பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

Question 2.

செயற்கை நுண்ணறிவு குறித்த தொழில் நுட்ப வரையறையைக் கூறி விளக்குக.

Answer:

வரையறை :

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம்.

வடிவமைப்பு :

ஒலிப்படங்கள், எழுத்துகள், கானொலிகள், ஒலிகள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்ளும் மென்பொருளை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைக்கின்றனர்.

முடிவெடுக்கும் திறன் :

இந்த மென்பொருள் அறிவைக் கொண்டு தனக்கு வரும் புதிய புதிய சூழ்நிலைகளில் மனிதரைப் போல தானே முடிவெடுக்கும் திறனுடையது.

சிறப்பு :

செயற்கை நுண்ணறிவு பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை. செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்து கொள்ளவும் முடியும். மனிதனால் முடியும் செயல்களையும் அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு.

Question 3.

மெய்நிகர் உதவியாளர் பற்றி விவரி.

Answer:

உதவு மென்பொருள் :

திறன் பேசியில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி சில உதவிகளைச் செய்கிறது.

செயல்பாடுகள் :

இம்மென்பொருள் நாம் சொல்லுகிறவர்களுக்குத் தொலைபேசி அழைப்பு விடுக்கும்.

நாம் திறக்கக் கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும்.

நாம் கேட்பதை உலாவியில் தேடும். நாம் விரும்பும் அழகான கவிதையை இணையத்தில் தேடித் தரும். எந்தக் கடையில் எது விற்கும் என்றும் சொல்லும்.

படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும்.

நாம் எடுத்த ஒளிப்படங்களைப் பற்றிக் கருத்துரைக்கும்.

எதிர்காலத்தில் :

எதிர்காலத்தில் நம் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் இது போன்ற மெய்நிகர் உதவியாளர் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

Question 4.

ஒளிப்படக்கருவியில் செயற்கை நுண்ணறிவு குறித்து சுருக்கி வரைக.

Answer:

சில உயர்வகைத் திறன் பேசியின் ஒளிப்படக்கருவி, செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

கடவுச் சொல்லும் கைரேகையும் கொண்டு திறன்பேசியைத் திறப்பது பழமையானது.

உரிமையாளரின் முகத்தை அடையாளம் கண்டு திறப்பது இன்றைய தொழில்நுட்பம்.

படம் எடுக்கும் காட்சியை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது.

திறன் பேசியில் உள்ள ஒளிப்படக் கருவியில் எடுக்கும் படங்களை மெருகூட்ட இத்தொழில் நுட்பம் உதவுகிறது.

பயன்கள் :

காணொலிகளைத் தொகுக்கும் மென்பொருள்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் பயன்படுகிறது. நேரம் வீணாவது தவிர்க்கப்படுகிறது.

Question 5.

செயற்கை நுண்ணறிவின் பொதுவான கூறுகளை விளக்குக.

Answer:

நம்மை அறியாமலேயே நம் வாழ்க்கையையும், வணிகத்தையும் வளப்படுத்துகிறது.

இத்தொழில் நுட்பத்தைக் கண்டு அச்சப்படுபவர்களின் அலறல்களை நாம் எதிர்கொள்வதே முதல் அறை கூவல்.

ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகும் போது புதிய வடிவில் மாற்றம் பெறுகின்றன.

மனித இனத்தைத் தீங்குகளிலிருந்து காப்பாற்றி, உடல் நலத்தைப் பேணுகிறது.

கொடிய நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தல், மருத்துவரைப் போல பரிந்துரை செய்தல் போன்ற மேற்கண்ட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

Question 6.

நீவிர் அறிந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மூன்றினை எழுதுக.

Answer:

கண்காணிப்புக் கருவியில் பொதிந்திருக்கும் செயற்கை நுண்ணறிவு பலவிதங்களில் உதவியாக இருக்கின்றது.

வழிகாட்டி வரைபடமாகத் திறன் பேசியிலிருந்து செயற்கை நுண்ணறிவு

பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டுகிறது.

செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது.

கண் அறுவை மருத்துவம் செய்கிறது.

சமைக்கிறது.

சில புள்ளிகளை வைத்துப் படம் வரைகிறது.

Question 7.

முக்காலக் கல்வியறிவு குறித்து எழுதுக.

Answer:

முந்தைய கல்வியறிவு :

ஒரு காலத்தில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு எழுதப் படிக்கத் தெரிந்த கல்வியறிவே போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று, கல்வியறிவுடன் மின்னணுக் கல்வியறிவையும் மின்னணுச் சந்தைப்படுத்துதலையும் அறிந்திருத்தல் வேண்டும். இது வாழ்க்கையை எளிதாக்கவும் வணிகத்தில் வெற்றியடையவும் உதவுகிறது.

எதிர்காலக் கல்வியறிவு :

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவும் நான்காவது தொழிற் புரட்சியின் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் அறிவுமே நம்மை வளப்படுத்தும்.

Question 8.

சீன நாட்டில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு குறித்து எழுதுக.

Answer:

சூவன்சௌ துறைமுக நகர் :

சீன நாட்டில் காண்டன் நகருக்கு வடக்கே 500 கல் தொலைவில் உள்ளது. சூவன்சௌ துறைமுக நகர். தமிழ் வணிகர் :

சூவன்சௌ துறைமுக நகருக்குத் தமிழ் வணிகர் அடிக்கடி வந்து சென்றனர்.

சிவன் கோவில் :

தமிழர்களின் வரவு காரணமாக சீனாவில் சிவன் கோவில் கட்டும்படியாக அந்நாட்டு மன்னர் குப்லாய்கான் ஆணையிட்டார்.

இம்மன்னரது ஆணைப்படி இக்கோவில் கட்டப்பட்டது எனத் தமிழ்க் கல்வெட்டு ஒன்று இக்கோவிலில் உள்ளது.

இக்கோயிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.

செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினி, மென்பொருள், இயந்திர மனிதன் குறித்த செய்திகளைத் தொகுத்தெழுதுக.

Answer:

முன்னுரை:

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு ஆகும். இது பொதிந்த இயந்திரங்களுக்கு ஓய்வு தேவையில்லை.

வேர்டுஸ்மித்:

இதழியலில் மொழிநடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித்.

இதற்கு எழுத்தாளி என்று பெயர்.

இதில் தகவல்களைக் கொடுத்தால் மட்டும் போதும்; சில நொடிகளிலேயே அழகான கட்டுரையை உருவாக்குகின்றன.

இலா:

பாரத ஸ்டேட் வங்கி இலா’ என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.

ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.

அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.

வாட்சன்:

2016ல் ஐ.பி.எம். நிறுவனத்தின் செயற்கை நுண்ண றிவுக் கணினி வாட்சன்.

சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

பெப்பர்:

ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்.

இது உலக அளவில் விற்பனையாகும் ஒரு ரோபோ.

வீட்டுக்கு, வணிகத்துக்குப், படிப்புக்கு என மூன்று வகை ரோபோக்கள் உள்ளன.

இவை மனிதரின் முகபாவனைகளிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகின்றன.

பெப்பரை வரவேற்பாளராகவும் பணியாளராகவும் வீடுகளிலும் வணிக நிறுவனங்களிலும் உணவு விடுதிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.

முடிவுரை:

இன்று அங்கும் இங்குமாய் இருக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு, நாளை உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் பயன்படும் என்பதில் ஐயமில்லை.