Ads

நிகழ்கலை-10th Std -Tamil - Book Back Questions and Answers

நிகழ்கலை-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.

நீங்கள் அறிந்த நிகழ்கலைகளை தனியாகவோ குழுவாகவோ வகுப்பறையில் நிகழ்த்துக.

Answer:

(மாணவர் செயல்பாடு)

Question 2.

நீங்கள் வாழும் பகுதியிலுள்ள நிகழ்கலைக் கலைஞர்களை நேர்முகம் கண்டு, அவற்றைத் தொகுத்து வகுப்பறையில் படித்துக் காட்டுக.

Answer:

நிகழ்கலைக் கலைஞர்களிடம் நேர்காணலின் போது நான் கேட்ட சில வினாக்களுக்கு அவர்கள் அளித்த பதிலை நான் இப்போது உங்களுக்கு படித்துக் காட்டுகிறேன்.

கலைஞர்களே! இன்றைய காலக் கட்டத்தில் உங்களது கலைத்தொழில் எந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது என நான் கேட்ட போது அவர்கள் கூறிய செய்தியானது நாங்கள் மிகவும் தொழிலில் நலிவடைந்துள்ளோம். ஆகவே வறுமை நிலையில் இருக்கிறோம் என்றனர். எப்போதாவது இத்தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பினால் வாழ்க்கை. ஆகவே இத்தொழிலை விட்டு விட்டு வேறு தொழிலில் ஈடுபடலாம் என்று கருதுகிறோம் எனக் கூறினர்.

மேலும் இக்கலையை நிகழ்த்துவதற்கான ஆடை, ஆபரணங்களின் செலவும் அதிகமாக உள்ளது. அரசும் மக்களும் எங்கள் கலையை ஊக்குவித்து வாய்ப்பளித்தார்களேயானால் இக்கலையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்றார் மற்றொரு கலைஞர்.

இவ்வாறு வேதனையடையும் நிகழ்கலை கலைஞர்களின் கலையை ஆதரித்து, அவர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களை வாழ வைப்போம். கலையைப் பாதுகாப்போம்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?

அ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்.

ஆ) ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது. ஈ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்.

Answer:

இ) ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது.

Question 2.

கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர். இத்தொடருக்கான வினா எது?

அ) கரகாட்டம் என்றால் என்ன?

ஆ) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

இ) கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

Answer:

ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

குறுவினா

Question 1.

“நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற்கூற்றாக மாற்றுக.

Answer:

நேற்று நான் பார்த்த அர்ச்சுனன் தபசு என்ற கூத்தில் அழகிய ஒப்பனையும், சிறந்த நடிப்பையும், இனிய பாடல்களையும் நுகர்ந்து மகிழ்ந்ததாக சேகர் என்னிடம் கூறினான்.

சிறுவினா

Question 1.

படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.

அ) காலில் சலங்கை அணிந்து ஆடும் நிகழ்கலை ஏதேனும் இரண்டு கூறுக. ஒயிலாட்டம், தேவராட்டம்.

ஆ) கரகாட்டம் என்றால் என்ன? கரகம் என்பது, பித்தளைச் செம்பையோ சிறிய குடத்தையோ தலையில் வைத்துத் தாளத்திற்கு ஏற்ப ஆடுதல் ஆகும்.

நெடுவினா

Question 1.

நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

Answer:

பாராட்டுரை

இன்றைய நம் பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வருகைத் தந்து பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்தித் தந்த குழுவினருக்குப் பள்ளியின் சார்பாக வணக்கம்.

நெகிழியானது பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், நம் மண்ணின் வளத்தைக் குன்றச் செய்து நிலத்தடி நீர் குறைவதை, மிக அழகாக பொம்மலாட்டம் மூலம் எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள்.

மழைநீர் பூமிக்குள் நுழைய விடாமல் தடுக்கும் நெகிழியைப் பற்றியும், மரங்களில் நெகிழிப் பைகள் சிக்குவதால் பாதிக்கும் ஒளிச்சேர்க்கையைப் பற்றியும் பாடல் வாயிலாக எடுத்துரைத்தீர்கள். மிகவும் அருமையாக இருந்தது. பாராட்டுகள்.

மட்காத நெகிழிகளை மழைநீர் அடித்துச் செல்வதால் நீர் மாசு அடைவதையும், நெகிழிப் பைகளில் தேநீர், குளிர்பானம் போன்ற உணவுப்பொருட்கள் வாங்குவதால் மனிதனுக்குப் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதையும் பொம்மலாட்டம் மூலம் நிகழ்த்தினீர்கள். பாராட்டுகள்.

நெகிழிப் பைகளை எரிக்கும்போது ஏற்படும் நச்சு வாயு காற்றையும் மாசுபடுத்துவதைத் தங்களது இனிய குரலால் பாடி, எங்களைப் பரவசமடையச் செய்தீர்கள். பாராட்டுகள்.

நெகிழியைத் தவிர்த்தல் :

மேற்கண்ட தீமைகள் ஒழிந்திட நெகிழியைத் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை நாம் அனைவரும் ஏற்போம்.

தமிழர்களின் மிகப்பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று பொம்மலாட்டம். இது பொழுதுபோக்குக் காட்சிக்கலை ஆகும். இது பொழுதுபோக்குக் காட்சியாக மட்டுமல்லாமல் கல்வியறிவு, மக்களிடையே காணப்படும் அறியாமையைப் பாடல் வழியாக போக்குவதற்கு நல்ல கலையாக விளங்குகிறது. குறைந்த நேரத்தில் அதிக செலவில்லாமல் இக்கலை வடிவம் வாயிலாக நம் பள்ளியின் ஆண்டு விழாவில் பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்திய கலைக்குழுவுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமையைப் பொம்மலாட்டம் வாயிலாக நிகழ்த்தி எங்கள் நெஞ்சத்தை நெகிழச் செய்த அனைவருக்கும் வணக்கம்.

Question 2.

நிகழ்கலை வடிவங்கள் அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக.

Answer:

முன்னுரை:

ஆயக்கலைகள் 64 என்பர் சான்றோர். ஆனால் அவை இன்று நம்மிடையே பல்வேறு சூழலால் குறைந்து வருகின்றன.

நிகழ்கலையின் வடிவங்கள்:

பொதுவாக நிகழ்கலை, அவை நிகழும் இடங்கள் ஊரில் பொதுமக்கள் கூடும் இடம், கோயில் போன்ற இடங்களில் நடைபெறும். இவ்வகை கலைகள் பல்வேறு வழிகளில் ஆடல் பாடல்களோடு நடைபெறும். சான்றாக கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து போன்றன.

ஒப்பனைகள் :

கரகாட்டம் – ஆண், பெண் வேடமிட்டு ஆடுதல்

மயிலாட்டம் – மயில் வடிவ கூண்டுக்குள் உடலை மறைத்தல்

ஒயிலாட்டம் – ஒரே நிறத்துணியை முண்டாசு போலக்கட்டுதல், காலில் சலங்கை, கையில் சிறுதுணி

தேவராட்டம் – வேட்டி, தலையிலும் இடுப்பிலும் சிறு துணி, எளிய ஒப்பனை.

சிறப்பும், பழைமையும் :

வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாத, மகிழ்ச்சி தருகின்ற, கவலையைப் போக்குகின்ற, போன்ற சிறப்புகளை நிகழ்கலை மூலம் அறிய முடிகிறது.

பொம்மலாட்டம், கையுறைப் பாவைக்கூத்து, தெருக்கூத்து போன்ற இக்கலைகள் எல்லாம் நம்முன்னோர் காலத்தில் இருந்த பழமை வாய்ந்த கலைகளாகும்.

குறைந்து வருவதற்கான காரணங்கள் :

நாகரிகத்தின் காரணமாகவும், கலைஞர்களுக்குப் போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும், திரைத்துறை வளர்ச்சியினாலும் இக்கலைகள் குறைந்து வருகின்றன.

வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன :

நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களில் நல்ல வாழ்வியல் தொடர்பான நிகழ்கலைகளை நடத்தி, கலைகளையும், கலைஞரையும் பாராட்டுவோம். இப்பெரிய செயலில் ஊடகம் மற்றும் செய்தித்தாள் ஆகியவை முழுமையாக இணைத்துக் கொண்டால் நம் கலைகள் நிலைபெற்று நிற்கும்.

முடிவுரை:

நாமும் நிகழ்கலைகளைக் கற்று, கலைகளை அழியாமல் காப்போம்.

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

சரியான விடை வரிசையைத் தேர்ந்தெடு.

i) கரகாட்டம் – 1. உறுமி எனப்படும் தேவதுந்துபி

ii) மயிலாட்டம் – 2. தோலால் கட்டப்பட்ட குடம், தவில் சிங்கி, டோலாக், தப்பு

iii) ஒயிலாட்டம் – 3. நையாண்டி மேளம்

iv) தேவராட்டம் – 4. நையாண்டி மேள இசை, நாகசுரம், தவில், பம்பை

அ) 4, 3, 2, 1

ஆ) 1, 2, 3, 4

இ) 3, 4, 1, 2

ஈ) 2, 1, 4, 3

Answer:

அ) 4, 3, 2, 1

Question 2.

பொருத்தமான விடை வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

i) மயிலாட்டம் – 1. கரகாட்டத்தின் துணை ஆட்டம்

ii) ஒயிலாட்டம் – 2. கம்பீரத்துடன் ஆடுதல்

iii) புலியாட்டம் – 3. வேளாண்மை செய்வோரின் கலை

iv) தெருக்கூத்து – 4. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை

அ) 4, 1, 3, 2

ஆ) 3, 4, 2, 1

இ) 1, 2, 4, 3

ஈ) 4, 3, 1, 2

Answer:

இ) 1, 2, 4, 3

Question 3.

தேவராட்டத்தில் எத்தனை கலைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்பது மரபு?

Answer:

அ) மூன்று முதல் பதின்மூன்று

ஆ) எட்டு முதல் பத்து

இ) பத்து முதல் பதின்மூன்று

ஈ) எட்டு முதல் பதின்மூன்று

Answer:

ஈ) எட்டு முதல் பதின்மூன்று

Question 4.

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை யாவை?

அ) நிகழ்கலைகள்

ஆ) பெருங்கலைகள்

இ) அருங்கலைகள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

அ) நிகழ்கலைகள்

Question 5.

கரகாட்டத்தை வேறு எவ்வாறு அழைக்கலாம்?

அ) குட ஆட்டம்

ஆ) கும்பாட்டம்

இ) கொம்பாட்டம்

ஈ) செம்பாட்டம்

Answer:

ஆ) கும்பாட்டம்

Question 6.

கரகாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகள் …………………..

i) நையாண்டி மேள இசை

ii) நாகசுரம்

iii) தவில்

iv) பம்பை

அ) i, ii – சரி

ஆ) i, ii, iii – சரி

இ) நான்கும் சரி

ஈ) iii – சரி

Answer:

இ) நான்கும் சரி

Question 7.

கரகாட்டம் நிகழ்த்துதலில் எத்தனை பேர் நிகழ்த்த வேண்டும்?

அ) 12

ஆ) 2

இ) 24

ஈ) வரையறை இல்லை

Answer:

ஈ) வரையறை இல்லை

Question 8.

“நீரற வறியாக் கரகத்து” என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் ……………………

அ) அகநானூறு

ஆ) புறநானூறு

இ) கலித்தொகை

ஈ) நற்றிணை

Answer:

ஆ) புறநானூறு

Question 9.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய…………………. வகை ஆடல்களில் ‘குடக்கூத்து’ என்ற ஆடலும் குறிப்பிடப்படுகிறது.

அ) பத்து

ஆ) பதினொரு

இ) ஏழு

ஈ) எண்

Answer:

ஆ) பதினொரு

Question 10.

குடக்கூத்து என்பது, …………………………

அ) மயிலாட்டம்

ஆ) கரகாட்டம்

இ) பொம்மலாட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

ஆ) கரகாட்டம்

Question 11.

கரகாட்டத்தின் துணையாட்டம் …………………….

அ) மயிலாட்டம்

ஆ) ஒயிலாட்டம்

இ) காவடியாட்டம்

ஈ) தேவராட்டம்

Answer:

அ) மயிலாட்டம்

Question 12.

காவடியாட்டம் – இச்சொல்லில் ‘கா’ என்பதன் பொருள் …………………

அ) சோலை

ஆ) பாரந்தாங்கும் கோல்

இ) கால்

ஈ) காவல்

Answer:

ஆ) பாரந்தாங்கும் கோல்

Question 13.

இருமுனைகளிலும் சம எடைகளைக் கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது…………….

அ) கரகாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) காவடியாட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

இ) காவடியாட்டம்

Question 14.

மச்சக்காவடி, சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, பறவைக்காவடி என்று எதன் அடிப்படையில் அழைக்கின்றனர்?

அ) அமைப்பு

ஆ) நிறம்

இ) அழகு

ஈ) வடிவம்

Answer:

அ) அமைப்பு

Question 15.

இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது…………….

அ) கரகாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) ஒயிலாட்டம்

ஈ) காவடியாட்டம்

Answer:

ஈ) காவடியாட்டம்

Question 16.

ஒயிலாட்டம் ஆடுவோரின் வரிசை எண்ணிக்கை …………………

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) எட்டு

Answer:

அ) இரண்டு

Question 17.

தேவராட்டம் என்பது யார் மட்டுமே ஆடும் ஆட்டம்?

அ) ஆண்கள்

ஆ) பெண்கள்

இ) சிறுவர்கள்

ஈ) முதியவர்கள்

Answer:

அ) ஆண்கள்

Question 18.

தேவராட்டம், ………. ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

அ) வானத்துத் தேவர்கள்

ஆ) விறலியர்

இ) பாணர்கள்

ஈ) அரசர்கள்

Answer:

அ) வானத்துத் தேவர்கள்

Question 19.

உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது…………….

அ) தேவதுந்துபி

ஆ) சிங்கி

இ) டோலக்

ஈ) தப்பு

Answer:

அ) தேவதுந்துபி

Question 20.

தேவதுந்துபி என்னும் இசைக்கருவி பயன்படுத்தும் ஆட்ட வகை ………………………

அ) கரகாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) தேவராட்டம்

ஈ) சேவையாட்டம்

Answer:

இ) தேவராட்டம்

Question 21.

தேவராட்டம் எவ்வகை நிகழ்வாக ஆடப்படுகின்றது?

அ) அழகியல்

ஆ) நடப்பியல்

இ) சடங்கியல்

ஈ) வாழ்வியல்

Answer:

இ) சடங்கியல்

Question 22.

தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை…………………………..

அ) மயிலாட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) சேவையாட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

இ) சேவையாட்டம்

Question 23.

சேவையாட்டக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டே ஆடும் இசைக்கருவிகளைக் கண்டறிக.

i) சேவைப்பலகை

ii) சேமக்கலம்

iii) ஜால்ரா

அ) i, ii – சரி

ஆ) ii, iii – சரி

இ) i, iii – சரி

ஈ) மூன்றும் சரி

Answer:

ஈ) மூன்றும் சரி

Question 24.

எந்தப் பண்புகளைக் கொண்டு நிகழ்த்திக்காட்டும் கலை பொய்க்கால் குதிரையாட்டம் ஆகும்?

அ) போலச் செய்தல்

ஆ) இருப்பதைச் செய்தல்

இ) மெய்யியல்

ஈ) நடப்பியல்

Answer:

அ) போலச் செய்தல்

Question 25.

புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்?

அ) மயிலாட்டம்

ஆ) ஒயிலாட்டம்

இ) பொய்க்கால் குதிரையாட்டம்

ஈ) காவடியாட்டம்

Answer:

இ) பொய்க்கால் குதிரையாட்டம்

Question 26.

பொய்க்கால் குதிரையாட்டம் யாருடைய காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது?

அ) சோழர்

ஆ) நாயக்கர்

இ) மராட்டியர்

ஈ) ஆங்கிலேயர்

Answer:

இ) மராட்டியர்

Question 27.

இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படுவது?

அ) காவடியாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) ஒயிலாட்டம்

ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்

Answer:

ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்

Question 28.

பாடல்கள் பயன்படுத்தாத ஆட்ட வகை……………….

அ) கரகம்

ஆ) பொய்க்கால் குதிரை

இ) காவடி

ஈ) மயில்

Answer:

ஆ) பொய்க்கால் குதிரை

Question 29.

பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு இசைக்கப்படும் இசைக்கருவிகளைக் கண்டறிக.

i) நையாண்டி மேளம்

ii) நாகசுரம்

iii) தவில்

iv) டோலக்

அ) i, ii – சரி

ஆ) iii, iv – சரி

இ) iii – மட்டும் தவறு

ஈ) நான்கும் சரி

Answer:

அ) i, ii – சரி

Question 30.

தப்பு என்பது……………….

அ) தோற்கருவி

ஆ) துளைக்கருவி

இ) நரம்புக்கருவி

ஈ) தொழிற்கருவி

Answer:

அ) தோற்கருவி

Question 31.

“தகக தகதகக தந்தத்த தந்தக்க

என்று தாளம்

பதலை திமிலைதுடி தம்பட்ட மும் பெருக”

– என்ற தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்யும் நூலாசிரியர், நூல்?

அ) அண்ணாமலையார், காவடிச்சிந்து

ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்

இ) திருநாவுக்கரசர், தேவாரம்

ஈ) இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்

Answer:

ஆ) அருணகிரிநாதர், திருப்புகழ்

Question 32.

பறை என்று அழைக்கப்படும் ஆட்டம்……………….

அ) தப்பாட்டம்

ஆ) மயிலாட்டம்

இ) ஒயிலாட்டம்

ஈ) கரகாட்டம்

Answer:

அ) தப்பாட்டம்

Question 33.

……………….குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்றாகப் பறை இடம் பெறுகிறது.

அ) அகத்தியம்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) யாப்பருங்கலம்

Answer:

ஆ) தொல்காப்பியம்

Question 34.

சொல்லுவது போன்றே இசைக்கவல்ல தாளக் கருவி……………….

அ) பறை

ஆ) தவில்

இ) டோலக்

ஈ) உறுமி

Answer:

அ) பறை

Question 35.

தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது………………..

அ) கரகாட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) புலி ஆட்டம்

ஈ) ஒயிலாட்டம்

Answer:

இ) புலி ஆட்டம்

Question 36.

……………….தெருக்கூத்து அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

அ) காளி

ஆ) மாரி

இ) சர்க்கை

ஈ) திரௌபதி

Answer:

ஈ) திரௌபதி

Question 37.

நிகழ்த்தப்பட்ட இடத்தை அடிப்படையாகக் கொண்ட கலை……………….

அ) புலி ஆட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) தெருக்கூத்து

ஈ) குடக்கூத்து

Answer:

இ) தெருக்கூத்து

Question 38.

களத்துமேடுகளில் நிகழ்த்தப்பட்டது எது?

அ) புலி ஆட்டம்

ஆ) காவடியாட்டம்

இ) குடக்கூத்து

ஈ) தெருக்கூத்து

Answer:

ஈ) தெருக்கூத்து

Question 39.

தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்……………….

அ) ந. முத்துசாமி

ஆ) பேரா. லூர்து

இ) வானமாமலை

ஈ) அ.கி. பரந்தாமனார்

Answer:

அ) ந. முத்துசாமி

Question 40.

நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் என்றவர்……………….

அ) ந. முத்துசாமி

ஆ) சங்கரதாசு சுவாமிகள்

இ) பரிதிமாற்கலைஞர்

ஈ) தி.வை. நடராசன்

Answer:

அ) ந. முத்துசாமி

Question 41.

கலைஞாயிறு என்று அழைக்கப்பட்டவர்……………….

அ) தேவநேயப் பாவாணர்

ஆ) ந. முத்துசாமி

இ) தியாகராஜ பாகவதர்

ஈ) எம்.எஸ். சுப்புலட்சுமி

Answer:

ஆ) ந. முத்துசாமி

Question 42.

கூத்துப்பட்டறை ந. முத்துசாமிக்கு இந்திய அரசு வழங்கிய விருது……………….

அ) பத்ம ஸ்ரீ

ஆ) அர்ஜூனா

இ) பத்மபூஷண்

ஈ) பாரத ரத்னா

Answer:

அ) பத்ம ஸ்ரீ

Question 43.

தமிழ்நாடு அரசு ந. முத்துசாமிக்கு வழங்கிய விருது……………….

அ) கலைமாமணி

ஆ) நாடகமாமணி

இ) வ.உ.சி. விருது

ஈ) கம்பன் விருது

Answer:

அ) கலைமாமணி

Question 44.

வேளாண்மை செய்வோரின் கலையாக இருந்து வருவது……………….

அ) காவடியாட்டம்

ஆ) புலி ஆட்டம்

இ) தேவராட்டம்

ஈ) தெருக்கூத்து

Answer:

ஈ) தெருக்கூத்து

Question 45.

அர்ச்சுனன் தபசு எனப்படுவது……………….

அ) பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது

ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது

இ) அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது

ஈ) அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது

Answer:

ஆ) மழை வேண்டி நிகழ்த்தப்படுவது

Question 46.

கதகளி போன்று செவ்வியல் கலையாக ஆக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் கலை

அ) மயிலாட்டம்

ஆ) ஒயிலாட்டம்

இ) தெருக்கூத்து

ஈ) குடக்கூத்து

Answer:

இ) தெருக்கூத்து

Question 47.

தமிழ் இலக்கியங்களில் பாவைக் குறித்த செய்திகள் காணப்படும் கால எல்லை

அ) சங்ககாலம், பதினெட்டாம் நூற்றாண்டு

ஆ) சங்கம் மருவிய காலம், பதினேழாம் நூற்றாண்டு

இ) காப்பியக்காலம், பதினாறாம் நூற்றாண்டு

ஈ) சங்ககாலம், பதினைந்தாம் நூற்றாண்டு

Answer:

அ) சங்ககாலம், பதினெட்டாம் நூற்றாண்டு

Question 48.

மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்……………….

அ) திருக்குறள்

ஆ) நாலடியார்

இ) அகநானூறு

ஈ) புறநானூறு

Answer:

அ) திருக்குறள்

Question 49.

தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் குறிப்பிடுவன……………….

i) திருவாசகம்

ii) பட்டினத்தார் பாடல்கள்

அ) i – சரி

ஆ) ii – சரி

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

Answer:

இ) இரண்டும் சரி

Question 50.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க மையப் பகுதியில் காணப்படும் தெருவின் பெயர்……………….

அ) இராச சோழன் தெரு

ஆ) வன்னி தெரு

இ) ராசேந்திர சோழன் தெரு

ஈ) கம்பன் தெரு

Answer:

அ) இராச சோழன் தெரு

Question 51.

மலேசியாவில் “இராச சோழன் தெரு” உள்ளதைப் பற்றிக் குறிப்பிடும் மலர்……………….

அ) முதலாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

ஆ) இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

இ) நான்காம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

Answer:

ஈ) ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்

குறுவினா

Question 1.

நிகழ்கலை என்றால் என்ன?

Answer:

சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாக் கூறுகளாகத் திகழ்பவை |நிகழ்கலைகள்.

Question 2.

இலக்கியத்தில் கரகத்தின் பங்கு யாது?

Answer:

புறநானூறு : ‘

நீரற வறியாக் கரகத்து’ என்னும் புறநானூற்றுப் பாடலடியில் கரகம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

சிலப்பதிகாரம் :

மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில் ஒன்று ‘குடக்கூத்து’ எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

Question 3.

தமிழகத்தில் கரகாட்டம் நிகழ்த்தப்படும் மாவட்டங்கள் யாவை?

Answer:

திருநெல்வேலி

திண்டுக்கல்

மதுரை

தஞ்சாவூர்

திருச்சி

கோயம்புத்தூர்

Question 4.

மயிலாட்டம் என்றால் என்ன?

Answer:

மயில் வடிவுள்ள கூட்டுக்குள் ஒருவர் தன் உருவத்தை மறைத்துக் கொண்டு நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடும் ஆட்டமே மயிலாட்டம்.

கரகாட்டத்தின் துணையாட்டம் மயிலாட்டமே.

Question 5.

மயிலாட்டத்தில் பின்பற்றப்படும் அசைவுகள் யாவை?

Answer:

ஊர்ந்து ஆடுதல்

தாவியாடுதல்

மிதந்து ஆடுதல்

இருபுறமும் சுற்றியாடுதல்

இறகை விரித்தாடுதல்

அகவுதல்

தலையைச் சாய்த்தாடுதல்

தண்ணீர் குடித்துக் கொண்டே ஆடுதல்

Question 6.

காவடியாட்டம் என்றால் என்ன?

Answer:

‘கா’ என்பதன் பொருள் பாரந்தாங்கும் கோல்.

இருமுனைகளிலும் சம எடைகளைக்கட்டிய தண்டினைத் தோளில் சுமந்து ஆடுவது காவடியாட்டம்.

Question 7.

காவடியின் அமைப்புக்கேற்ப அவை எந்தெந்தப் பெயர்களில் அழைக்கப்படுகின்றன?

Answer:

மச்சக்காவடி

தேர்க்காவடி

சர்ப்பக்காவடி

பறவைக்காவடி

பூக்காவடி

Question 8.

காவடியாட்டம் ஆடப்படும் நாடுகள் எவை?

Answer:

இலங்கை , மலேசியா உட்பட தமிழர் வாழும் பிற நாடுகள்.

Question 9.

ஒயிலாட்டம் என்றால் என்ன?

Answer:

ஒரே நிறத்துணியை முண்டாசு போலக் கட்டுதல்.

காலில் சலங்கையை அணிதல்.

சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஒயிலாக ஆடும் குழு ஆட்டம்.

கம்பீரத்துடன் ஆடுதல் தனிச்சிறப்புடையது.

Question 10.

ஒயிலாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் இசைக் கருவிகள் யாவை?

Answer:

தவில், தப்பு, சிங்கி, தோலால் கட்டப்பட்ட குடம், டோலக்

Question 11.

தேவராட்டம் என்றால் என்ன?

Answer:

வானத்துத் தேவர்கள் ஆடிய ஆட்டம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

இது ஆண்கள் மட்டுமே ஆடும் ஆட்டம்.

Question 12.

தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி குறித்து எழுதுக.

Answer:

தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி தேவதுந்துபி.

இதன் பொதுவான பெயர் உறுமி.

Question 13.

தேவராட்டத்திற்குரிய உடை மற்றும் அலங்காரம் குறித்து எழுதுக.

Answer:

உடை :

இடையிலும் தலையிலும் சிறுதுணி கட்டுவர்.

வேட்டி அணிந்திருப்பர்.

அலங்காரம் :

கால்களில் சலங்கை அணிவர்.

எளிய ஒப்பனை செய்து கொள்வர்.

Question 14.

சேவையாட்டம் என்றால் என்ன?

Answer:

தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற கலை சேவையாட்டம்.

இசைக்கருவிகள் :

சேவைப்பலகை, சேமக்கலம், ஜால்ரா.

இசைச்சார்பு கலையாகவும், வழிபாட்டுக் கலையாகவும் உள்ளது.

Question 15.

பொய்க்கால் குதிரையாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

Answer:

புரவி ஆட்டம்

கச்சி கொடி (இராஜஸ்தான்)

புரவி நாட்டியம்

குதிரைக்களி (கேரளா)

Question 16.

தப்பாட்டம் என்றால் என்ன? அதற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

Answer:

தப்பு :

தப்பு என்ற தோற்கருவியை இசைத்துக் கொண்டே, அதன் இசைக்கேற்ப ஆடும் ஆட்டமே தப்பாட்டம்.

வேறு பெயர்கள் :

தப்பாட்டம், தப்பு, தப்பட்டை, பறை.

‘தப் தப்’ என ஒலிப்பதால் தப்பாட்டம் எனப் பெயர் பெற்றது.

Question 17.

தப்பாட்டம் நிகழ்த்தப்படும் இடங்களைக் கூறுக.

Answer:

கோவில் திருவிழா

விளம்பர நிகழ்ச்சி

திருமண விழா

விழிப்புணர்வு முகாம்

இறப்பு

Question 18.

‘பறை’ குறிப்பு வரைக.

Answer:

பறை – தமிழிசைக் கருவி.

பறை என்பதற்குப் பேசு என்பது பொருள்.

பேசுவதை இசைக்கப்படும் தாளக்கருவி பறை.

கருப்பொருள் :

தொல்காப்பியர் குறிப்பிடும் கருப்பொருள்களில் ஒன்று பறை.

Question 19.

தப்பாட்டத்திற்குரிய ஆட்டக் கூறுகள் யாவை?

Answer:

வட்டமாக ஆடுதல்

உட்கார்ந்து எழுதல்

குதித்துக் குதித்து ஆடுதல்

நடையாட்டம்

இரண்டு வரிசையாக எதிர் எதிர் திசையில் நின்று ஆடுதல்.

Question 20.

புலியாட்டம் என்றால் என்ன?

Answer:

தமிழரின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலியாட்டம்.

பாட்டும் வசனமும் இல்லாத ஆட்டங்களில் ஒன்று.

புலியைப் போன்று கறுப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளையிட்டுத் துணியால் ஆன வாலை இடுப்பில் கட்டி ஆடுவர்.

Question 21.

புலியாட்டத்திற்குரிய அசைவுகளைக் கூறுக.

Answer:

புலியைப் போல நடத்தல்

எம்பிக் குதித்தல்

பதுங்குதல்

நாக்கால் வருடுதல்

பாய்தல்

பற்கள் தெரிய வாயைப் பிளந்து உறுமுதல்.

Question 22.

தெருக்கூத்து – குறிப்பு வரைக.

Answer:

ஆடுகளம் :

திறந்த வெளியை ஆடுகளமாக்கி ஆடை, அணி ஒப்பனையுடன் தெருச்சந்திப்புகளிலும் களத்து மேடுகளிலும் நடத்தப்படும் நடனம்.

ஒருங்கிணைப்பு :

இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடுகளுடன் கதையை ஒருங்கிணைத்து வழங்குவர்.

Question 23.

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி பெற்ற விருதுகள் யாவை?

Answer:

இந்திய அரசின் தாமரைத்திரு விருது. (பத்மஸ்ரீ)

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது.

Question 24.

‘அருச்சுனன் தபசு’ – குறிப்பு வரைக.

Answer:

மழை வேண்டி நிகழ்த்தப்படும் தெருக்கூத்தை அருச்சுனன் தபசு என்பர்.

Question 25.

தோற்பாவைக் கூத்து என்றால் என்ன?

Answer:

தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை எனப் பெயர் பெற்றது.

தோலில் செய்த வெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்துவர்.

கதைக்கேற்ப மேலும் கீழும், பக்கவாட்டிலும் அசைத்துக் காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.

Question 26.

தோற்பாவைக் கூத்து எவ்வடிவில் மாற்றம் பெற்றுள்ளது?

Answer:

கையுறைப் பாவைக்கூத்து, பொம்மலாட்டம்.

Question 27.

கரகாட்டத்தில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் யாவை?

Answer:

நையாண்டி மேளம், தவில், நாகசுரம், பம்பை.

Question 28.

கரகாட்டத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் யாவை?

Answer:

கரகம், கும்பாட்டம், குடக்கூத்து.

சிறுவினா

Question 1.

பொய்க்கால் குதிரையாட்டம் என்னும் நிகழ்கலை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.

Answer:

“போலச் செய்தல்” பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று.

மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரைவடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்துகொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம்.

அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம், ‘புரவி ஆட்டம்’, ‘புரவி நாட்டியம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வாட்டம் இராஜஸ்தானில், ‘கச்சிக்கொடி’ என்றும் கேரளத்தில், ‘குதிரைக்களி’ என்றும் அழைக்கப்படுகிறது.

Question 2.

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி குறித்தெழுதுக.

Answer:

 தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர் தான் கூத்துப்பட்டறை ந.முத்துசாமி.

“நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்” என்றார்.

இவர் தமிழ்நாட்டின் வழிவழி நாடகமுறையான கூத்துக்கலையின் ஒப்பனை முறை, கதை சொல்லும் முறைகளையும் எடுத்துகொண்டு புதுவிதமான நாடகங்களை உருவாக்கினார்.

நாடகத்தில் பயன்படுத்தும் நேரடி இசைமுறையை அறிமுகம் செய்து இசையிலும் மாற்றங்களை நிகழ்த்தினார்.

இவரின் நாடகங்கள் பெரும் சமூக அரசியல் மாற்றங்களைப் பேசின.

இவர் இந்திய அரசின் தாமரைத்திரு விருதையும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். நெடுவினா

Question 1.

மூன்று நிகழ்கலை கலைஞர்களை நேர்முகம் கண்டு அவர்களது கருத்துகளையும் அவர்களது மறுவாழ்விற்கான வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றையும் குறிப்பிட்டு எழுதுக.

Answer:

அறிமுகம்:

நிகழ்கலை கலைஞர்களில் கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் ஆகியவற்றை நிகழ்த்திக்காட்டும் கலைஞர்களை நேரில் கண்டு, அவர்களின் வாழ்வியல் சூழல்களையும், கலை நிலையையும் குறித்துக் கேட்டறிந்தேன்.

கலைகள்:

நாட்டார் வழக்காறுகளை ஆழமாக ஆய்வு செய்த நா.வானமாமலை கூற்றுப்படி, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 1,026 கலைகள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அவை இன்றைக்கு ஒவ்வொன்றாக மறைந்து வருவதோடு, எளிதில் எண்ணிவிடக் கூடிய அளவில் குறைந்துவிட்டதையும் அறிய முடிகிறது.

பெரியசவால்:

நிகழ்கலை கலைஞர்கள் சிறுசிறு குழுக்களாக ஒருங்கிணைக்கப்படாமல் எல்லா மாவட்டங்களிலும் இருக்கிறார்கள் என்பதையும், எப்போதாவது கிடைக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி நிகழ்கலைகளை நிகழ்த்தினாலும், அதனால் வாழ்வை நடத்துவதற்குப் போதுமான வருமானம் கிட்டுவதில்லை. இதனால் வறுமையில் சிக்கியுள்ள பெரும்பாலான கலைஞர்களை வேறுபணிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் நவீன மின்னணு ஊடகங்கள் கோலோச்சுகின்ற இக்காலக்கட்டத்தில் நாட்டுப்புறக்கலைகளும், அவற்றை நிகழ்த்துகின்ற கலைஞர்களும் பெரிய சவால்களை எதிர்காக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காப்பாற்றுதல்:

நிகழ்கலைகளை நிகழ்த்துவதற்கான ஆடை, ஆபரணங்கள் செலவும் அதிகமாக உள்ளது. அரசும் மக்களும் தங்கள் கலைகளை ஊக்குவித்து, வாய்ப்பளித்து, வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதமாய் உதவினால் மட்டுமே கலைகளையும், கலைஞர்களையும் காப்பாற்ற முடியும் என்பது அம்மூன்று கலைஞர்களின் ஒருமித்த குரலில் வெளிப்பட்டது.

அரசின் உதவி:

தமிழகமெங்கும் உள்ள கலைஞர்களை ஒவ்வொரு கலையின் அடிப்படையிலும் ஆவணப்படுத்தி அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்குவது மிகவும் தேவையான ஒன்றாகும். நிகழ்கலைகளை மீட்டுருவாக்கம் செய்கின்ற வகையில், கிராமம் கிராமமாகத் தேடிச் சென்று கலைகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். கலைக்குழுக்களை அரசுத்துறையில் முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். எல்லாக் கலைஞர்களுக்கம் அடையாள அட்டை வழங்கி ஊக்குவிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

செய்ய வேண்டுவது:

நிகழ்கலைகளை ஆவணப்படுத்துவதற்கும், கலைகள் குறித்த வகுப்புகள், கருத்தரங்குகள், விவாதங்கள், உரையாடல் நடத்தவும் நிகழ்கலைகளுக்கான தனிப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு, நிகழ்கலைகளுக்கான கலைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அரசின் சார்பில் நிகழ்கலைகளுக்கென்று தனிவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூ ரிகளிலும் நிகழ்கலைகளை நடத்திட வேண்டும்.

நிறைவு:

தமிழரின் பண்பாட்டு அடையாளங்களாக விளங்கும் நிகழ்கலைகளையும், கலைஞர்களையும் ஆதரித்துக் காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உரியது என்பது திண்ணம்.