பூத்தொடுத்தல்-10th Std -Tamil - Book Back Questions and Answers
கற்பவை கற்றபின்
Question 1.
ஒவ்வொரு நாளும் நீங்கள் பார்க்கும் காட்சிகளில் / எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் கண்டுணரும் அழகை மூன்று நிமிடங்கள் சொற்களில் விவரிக்க.
Answer:
காக்கையிடம் உணர்ந்தது :
தினமும் காலையில் வந்து மரத்தின் மீது அமர்ந்திருக்கும் ஒரு காக்கைக்கு உணவிடுவது வழக்கம். காக்கையின் இடது கால் ஊனம். இடது பக்க இறக்கை சரிந்திருக்கும். தன் உடன் வரும் காக்கைகள் செய்யும் அனைத்துச் செயல்களையும் ஊனமுற்ற காக்கையும் செய்ய தெரிந்து கொண்டது குறையிருப்பினும் குறையை மறந்து புதிய முயற்சியில் ஈடுபட வேண்டும்.
நிறைவு விழாவில் உணர்ந்தது :
ஒரு பள்ளியில் சிற்றுண்டி உணவகம் நடத்திவந்த தம்பதியினர் வயது முதிர்வு காரணமாக தங்கள் பணியை நிறைவு செய்யும் பொருட்டு காலை இறை வணக்கத்திற்குப் பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இனிப்பைப் பெற்றுக் கொண்ட அனைவரும் நன்றி என்ற ஒரு வார்த்தையை மட்டுமே கூறினர். ஆனால் ஒரு சிறுவன் மட்டும், “பாட்டி உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றான். அச்சிறுவன் பிறர் மீது காட்டும் அன்பும் அக்கறையும் பெரியவர்களிடம் இல்லையே.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால்
ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால்
ஈ) காம்பு முறிந்தால்
Answer:
ஆ) தளரப் பிணைத்தால்
குறுவினா
Question 1.
“சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள்” – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.
Answer:
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கிற ஒல்லித் தண்டுகளாகக் குறிப்பிடப்படுவோர் பெண்கள். இவர்கள் அமைதியான முறையில் இவ்வுலகத்தைத் தாங்கி நிறுத்தப் போராடும் போராளிகள்.
சிறுவினா
Question 1.
நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
Answer:
ஒப்பீடு
நவீன கவிதையில் பூவின் மென்மை, அழகு, நளினத்தன்மை, எதற்கும் வருந்தாமல் சிரிக்கும் மலரைப் பெண்ணோடு ஒப்பிட்டுள்ளார்.
நாட்டுப்புறப் பாடலில்
பெண் தெய்வமாகிய மாரியோடு ஒப்பிட்டுப் பாடப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரு பாடலிலும் பெண்ணை மலரோடு ஒப்பிட்டுப் பாடுவதை அறியமுடிகிறது.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு.
இறுக்கி – வினையெச்சம்
தளர – பெயரெச்சம்
பலவுள் தெரிக
Question 1.
இந்தப் பூவைத்தொடுப்பது எப்படி? என்ற கவிதையை எழுதியவர்?
அ) உமா மகேஸ்வரி
ஆ) இரா. மீனாட்சி
இ) இந்திர பார்த்தசாரதி
ஈ) தாமரை
Answer:
அ) உமா மகேஸ்வரி
Question 2.
கவிஞர் உமா மகேஸ்வரி எங்குப் பிறந்தார்?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) சேலம்
ஈ) தேனி
Answer:
அ) மதுரை
Question 3.
உமா மகேஸ்வரி, தற்போது வாழ்ந்து வருகின்ற மாவட்டம் யாது?
அ) தேனி, ஆண்டிபட்டி
ஆ) மதுரை, அனுப்பானடி
இ) தஞ்சாவூர், வல்லம்
ஈ) திருச்சி, உறையூர்
Answer:
அ) தேனி, ஆண்டிபட்டி
குறுவினா
Question 1.
‘பூத்தொடுத்தல்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியரைப் பற்றி நீ அறிந்தவற்றைக் கூறுக.
Answer:
ஆசிரியர் பெயர் : கவிஞர் உமா மகேஸ்வரி
பிறப்பு : மதுரை
வாழ்ந்து வரும் ஊர் : தேனி, ஆண்டிப்பட்டி.
நூல்கள் : நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை.
Question 2.
பூக்களைத் தொடுக்கும் போது இறுக்கி முடிச்சிடுவதாலும் தளரப் பிணைப்பதாலும் நிகழ்வது என்ன?
Answer:
இறுக்கி முடிச்சிடுவதால் காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்.
Question 3.
பூத்தொடுத்தல் என்னும் கவிதையில் பூவை என்ற சொல் யாரைக் குறிக்கிறது? அப்பூவைத் தொடுப்பது எப்படி?
Answer:
பூவை என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது.
மனமாகிய நுட்பமான நூலால் மட்டுமே தொடுக்க முடியும்