Ads

ஏர் புதிதா?-10th Std -Tamil - Book Back Questions and Answers

ஏர் புதிதா?-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.

‘முதல் மழை விழுந்தது’ தொடர்ந்து நிகழும் உழவுச் செயல்களை ‘ஏர் புதிதா?’ கவிதை கொண்டு வரிசைப்படுத்திப் பேசுக. வணக்கம்!

Answer:

உழுவோர் உலகுக்கு அச்சாணி எனப் போற்றும் வகையில்,

உழவர் பெருமக்களை மனம் மகிழச்செய்யும் வகையில் முதல் மழை நிலத்திலே விழுந்து விட்டது.

மழையினால் நம் நிலம் சரியான நிலையில் பண்பட்டுள்ளது.

நண்பர்களே! சோம்பலினால் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்காதீர்கள்.

விடிந்தது, விரைந்து எழுந்துவா நண்பா! ஏரைப்பூட்டி வயலுக்கு விரைந்து செல்.

காடு நமக்குப் புதிதன்று. கரையும் நம் வசப்பட்டது தான். ஏர் நமக்குப் புதிதன்று.

காளைகளும் புதியவையல்ல. பொன் ஏர் தொழுது, மாட்டைப் பூட்டி நிலத்தை உழுவோம்.

மண்புரளும் வகையில் அழுந்த நன்கு உழுவோம். மேலும் மழை பொழியும்.

நம் நிலமும் நெகிழ்ந்து குளிரும்.

புதிய ஊக்கத்துடனும், புதிய வலுவுடனும் உழைப்போம். நாற்று நிமிர்ந்து வளரும்.

எல்லை தெய்வம் நம்மைக் காக்கும்.

கவலைகள் இனி இல்லை. புதிய விடியலுக்கு அடையாளமாய் கிழக்கும் வெளுத்து விட்டது.

நிறைவாக,

உழைப்போம்! நாமும் உயர்வோம்!! நாட்டையும் உயர்த்துவோம்!!! என்று கூறி விடைபெறுகிறேன்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) உழவு, மண், ஏர், மாடு

ஆ) மண், மாடு, ஏர், உழவு

இ) உழவு, ஏர், மண், மாடு

ஈ) ஏர், உழவு, மாடு, மண்

Answer:

இ) உழவு, ஏர், மண், மாடு

சிறுவினா

Question 1.

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

Answer:

• முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈரத்தால் பண்பட்டது.

விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலேகாளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடனும், வலிமையுடனும் உழைத்தனர். நாற்று நட்டனர்.

மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

தொழுது, விரைந்து, அமுத்து – வினையெச்சம்

நண்பா – விளிவேற்றுமை

பகுபத உறுப்பிலக்கணம்.

விரைந்து- விரை + த்(ந்) + த் + உ

விரை – பகுதி

த்(ந்) – சந்தி (ந்) ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

பலவுள் தெரிக

Question 1.

சங்கத்தமிழரின் திணை வாழ்வு எதை அடிப்படையாகக் கொண்டது?

அ) நெசவை

ஆ) போரினை

இ) வேளாண்மையை

ஈ) கால்நடையை

Answer:

இ) வேளாண்மையை

Question 2.

தமிழரின் தலையான தொழிலாகவும், பண்பாடாகவும் திகழ்வது ………………………….

அ) கல்வி

ஆ) உழவு

இ) நெசவு

ஈ) போர்

Answer:

ஆ) உழவு

Question 3.

தமிழர் பண்பாட்டின் மகுடமாகத் திகழ்வது ………………………….

அ) நாகரிகம்

ஆ) கலை

இ) உழுதல்

ஈ) பொன் ஏர் பூட்டுதல்

Answer:

ஈ) பொன் ஏர் பூட்டுதல்

Question 4.

பொன்ஏர் பூட்டுதல் நடத்தப்படும் மாதம் ………………………….

அ) சித்திரை

ஆ) ஆனி

இ) ஆடி

ஈ) தை

Answer:

அ) சித்திரை

Question 5.

‘ஏர் புதிதா?’ என்னும் கவிதை இடம் பெற்ற நூல் ………………………….

அ) அகலிகை

ஆ) ஆத்மசிந்தனை

இ) கு.ப.ரா. படைப்புகள்

ஈ) ஏர்முனை

Answer:

இ)கு.ப.ரா.படைப்புகள்

Question 6.

கு.ப.ரா. பிறந்த ஊர் ………………………….

அ) தஞ்சை

ஆ) மதுரை

இ) கும்பகோணம்

ஈ) நெல்லை

Answer:

இ) கும்பகோணம்

Question 7.

கு.ப.ரா. பிறந்த ஆண்டு ………………………….

அ) 1902

ஆ) 1912

இ) 1915

ஈ) 1922

Answer:

அ) 1902

Question 8.

கு.ப.ரா ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் ஒன்று. ………………………….

அ) தமிழ் ஊழியன்

ஆ) தினமணி

இ) இந்தியா

ஈ) கிராம ஊழியன்

Answer:

ஈ) கிராம ஊழியன்

Question 9.

‘கடுகி செல்’ – இதில் ‘கடுகி’ என்பதன் பொருள் ………………………….

அ) செல்லுதல்

ஆ) மெதுவாக

இ) விரைந்து

ஈ) இயல்பாக

Answer:

இ) விரைந்து

Question 10.

நிலம் சிலிர்க்கும், நாற்று ………………………….

அ) வளரும்

ஆ) வளையும்

இ) நிமிரும்

ஈ) நெகிழும்

Answer:

இ) நிமிரும்]

Question 11.

ஊக்கம் புதிது, உரம் புதிது – இதில் உரம் என்ற சொல் குறிப்பது ………………………….

அ) வலிமை

ஆ) பயிர் உரம்

இ) சத்து

ஈ) வித்து

Answer:

அ) வலிமை

Question 12.

உலகத்தார்க்கு அச்சாணி என்போர் ………………………….

அ) தொழுவோர்

ஆ) கற்போர்

இ) உழுவோர்

ஈ) போரிடுவோர்

Answer:

இ) உழுவோர்

Question 13.

பொருத்துக.

1. முதல் மழை – அ) பதமாகியது

2. மேல்மண் – ஆ) முளைத்தது

3. வெள்ளி – இ) தொழு

4. பொன்னேர் – ஈ) விழுந்தது

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 14.

‘வெள்ளி முளைத்திடுது விரைந்து போ நண்பா’ என்று பாடியவர் ………………………….

அ) மா.பொ .சி

ஆ) கு.ப.ராஜகோபாலன்

இ) சுரதா

ஈ) பாரதிதாசன்

Answer:

ஆ) கு.ப.ராஜகோபாலன்

Question 15.

தவறான ஒன்றினைக் கண்டறிக.

அ) மண் புரளும்

ஆ) மேற்கு வெளுக்கும்

இ) மழை பொழியும்

ஈ) எல்லைத் தெய்வம் காக்கும்

Answer:

ஆ) மேற்கு வெளுக்கும்]

Question 16.

‘பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்

நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை’ என்று பாடியவர்?

அ) மா.பொ.சி

ஆ) கு.ப.ராஜகோபாலன்

இ) சுரதா

ஈ) பாரதிதாசன்

Answer:

ஆ) கு.ப.ராஜகோபாலன்

குறுவினா

Question 1.

கு.ப.ராவின் படைப்புகள் அடங்கிய நூல் தொகுப்புகளைக் குறிப்பிடுக.

Answer:

அகலிகை, ஆத்மசிந்தனை.

Question 2.

கு.ப.ராஜகோபாலன் பணிபுரிந்த இதழ்கள் யாவை?

Answer:

தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் – ஆகியவையாகும்.

Question 3.

பொன் ஏர் பூட்டுதல் விளக்குக.

Answer:

வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு

நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல்’ ஆகும். • இந்நிகழ்வு தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும்.

Question 4.

கு.ப.ராஜகோபாலனின் பன்முகங்களைக் குறிப்பிடுக.

Answer:

சிறுகதை எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்.

Question 5.

விரைந்து போ நண்பா எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?

Answer:

முதல் மழை விழுந்துவிட்டதாலும், மேல் மண் பக்குவமானதாலும், வெள்ளி முளைத்ததாலும் ஏறினைப் பூட்ட விரைந்து போ என்கிறார் கவிஞர்.

Question 6.

மண் எப்போது புரளும்?

Answer:

மாட்டைத் தூண்டி, கொழுவை (கலப்பை இரும்பை) அமுத்தினால் மண் புரளும்.

சிறுவினா

Question 1.

‘பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில்

நல்லவேளையில் நாட்டுவோம் கொழுவை’ இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

Answer:

இடம் சுட்டல்:

கு.ப.ராஜகோபாலனின் ‘கு.ப.ரா. படைப்புகளில் ஏர் புதிதா? என்ற கவிதைகளில் இவ்வரிகள் இடம் பெறுகின்றன.

பொருள் விளக்கம்:

பொழுது விடிந்து ஏரின் அடியில் பொன்னொளி பரப்பும் நல்ல காலைப் பொழுதில் ஏர் முனையின் கலப்பை இரும்பை நிலத்தில் நாட்டுவோம்.