ஒருவன் இருக்கிறான்-10th Std -Tamil - Book Back Questions and Answers
கற்பவை கற்றபின்
Question 1.
சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளைப் பட்டியலிட்டு அவர்கள் செய்த சமூகப்பணி குறித்துக் கலந்துரையாடுக.
Answer:
கலந்துரையாடல்
கலந்துரையாடுபவர்கள்: மதியழகன், புனிதா
மதியழகன் : புனிதா! தங்கம்மா என்ற சமூகச் சேவையாளர் எங்கு எப்போது பிறந்தார் என்று உனக்குத் தெரியுமா?
புனிதா : தெரியாது மதியழகா… நீ சொல் தெரிந்துகொள்கிறேன்.
மதியழகன் : இவர் சனவரி 7ஆம் நாள் 1925இல் யாழ்ப்பாணம் அருகில் உள்ள ஓர் ஊரில் பிறந்தவர். சைவ சித்தாந்த தத்துவங்களில் ஈடுபாடுடையவர்.
புனிதா : அவரது சமூகப் பணிகள் பற்றி சொல்கிறாயா?
மதியழகன் : ஓ!… சொல்கிறேன். 1977இல் ஓர் ஆலய நிர்வாகப் பதவியை முழுமையாக எடுத்துக்கொண்டு ஆன்மீகத்தின் வாயிலாக அறச்சாலைகள், நந்தவனம், தீர்த்த தடாகம் உருவாக்கினார். ஆதரவற்ற சிறுமிகளுக்குத் “துர்க்காபுரம் மகளிர் இல்லம்” நிறுவினார். அன்னபூரணி அன்னதான மண்டபம் அமைத்தார். வயோதிகர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அன்னையர் இல்லம், துர்க்காதேவி மணிமண்டபம் என்பனவற்றை ஆரம்பித்து சமூகத் தொண்டாற்றினார்.
புனிதா : ஓ!… இவ்வளவு சேவைகள் செய்திருக்கிறார்களா… அதனால்தான் அத்தனைவிருதுகளும்,பட்டங்களும் பெற்றாரோ.
மதியழகன் : ஆம் புனிதா. இன்னும் இதுபோன்ற ஆளுமைகளின் சிறப்புகளை மீண்டும் நாம் சந்திக்கும் போது பேசலாமா?
புனிதா : ஓ!… பேசலாம். இப்போது புறப்படுகிறேன். நன்றி டா…..
Question 2.
“அகநக நட்பதே நட்பு” – என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழல்களைச் சுவைபட எழுதுக.
Answer:
“அகநக நட்பதே நட்பு”
எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் எனக்கு நண்பன் என்று புறத்தே பார்ப்பவர்களுக்குத் தெரியாது. நண்பர்கள் என்று யாரும் கண்டுபிடித்ததும் இல்லை.
“முகநக நட்பது நட்பன்று” என்பதை நாங்கள் இருவரும் உணர்ந்து இருந்தோம்.
ஒருநாள் வகுப்பறைக்கு அறிவிப்பு ஒன்று வந்தது. ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்க பணம் கொடுப்பது தொடர்பான அறிவிப்பு அது. எங்கள் வகுப்பில் அனைவரும் கொடுத்து விட்டோம். என் நண்பனைத் தவிர…
அவன் என்னைப் பார்த்தான்… அன்று நான் மதிய உணவு எடுத்துவரவில்லை . கடையில் சாப்பிடுவதற்காக வைத்திருந்த பணத்தை அவனுக்காகக் கொடுத்துவிட்டேன். அவன் கொண்டு வந்திருந்த உணவைப் பகிர்ந்து உண்டோம். எல்லோரும் வியந்தனர்.
எப்படிடா நீங்க இரண்டுபேரும்… என்று கேட்டவர்களுக்கு இருவரும் ஒரே மாதிரி பதில் சொன்னோம்.
“முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு”
பாடநூல் வினாக்கள்
நெடுவினா
Question 1.
அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.
Answer:
மனித நேயம் கொண்ட கதைமாந்தர் – வீரப்பன்
குறிப்புச் சட்டம்
முன்னுரை
அன்பாளர்
கொடையாளர்
பண்பாளர்
முடிவுரை
முன்னுரை:
கு.அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் வீரப்பன். அவர் தான் வறுமைப்பட்ட போதும் தன் அன்பையும் அருளையும் கொண்டு நட்பைப் போற்றினார்.
அன்பாளர்:
வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகுகடையில் வேலை செய்து வந்தார். அவர் ஏழையாக இருந்தாலும் நண்பன்குப்புசாமிமீது மிகுந்த அன்புவைத்திருந்தார். அனாதையானகுப்புசாமிக்கு அவன் உறவினர்களும் உதவ முன்வரவில்லை. ஆனால் தன்னுடைய வறுமையையும் பொருட்படுத்தாமல் வீரப்பன், குப்புசாமியுடன் மனித நேயத்துடன் இருக்கின்றார்.
கொடையாளர்:
குப்புசாமி நோய்வாய்ப்பட்டு வேலை இழந்தபோது வீரப்பன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு கொடுப்பார். மேலும், தான் கடன் வாங்கி அதனைக் குப்புசாமிக்குக் கொடுப்பார். சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கடிதம் ஒன்றையும் மூன்று ரூபாயையும் குப்புசாமியிடம் கொடுத்து அனுப்பினார் வீரப்பன்.
பண்பாளர்:
வீரப்பன் குப்புசாமி குணமடைய நாள்தோறும் கோயிலுக்குச் சென்று வேண்டுகிறார். அவருக்கு வேலை இல்லாதபோதும் நண்பன் குப்புசாமிக்குக் கொடுக்க ஒருவரிடம் மூன்று width=”197″ height=”19″ கடன் வாங்கி சென்னைக்குச் செல்லும் ஆறுமுகத்திடம் கொடுத்து அனுப்புகிறார். குப்புசாமியைப் பார்க்க வரலாம் என்றால், இந்த மூன்று width=”197″ height=”19″ பேருந்துக்கு செலவாகிவிடும் என்பதால்தான் கொடுத்தனுப்புகிறேன். இன்னொரு இடத்திலும் பணம் கேட்டிருப்பதாகவும் கிடைத்தவுடன் குப்புசாமியைப் பார்க்க விரைவாக வருவதாகவும் வீரப்பன் தெரிவித்தார்.
முடிவுரை: ஏழ்மையிலும் நட்பைப் பாராட்டி உதவும் வீரப்பன், மனித நேயத்தின் மாமகுடமாகத் திகழ்கின்றார். அவரின் செயல்பாடுகள் கல் மனதையும் கரைத்து மனிதநேயத்தைச் சுரக்க வைக்கின்றது. ஒருவன் இருக்கிறான், மனித நேயத்திற்குச் சான்றாக அவன் இருக்கின்றான்.
கூடுதல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
“ஒருவன் இருக்கிறான்” கதையின் ஆசிரியர் ………………… ஆவார்.
அ) அழகர்சாமி
ஆ) அழகிரிசாமி
இ) அண்ணாதுரை
ஈ) சுஜாதா
Answer:
ஆ) அழகிரிசாமி
Question 2.
அரசுப் பணியை உதறிவிட்டு முழுதாக எழுத்துப்பணியை மேற்கொண்டவர் …………………
அ) அழகிரிசாமி
ஆ) புதுமைப்பித்தன்
இ) ஜெயகாந்தன்
ஈ) சுஜாதா
Answer:
அ) அழகிரிசாமி
Question 3.
…………………வரிசையில் மூத்தவர் அழகிரிசாமி ஆவார்.
அ) வானம்பாடி
ஆ) மணிக்கொடி
இ) கரிசல் எழுத்தாளர்கள்
ஈ) கணையாழியில் எழுதியவர்
Answer:
இ) கரிசல் எழுத்தாளர்கள்
Question 4.
அழகிரிசாமி எந்நாட்டில் படைப்பாளர்களுக்கான படைப்புப் பயிற்சி அளித்தார் …………………
அ) தாய்லாந்து
ஆ) இந்தியா
இ) இலங்கை
ஈ) மலேசியா
Answer:
ஈ) மலேசியா
Question 5.
சரியான கூற்றுகளைத் தேர்க.
i) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களைப் படைக்கவில்லை.
ii) கு. அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.
iii) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்.
அ) மூன்று கூற்றுகளும் சரியானவை
ஆ) கூற்று (ii), (ii) சரியானவை
இ) கூற்று (iii) மட்டும் சரி
ஈ) மூன்று கூற்றுகளும் தவறானவை.
Answer:
ஆ) கூற்று (i), (iii) சரியானவை
Question 6.
ஒருவன் இருக்கிறான் கதை வெளியான இதழ் …………………
அ) கலைமகள்
ஆ) கணையாழி
இ) குமுதம்
ஈ) ஆனந்தவிகடன்
Answer:
அ) கலைமகள்
Question 7.
“ஒருவன் இருக்கிறான்” கதை வெளியான ஆண்டு …………………
அ) 1956
ஆ) 1966
இ) 1976
ஈ) 1979
Answer:
ஆ) 1966
Question 8.
வீரப்பன் குப்புசாமிக்கு கொடுத்துவிட்ட பணம் …………………
அ) ஒரு width=”197″ height=”19″
ஆ) மூன்று width=”197″ height=”19″
இ) நான்கு width=”197″ height=”19″
ஈ) ஐந்து width=”197″ height=”19″
Answer:
ஆ) மூன்று width=”197″ height=”19″