திருவிளையாடற் புராணம்-10th Std -Tamil - Book Back Questions and Answers
கற்பவை கற்றபின்
Question 1.
இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தை நாடகமாக்கி வகுப்பில் நடித்துக் காட்டுக.
Answer:
இடைக்காடனார் : மன்னா, வாழ்க! நான் கபிலனின் நண்பன். நான் இயற்றிய பாடலை உங்கள் முன் பாட விரும்புகின்றேன்.
குலேசபாண்டியன் : (கர்வத்தோடும்) பாடும். (இடைக்காடனார் பாடலைப் பாடுகின்றார்)
இடைக்காடனார் : (இறைவனிடம் முறையிடல்) இறைவா! பாண்டியன் என் பாடலைப் பொருட்படுத்தாமல் உம்மையும் பார்வதிதேவியையும் அவமதித்தான்.
இறைவன் : கபிலருக்காகவும் இடைக்காடனாருக்காகவும், இந்தக் கோவிலை விட்டுச் செல்கின்றேன். (இறைவன் கோவிலை விட்டு வெளியேறல்)
குலேசபாண்டியன் : இறைவனே! என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? வேதங்களைப் பயின்றவர் நல்லொழுக்கத்தில் தவறினாரா? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியேன்.
இறைவன் : இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர வேறு குற்றம் இல்லை. இடைக்காடனார் மீது கொண்ட அன்பால் இங்கு வந்தோம்.
குலேசபாண்டியன் : பார்வதிதேவியை ஒரு பாகத்தில் கொண்ட பரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா? என் குற்றத்தைப் பொறுக்க.
(புலவர்களை ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர வைத்தல்)
குலேசபாண்டியன் : புலவர்களே என்னை மன்னியும். இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுக்க .
கபிலர் மற்றும் இடைக்காடனார் : மன்னா! நீர் கூறிய அமுதம் போன்ற குளிர்ந்த சொல்லால் எங்கள் சினமான தீ தணிந்தது.
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
Question 1.
இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ……………………. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்…………………
அ) அமைச்சர், மன்னன்
இ) இறைவன், மன்னன்
ஆ) அமைச்சர், இறைவன்
ஈ) மன்னன், இறைவன்
Answer:
ஈ) மன்னன், இறைவன்
குறுவினா
Question 1.
“கழிந்த பெரும்கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்”
– இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்?
காதல் மிகு கேண்மையினான் யார்?
Answer:
கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) – குலேசபாண்டியன்.
காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்.
Question 2.
அமர்ந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
சிறுவினா
Question 1.
மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்கம் தருக.
Answer:
குலேச பாண்டியன் தமிழ்ப் புலமை வாய்ந்தவன்.
அவன் அவையில் புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை மன்னன் பொருட்படுத்தாமல் அவமதித்தான்.
இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் முறையிட்டார்.
இறைவன் கடம்பவனம் கோயிலை விட்டு நீங்கி வைகை ஆற்றின் தெற்கே கோயில் உருவாக்கி அமர்ந்தார்.
இதையறிந்த மன்னன் யான் என்ன தவறு செய்தேன்? ஏன் இங்கு அமர்ந்தீர்? என்று வருந்தினான்.
இறைவன், இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த தவறும் இல்லை என்றார்.
தன் தவறை உணர்ந்த மன்னன் இடைக்காடனாரை அழைத்து மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தி, பணிந்து வணங்கி தம் தவறைப் பொறுத்தருள வேண்டினான்.
நெடுவினா
Question 1.
இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
Answer:
மன்னனின் அவையில் இடைக்காடனார் :
வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். இதைக் கேள்வியுற்ற இடைக்காடனார் குலேசனின் அவைக்குச் சென்று தான் இயற்றிய கவிதையைப் படித்தார்.
இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல் :
வேப்பமாலை அணிந்த குலேசபாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். தமிழறியும் பெருமான், அடியார்க்கு நல்நிதி போன்றவன், பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் உடையவன் என்று கேட்டுணர்ந்து தாங்கள் முன் சுவை நிரம்பிய கவிதை பாடினார் இடைக்காடனார். பாண்டியன் சிறிதேனும் பாடலைப் பொருட்படுத்தாமல் புலவரின் புலமையை அவமதித்தான்.
இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல் :
இறைவா! பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின்வடிவான பார்வதியையும், பொருளின் வடிவான உம்மையும் அவமதித்தான் என்று சினத்துடன் இறைவனிடம் கூறினார்.
இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல் :
இடைக்காடனாரின் வேண்டுகோளை ஏற்று வைகை ஆற்றின் தெற்கே கோயில் அமைத்துக் குடிகொண்டார் இறைவன். உடனே கபிலரும் மகிழ்ந்து இடைக்காடனாரோடு வெளியேறினார்.
இறைவனிடம் மன்னன் வேண்டுதல் :
இதையறிந்த மன்னன் இறைவனிடம் என் படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் ஒழுக்கம் குறைந்தாரோ? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமும், துறவறமும் தத்தம் வழியில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார் குலசேகரபாண்டியன்.
இறைவனின் பதில் :
‘வயல் சூழ்ந்த கடம்பவனத்தைவிட்டு ஒருபோதும் நீங்கமாட்டோம்.’ ‘இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை’ என்றார். ‘இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்’ என்றார்.
பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல் :
வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டான் குலேச பாண்டியன். மகிழ்ந்து, பரம்பொருளே! புண்ணியனே! சிறியவரின் குற்றம் பொறுப்பது பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.
மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல் :
மன்னனின் மாளிகை வாழை, சாமரை இவற்றாலான விதானமும் விளக்கும் உடையது. பூரண கும்பம் மாலை, கொடி இவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் சூழ இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர்த்தினான்.
மன்னன் புலவரிடம் வேண்டுதல் :
மன்னன் புலவர்களிடம், தான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அமுதம் போன்ற சொல்லால் எங்கள் சினம் தணிந்துவிட்டது என்றனர்.
இலக்கணக் குறிப்பு.
கேள்வியினான் – வினையாலணையும் பெயர்
காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
கழிந்த – பெயரெச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்.
கூடுதல் வினாக்கள்
இலக்கணக் குறிப்பு.
கற்றோர் – வினையாலணையும் பெயர்
உணர்ந்தகபிலன் – பெயரெச்சம்
தீம்தேன், நல்நிதி, பெருந்தகை – பண்புத்தொகைகள்
ஒழுகுதார் – – வினைத்தொகை
மீனவன் – ஆகுபெயர்
பகுபத உறுப்பிலக்கணம்.
பலவுள் தெரிக
Question 1.
கபிலரின் நண்பர் யார்?
அ) பரஞ்சோதி முனிவர்
ஆ) இடைக்காடனார்
இ) குலேச பாண்டியன்
ஈ) ஒட்டக்கூத்தர்
Answer:
ஆ) இடைக்காடனார்
Question 2.
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
அ) சமண முனிவர்
ஆ) அகத்தியர் முனிவர்
இ) பரஞ்சோதி முனிவர்
ஈ) இடைக்காடனார்
Answer:
இ) பரஞ்சோதி முனிவர்
Question 3.
திருவிளையாடற்புராணம் படலங்களின் எண்ணிக்கை ………………………
அ) 64
ஆ) 96
இ) 30
ஈ) 18
Answer:
அ) 64
Question 4.
‘தகடூர் எறிந்த பெருஞ்சேரல்’ இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?
அ) பரஞ்சோதி முனிவர்
ஆ) கபிலர்
இ) இடைக்காடனார்
ஈ) மோசிகீரனார்
Answer:
ஈ) மோசிகீரனார்
Question 5.
வேப்ப மாலை அணிந்த மன்னன்?
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
Answer:
இ) பாண்டியன்
Question 6.
மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ண யரக் காரணம் ………………………
அ) குளிர்ந்த காற்று வீசியதால்
ஆ) நல்ல உறக்கம் வந்ததால்
இ) களைப்பு மிகுதியால்
ஈ) அரசன் இல்லாமையால்
Answer:
இ) களைப்பு மிகுதியால்
Question 7.
களைப்பு மிகுதியால்] ‘மூரித் தீம் தேன் வழிந்து ஒழுகு தாரானைக் கண்டு’ என்னும் தொடரில் தாரானை என்பது யாரைக் குறிக்கிறது?
அ) சிவபெருமான்
ஆ) கபிலர்
இ) பாண்டியன்
ஈ) இடைக்காடனார்
Answer:
இ) பாண்டியன்
Question 8.
பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் ………………………
அ) தஞ்சாவூர்
ஆ) திருமறைக்காடு
இ) திருத்துறைப் பூண்டி
ஈ) திருவண்ணாமலை
Answer:
ஆ) திருமறைக்காடு
Question 9.
திருவிளையாடற்புராணம் காண்டங்களின் எண்ணிக்கை ………………………
அ) 3
ஆ) 4
இ) 6
ஈ) 10
Answer:
அ) 3
Question 10.
இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் ………………………
அ) மதுரைக் காண்டம்
ஆ) கூடற் காண்டம்
இ) திரு ஆலவாய்க் காண்டம்
ஈ) யுத்த காண்டம்
Answer:
இ) திரு ஆலவாய்க் காண்டம்
Question 11.
இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் திருவிளையாடற்புராணத்தில் எத்தனையாவது படலம்?
அ) 64
ஆ) 56
இ) 46
ஈ) 48
Answer:
ஆ) 56
Question 12.
அரசரும் புலவருக்குக் ……………………… வீசுவர்.
அ) கவண்
ஆ) கணையாழி
இ) கவரி
ஈ) கல்
Answer:
இ) கவரி
Question 13.
குலேசபாண்டியன் ……………………… நாட்டை ஆட்சி புரிந்தான்.
அ) பாண்டிய
ஆ) சேர
இ) சோழ
ஈ) பல்லவ
Answer:
அ) பாண்டிய
Question 14.
குலேச பாண்டியன் என்னும் மன்னன் ……………………… புலமையில் சிறந்து விளங்கினான்.
அ) தமிழ்
ஆ) வடமொழி
இ) தெலுங்கு
ஈ) கன்ன டம்
Answer:
அ) தமிழ்
Question 15.
சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் ………………………
அ) பார்வதி
ஆ) திருமகள்
இ) கலைமகள்
ஈ) அலைமகள்
Answer:
அ) பார்வதி
Question 16.
சொல்லின் பொருளாக விளங்குவது ………………………
அ) இறைவன்
ஆ) இடைக்காடனார்
இ) கபிலர்
ஈ) பார்வதி
Answer:
அ) இறைவன்
Question 17.
சொல்லின் பொருளாக விளங்கும் உன்னையுமே அவமதித்ததாக இறைவனிடம் இடைக்காடனார் ……………………… கூறிச் சென்றார்.
அ) அழுகையுடன்
ஆ) சினத்துடன்
இ) ஏளனத்துடன்
ஈ) உருக்கத்துடன்
Answer:
ஆ) சினத்துடன்
Question 18.
இடைக்காடனாரின் சொல் ……………………… போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.
அ) கூரிய அம்பு
ஆ) வேற்படை
இ) தீ
ஈ) விடமுள்
Answer:
ஆ) வேற்படை
Question 19.
………………………ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோவிலை ஆக்கி இறைவன் அங்குச் சென்று இருந்தார்.
அ) காவிரி
ஆ) கங்கை
இ) வைகை
ஈ) தாமிரபரணி
Answer:
இ) வைகை
Question 20.
திரு ஆலவாய்க் கோவிலை விட்டு வெளியேறிய இறைவன் – வடிவத்தை மறைத்து………………………வடக்கே வையை ஆற்றின் தென் பக்கத்தே சென்று இருந்தார்.
அ) நரசிங்க
ஆ) பலராம
இ) இலிங்க
ஈ) சர்ப்ப
Answer:
இ) இலிங்க
Question 21.
கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர் ………………………
அ) குலேச பாண்டியன்
ஆ) இறைவன்
இ) இடைக்காடனார்
ஈ) கபிலர்
Answer:
ஆ) இறைவன்
Question 22.
மன்னன் இடைக்காடனாரை மங்கலமாக ஒப்பனை செய்து ……………………… இருக்கையில் விதிப்படி அமர்த்தினான்.
அ) மரகத
ஆ) பொன்
இ) தன்
ஈ) வைர
Answer:
ஆ) பொன்
Question 23.
கேள்வியினான், காடனுக்கும் கபிலனுக்கும் – இச்சொற்களுக்குரிய இலக்கணக் குறிப்புகளைக் கண்டறிக.
அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை
ஆ) எண்ணும்மை, வினையாலணையும் பெயர்
இ) முற்றெச்சம், உம்மைத் தொகை
ஈ) வினையெச்சம், தொழிற் பெயர்
Answer:
அ) வினையாலணையும் பெயர், எண்ணும்மை
Question 24.
‘மாசற விசித்த வார்புறு வள்பின்’ என்று பாடிய புலவர் _ பாடப்பட்டவன்
அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
ஆ) ஔவையார், அதியமான்
இ) பரணர், தலையாளங்கானத்துச் செருதவன்ற பாண்டியன்
ஈ) கபிலர், பாரி
Answer:
அ) மோசிகீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
Question 25.
அரண்மனையின் முரசுக் கட்டிலில் தூங்கியவர் ……………………… கவரி வீசிய மன்னர் ………………………
அ) இடைக்காடனார், குலேச பாண்டியன்
ஆ) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
இ) கபிலர், பாரி
ஈ) பரணர், பேகன்
Answer:
ஆ) மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
Question 26.
பரஞ்சோதி முனிவர் ……………………… நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
அ) பத்தாம்
ஆ) பதினேழாம்
இ) பதினெட்டாம்
ஈ) பதினைந்தாம்
Answer:
ஆ) பதினேழாம்
Question 27.
பரஞ்சோதி முனிவர் ……………………… பக்தி மிக்கவர்.
அ) சிவ
ஆ) பெருமாள்
இ) முருக
ஈ) தேச
Answer:
அ) சிவ
Question 28.
திருவிளையாடற் கதைகள் ……………………… முதற்கொண்டு கூறப்பட்டு வருகிறது.
அ) சிலப்பதிகாரம்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) தொல்காப்பியம்
Answer:
அ) சிலப்பதிகாரம்
குறுவினா
Question 1.
நும் கவிதைப் பேழைப் பகுதி அமைந்த திருவிளையாடற்புராணப் பாடல் அமைந்த காண்டம் மற்றும் படலம் எது?
Answer:
காண்டம்: திரு ஆலவாய்க் காண்டம்
படலம் : இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்
Question 2.
“சந்நிதியில் வீழ்ந்து எழுந்து தமிழ் அறியும் பெருமானே” என்று யார் யாரிடம் கூறியது?
Answer:
இடைக்காடனார் இறைவனிடம் கூறினார்.
Question 3.
‘நின்இடம் பிரியா இமையப் பாவை’ – இவ்வடிகளில் சுட்டப்படுபவர் யார்?
Answer:
ஈசனின் இடத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவியே இவ்வடிகளில் சுட்டப்படுகின்றார்.
Question 4.
‘சொல் பொருளான உன்னையுமே இகழ்ந்தனன்’ – பொருளானவன் யார்? இகழ்ந்தவன் யார்?
Answer:
1.பொருளானவன் – திருஆலவாய் இறைவன் ஈசன்
2. இகழ்ந்தவன் – குலேச பாண்டியன்
Question 5.
“பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்” யார் யாரிடம் கூறியது?
Answer:
குலேச பாண்டியன் இறைவனிடம் (ஈசன்) கூறினார்.
Question 6.
“யாம் அவனிடத்தில் வைத்த அருளினால் வந்தேம்” என்று யார் யாரிடம் கூறியது?
Answer:
இறைவன் (ஈசன்) குலேச பாண்டியனிடம் கூறினார்.
Question 7.
“யாம் அவனிடத்தில் வைத்த அருளினால் வந்தேம்” என்று இறைவன் கூறக் காரணம் யாது?
Answer:
இடைக்காடனாரின் செய்யுளை குலேச பாண்டியன் இகழ்ந்தான். இறைவன் இடைக்காடனாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததனால் இறைவன் கோவிலை விட்டு நீங்கினான்.
Question 8.
“சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமையன்றோ
எண்ணிய பெரியோர்க்கு” என்று யார் யாரிடம் கூறியது?
Answer:
குலேச பாண்டியன் இறைவினடம் (ஈசன்) கூறினார்.
Question 9.
சொல் வடிவாய் நின்றவர் யார்? சொல் பொருளாய் விளங்கியவர் யார்?
Answer:
சொல் வடிவாய் நின்றவர்: பார்வதி தேவி
சொல் பொருளாய் விளங்கியவர்: இறைவன் (ஈசன்)
Question 10.
“சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமையன்றோ
எண்ணிய பெரியோர்க்கு” – இவ்வடிகளில் அமைந்த முரண் சொற்கள் எவை?
Answer:
சிறியோர் – பெரியோர்
Question 11.
“தண்ணிய அமுதால் எங்கள் கோபத்தீத் தணிந்தது” என்று யார் யாரிடம் கூறியது?
Answer:
புலவர் இடைக்காடனார் குலேச பாண்டியனிடம் கூறினார்.
Question 12.
“பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப்பரவித் தாழ்ந்தவன்” என்று யார் யாரிடம் கூறியது?
Answer:
குலேச பாண்டியன் புலவர் இடைக்காடனாரிடம் கூறினார்.
Question 13.
பண்ணிய குற்றம் எல்லாம் பொறுக்க எனப்பரவித் தாழ்ந்தவன்” பண்ணிய குற்றம் யாது?
Answer:
குலேச பாண்டியன் இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தார். அதனால் இறைவன் கோயிலை விட்டு நீங்கினார்.
Question 14.
சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன் – சொல்லேருழவன் யார்? வில்லேருழவன் யார்?
Answer:
சொல்லேருழவன் (புலவன்) – மோசிகீரனார்
வில்லேருழவன் (மன்னன்) – தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
சிறுவினா
Question 1.
“பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்” என்று பாண்டியன் இறைவனிடம் வினவியதை எழுதுக.
Answer:
இறைவனே, என்னால், என்படைகளால், என்பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா?
வேதங்களை பயின்றவர் நல்லொழுக்கத்தில் தவறினாரா?
தவமும் தருமமும் சுருங்கியதோ?
இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ?
– எமது தந்தையே யான் அறியேன் என்று குலேச பாண்டியன் இறைவனிடம் வினவினான்.
Question 2.
“பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல்:
பெரிய புராணம் திரு ஆலவாய்க் காண்டத்தில், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தில் குலேச பாண்டியன் இறைவனிடம் வினவினான்.
பொருள் விளக்கம்:
இறைவனே, என்னால், என் படைகளால், என் பகைவரால், கள்வரால், காட்டில் உள்ள விலங்குகளால் இத்தமிழ்நாட்டில் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? வேதங்களை பயின்றவர் நல்லொழுக்கத்தில் தவறினாரா? தவமும் தருமமும் சுருங்கியதோ? இல்லறமும் துறவறமும் தத்தம் நெறியில் இருந்து தவறினவோ? எமது தந்தையே யான் அறியனே என்று பாண்டியன் இறைவனிடம் வினவினான்.
Question 3.
“சிறியோர் குற்றம் பொறுப்பது பெருமையன்றோ
எண்ணிய பெரியோர்க்கு” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answer:
இடம் சுட்டல்:
பெரிய புராணம் திரு ஆலவாய்க் காண்டத்தில், இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தில் குலேச பாண்டியன் இறைவனிடம் வினவினான்.
பொருள் விளக்கம்:
வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டுப் பாண்டியன், “பார்வதி தேவியை ஒரு பாகத்தில் கொண்டபரம்பொருளே, புண்ணியனே, சிறியவர்களின் குற்றம் பொறுப்பது பெரியவருக்குப் பெருமையல்லவா?” என்று தன் குற்றத்தைப் பொறுக்க வேண்டினார்.