Ads

திருக்குறள்-10th Std -Tamil - Book Back Questions and Answers

திருக்குறள்-10th Std -Tamil - Book Back Questions and Answers

பாடநூல் வினாக்கள

கற்பவை கற்றபின்

Question 1.

படங்கள் உணர்த்தும் குறளின் கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக.

Answer:

படம் – 1 (அ) :

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

அறிவு : மேற்கண்ட படத்தைக் காணும் போது நீ என்ன நினைக்கிறாய்?

மதி : மாட்டு வண்டிக்காரனின் உழைப்பு தெரிகிறது.

அறிவு : எப்படி?

மதி : சொந்த வண்டியோ, வாடகை வண்டியோ தெரியவில்லை. எனினும் மூட்டைகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் தன்னுடன் கூலியாட்களை வைக்காமல் தானே அச்செயலைச் செய்கிறான். மேலும் அவன் வண்டியில் அமர்ந்து செல்லவில்லை. இது அவனிடமுள்ள சோம்பலின்மையை வெளிப்படுத்துகிறது.

அறிவு : இதன் மூலம் நீ கூறவிருக்கும் கருத்து யாது?

மதி : இப்படிப்பட்ட கடின உழைப்பாளி வாழ்வில் ஒரு நாளும் வறுமை நிலையை

அடையமாட்டான். வாழ்வில் உயர்வடைவான்.

படம் – 1 (ஆ) : (உரையாடல் தொடர்ச்சி)

மதி : இப்படத்தில் குடும்பத்தலைவன் உழைப்பின்றி சோம்பேறி இருத்தலால் அவன் குடும்பம் வறுமை நிலையில் உள்ளது.

படம் – 2 (அ) : பண்என்னாம் பாடற் இயைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்.

அறிவு : மேற்கண்ட படத்தைப் பார்க்கும் போது உன் மனதில் தோன்றும் கருத்து யாது?

மதி : ‘தா’ என்று பிறரிடம் யாசித்தல் இழிவான செயலாகும். அப்படி கேட்டும் கேட்ட பொருளைக் கொடுக்காமல் இருப்பது அதைவிட இழிவாகும்.

அறிவு : இச்செயல் குறித்து நீ என்ன கருதுகிறாய்?

மதி : ஐயன் வள்ளுவன் கூறியது போல இரக்கம் இல்லாத கண்களால் பயன் என்ன? என்று கருதுகிறேன்.

படம் – 2 (ஆ) : (உரையாடல் தொடர்ச்சி)

மதி : இசையோடு பாடல் பொருந்தாததால் மக்கள் அதனை விரும்பாமல் அவ்விடத்தை விட்டுக் கடந்து செல்கின்றனர், பாடல், இசை இரண்டும் வேறுபட்டால் என்ன பயன். இதைப் போலவேதான் இரக்க குணமில்லாதவனுக்குக் கண் இருந்தும் அதனால் பயன் ஒன்றும் இல்லை .

Question 2.

கதைக்குப் பொருத்தமான குறளைத் தேர்வு செய்து காரணத்தை எழுதுக.

‘சின்னச்சாமி… யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க… யாராய் இருக்கும்…” மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார். “தெரியலப்பா ….”

“இறங்கி யாருன்னு பாரு…”

வாட்டசாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்.

“ஐயா… நீங்க…”

வெளியூருப்பா… வண்டி நின்று போச்சு…!”

“அப்படியா… வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு… ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது…”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியில் இருந்தோம்… சிறிது தூரம் போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு… நாங்க வீட்டுக்குப் போயிட்டோம்.

இரவுல தூங்கப் போறப்ப… அப்பா சொன்னார். தம்பி… அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு… வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில் … கட்டுப்போட்டுக்கிட்டு இருந்தாங்க.. பாவம் படிச்சவரா இருக்காரு… சூழ்நிலை புரியாம வரமாட்டேன்னு சொன்னாரு. இப்ப வேதனைப்பட்டாரே…

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்

கல்லார் அறிவிலா தார்.

ஆ)பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்

தாழாது உஞற்று பவர்.

Answer:

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்.

காரணம் :

வண்டிக்காரரின் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்த சூட்டுக்காரன் தனக்கு உதவ வந்த அவனை ஒதுக்கித் தள்ளினான். உலகத்தானோடு பொருத்தி வாழும் தன்மையற்றவனாய் இருந்ததால் அவன் விபத்திற்குள்ளாக நேர்ந்தது. இவன் கற்றிருந்தும் அறிவில்லாதவனே.

குறுவினா

Question 1.

‘நச்சப் படாதவன்’ செல்வம் – இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

Answer:

நச்சப் படாதவன் என்பதன் பொருள், பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர்.

Question 2.

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

Answer:

கொடுப்பதூஉம் – இன்னிசை அளபெடை துய்ப்பதூஉம் – இன்னிசை அளபெடை

Question 3.

பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

Answer:

Question 4.

எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்

ஆ) கூவிளம் புளிமா நாள்

இ) தேமா புளிமா காசுஈ) புளிமா தேமா பிறப்பு

Answer:

அ) கூவிளம் தேமா மலர்

சிறுவினா

Question 1.

வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

Answer:

இப்பாடலில் உவமையணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம் :

உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி ஆகும்.

உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்தல்.

உவமேயம் : ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மன்னன் வரி விதித்தல்.

உவம உருபு : போல (வெளிப்படை)

விளக்கம் : ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானது ஆகும்.

Question 2.

கவிதையைத் தொடர்க.

தண்ணீர் நிறைந்த குளம்

தவித்தபடி வெளிநீட்டும் கை

கரையில் கைபேசி படமெடுத்தபடி

…………………………………………………………………..

…………………………………………………………………..

…………………………………………………………………..

Answer:

கவிதையைத் தொடர்க.

தண்ணீர் நிறைந்த குளம்

தவித்தபடி வெளிநீட்டும் கை

கரையில் கைபேசி படமெடுத்தபடி

பதறுகிறது என் நெஞ்சமடி

வருங்கால சமுதாயம் என்னவாகுமடி

எப்போது தீரும் தன்படம் மோகமடி

மூழ்கியவன் மூச்சு நின்னுப்போச்சு

மனிதநேயம் செத்துப்போச்சு

திருக்குறள் பற்றிய கவிதை :

உரை(றை) ஊற்றி ஊற்றிப்

பார்த்தாலும்

புளிக்காத பால்!

தந்தை தந்த

தாய்ப்பால்

முப்பால் ………………… – அறிவுமதி

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

எய்துவர், காண்பர் – வினையாலணையும் பெயர்கள்

எய்தாப் பழி, தமராக் கொளல், ஏமரா மன்னன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சங்கள்

புகுத்தி – வினையெச்சம்

கொடுப்பதூஉம், தூய்ப்பதூஉம் – இன்னிசையளபெடைகள்

பகுபத உறுப்பிலக்கணம்.

பலவுள் தெரிக

Question 1.

கீழக்காண்பனவற்றுள் பொருந்தாத இணை எது?

அ) உயிரினும் மேலானது – ஒழுக்கம்

ஆ) ஒழுக்கமுடையவர் – மேன்மை அடைவர்

இ) உண்மைப் பொருளைக் காண்பது – அறிவு

ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்

Answer:

ஈ) உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் – அறிவுடையவர்

Question 2.

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

Answer:

அ) அழிக்க வேண்டியவை – ஆசை, சினம், அறியாமை

ஆ) பெரியோரை துணையாக்கிக் கொள்ளுதல் – பெறும்பேறு

இ) நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் – பிறர் நன்மையைக் கருதுபவர்

ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்

Answer:

ஈ) ஆராயாத மன்னன் – நாட்டின் வளத்தைப் பெருக்குவான்

Question 3.

நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் பயின்று வரும் அணி எது?

அ) உவமையணி

ஆ) எடுத்துக்காட்டு உவமையணி

இ) ஏகதேச உருவக அணி

ஈ) உருவக அணி

Answer:

அ) உவமையண

Question 4.

பொருத்துக.

1. மேன்மை – அ) சினம்

2. வெகுளி – ஆ) உயர்வு

3. மயக்கம் – இ) வறுமை

4. இன்மை – ஈ) அறியாமை

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 5.

உயிரினும் மேலானதாகக் கருதிப் பாதுகாக்க வேண்டியது……………………………….

அ) ஒழுக்கம்

ஆ) மெய் உணர்தல்

இ) கண்ணோட்டம்

ஈ) கல்வி

Answer:

அ) ஒழுக்கம்

Question 6.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான்” என்பதில் அமைந்துள்ள நயம்……………………………….

அ) மோனை

ஆ) எதுகை

இ) முரண்

ஈ) இயைபு

Answer:

ஆ) எதுகை

Question 7.

“பெரியாரைப் பேணித் தமராக் கொளல்” இதில் “தமர்” என்பதன் பொருள்……………………………….

அ) நூல்

ஆ) துணை

இ) பேறு

ஈ) அரிய

Answer:

ஆ) துணை

Question 8.

“முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்” இதில் “இன்மை’ என்பதன் பொருள்……………………………….

அ) வறுமை

ஆ) இல்லை

இ) முயற்சி

ஈ) செல்வம்

Answer:

அ) வறுமை

Question 9.

பொருத்துக. 1. ஒழுக்கமுடைமை – அ) 36 வது அதிகாரம்

2. மெய்உணர்தல் – ஆ)14 வது அதிகாரம்

3. பெரியாரைத் துணைக்கோடல் – இ) 56வது அதிகாரம்

4. கொடுங்கோன்மை – ஈ) 45 வது அதிகாரம்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4. ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

குறுவினா

Question 1.

உயிரினும் ஓம்பப்படுவது எது? ஏன்?

Answer:

உயிரினும் ஓம்பப்படுவது ஒழுக்கம்.

ஏனெனில் ஒழுக்கமானது அனைத்துச் சிறப்புகளையும் தருகிறது.

Question 2.

ஒழுக்கத்தினால் கிடைப்பது எது? இழுக்கத்தினால் கிடைப்பது எது?

Answer:

ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை.

இழுக்கத்தினால் கிடைப்பது அடையக்கூடாத பழிகள்.

Question 3.

பல கற்றும் கல்லாதவராகக் கருதப்படுபவர் யார்?

Answer:

உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றறிந்தாலும் கல்லாதவராகவே கருதப்படுவார்.

Question 4.

எப்பொருளைக் காண்பது அறிவு?

Answer:

எந்தப் பொருள் எந்த இயல்பினதாய்த் தோன்றினாலும், அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.

Question 5.

நாமம் கெடக்கெடும் நோய் பற்றி எழுதுக.

Answer:

ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிதல் வேண்டும்.

இம்மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பங்களும் அழியும்.

Question 6.

பெரும்பேறு எது?

Answer:

பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.

Question 7.

கெடுப்பார் இலானும் கெடுபவர் யார்? ஏன்?

Answer:

குற்றம் கண்டபோது இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்க பகைவர் இல்லை எனினும் தானே கெட்டழிவான்.

Question 8.

நல்லார் தொடர்பை கைவிடல் எத்தன்மையது?

Answer:

தான் ஒருவனாக நின்று பலரோடு பகை மேற்கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும். ஆகவே நல்லார் நட்பைக் கைவிடல் கூடாது.

Question 9.

ஆட்சியதிகாரம் கொண்டுள்ள அரசன் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தி யாது?

Answer:

ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரி விதிப்பான்.

அரசனது இச்செயலானது வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகராகும்.

Question 10.

ஆராயாது ஆட்சி செய்யும் மன்னனைக் குறித்து குறள் கூறும் செய்தி யாது?

Answer:

தன் நாட்டில் நிகழும் நன்மை தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை நாள்தோறும் இழக்க நேரிடும்.

Question 11.

இரக்கம் இல்லா கண்கள் எதனைப் போன்று பயனற்றது?

Answer:

பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை.

அதைப் போல இரக்கம் இல்லாத கண்களாலும் பயனில்லை.

Question 12.

உலகமே உரிமையுடையதாகும் எப்போது?

Answer:

நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

Question 13.

நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் யார்? ஏன்?

Answer:

விரும்பத்தக்க இரக்ககுணம் கொண்டவர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர்.

ஏனெனில் பிறர் நன்மை கருதித் தமக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணுவர்.

Question 14.

ஒருவருக்கு பெருமை தருவது எது?

Answer:

ஒரு செயலை முடிப்பதற்கு இயலாது என்று எண்ணிச் சோர்வடையக் கூடாது.

அச்செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும்.

Question 15.

உயர்ந்த நிலையை எப்போது அடைய முடியும்?

Answer:

விடாமுயற்சி என்னும் உயர்பண்பு கொள்ளுதல், பிறருக்கு உதவுதல். இவ்விரு பண்புகளால் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

Question 16.

‘செல்வம் பெருகுதல்’ ‘வறுமை வருதல்’ எப்போது?

Answer:

முயற்சி செய்வதால் செல்வம் பெருகும்.

முயற்சி இல்லாவிட்டால் வறுமையே வந்து சேரும்.

Question 17.

இழிவற்றது இழிவானது எது?

Answer:

ஐம்புலன்களில் ஏதேனும் குறையிருப்பின் அது இழிவன்று.

அறிய வேண்டியதை அறிந்து முயற்சி செய்யாததே இழிவாகும்.

Question 18.

சோர்விலாது முயற்சி செய்வோர் குறித்துக் கூறு.

Answer:

சோர்விலாது முயற்சி செய்வோர் செய்கின்ற செயலுக்கு இடையூறாய் வரும் முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடையவர்.

Question 19.

பல கோடி பெறினும் பயனில்லை எப்போது?

Answer:

பிறருக்குக் கொடுக்காமலும் தானும் அனுபவிக்காமலும் இருப்பவர் பல கோடிப் பொருள்களைப் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.

Question 20.

விரும்பப்படாதவர் செல்வம் எதனைப் போன்றது?

Answer:

பிறருக்கு உதவாமல் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம், ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்றதாகும்.

Question 21.

“பொறியின்மை யார்க்கும் பழியன்று” – இவ்வடிகளில் “பொறி” என்பது எதனைக் குறிக்கும்?

Answer:

பொறி என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைக் குறிக்கும்.

Question 22.

“முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.” – இக்குறட்பாவில் அமைந்த முரண்சொற்கள் எவை?

Answer:

முயற்சி – முயற்றின்மை

திருவினை (செல்வம்) – இன்மை (வறுமை)

Question 23.

“அடுக்கிய கோடி உண்டாயினும் இல்” ஏன்?

Answer:

பிறருக்கும் கொடுக்காமல், தானும் அனுபவிக்காமல் இருப்பவர் அடுக்கிய பல கோடி பெரினும் பயன் இல்லை .

Question 24.

“உரிமை உடைத்து இவ்வுலகு” – யாருக்கு?

Answer:

நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு, உலகமே உரிமை உடையதாகும்.

Question 25.

நாள்தோறும் நாடு கெடும் – என்று வள்ளுவர் கூறக் காரணம் யாது?

Answer:

தன் நாட்டில் நடக்கும் நன்மை தீமைகளை ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் நாடு நாள்தோறும் கெடும்.

Question 26.

கற்றும் கல்லாதார் அறிவிலாதார் – யார்?

Answer:

உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதார், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.

Question 27.

பாடலோடு பொருந்தா இசையால் பயனில்லை என்னும் உவமையைக் கொண்ட திருக்குறளை எழுதுக.

Answer:

பண்என்னாம் பாடற் இயைபின்றேல்; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

Question 28.

முயற்சி இல்லாதவருக்கு வறுமையே கிட்டும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக.

(அ) முயற்சி செய்பவருக்கு செல்வம் பெருகும் என்பதற்குச் சான்றாக விளங்கும் திருக்குறளை எழுதுக.

Answer:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

Question 29.

ஒரு செயலை முயற்சியுடன் முடிப்பது பெருமை தரும் என்பதை வலியுறுத்தும் குறட்பாவினை எழுதுக.

Answer:

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

Question 30.

நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுவது பலமடங்கு தீமையைத் தரும் என்பதைக் குறிப்பிடும் திருக்குறளை எழுதுக.

Answer:

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

Question 31.

எந்தப் பொருளாயினும் அதன் உண்மைப் பொருளைக் காண்பதே அறிவு என்பதை விளக்கும் குறட்பாவினை எழுதுக.

Answer:

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.

சிறுவினா

Question 1.

ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது?

Answer:

உயிரினும் மேலானது :

ஒழுக்கம் எல்லாருக்கும் அனைத்துச் சிறப்புகளையும் தருவதால் அதை உயிரினும் மேலானதாகக் கருதிக் காத்தல் வேண்டும்.

மேன்மை – பழி :

ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை. இழுக்கத்தினால் கிடைப்பது அடையக் கூடாத பழி.

பல கற்றும் அறிவிலார் :

உலகத்தோடு பொருந்தி வாழக் கல்லாதவர் பல நூல்களைக் கற்றவராயினும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார்.

Question 2.

மெய்யுணர்தல் குறித்து எழுதுக.

Answer:

உண்மைப் பொருளைக் காணல் :

எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளைக் காண்பது அறிவு.

துன்பம் அழிதல் :

ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றையும் அழித்தால் அதனால் வரும் துன்பமும் அழியும்

Question 3.

பெரியாரைத் துணைக்கோடல் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.

Answer:

பெரும்பேறு :

பெரியோரைப் போற்றித் துணையாக்கிக் கொள்ளுதலே பெரும்பேறாகும்.

பாதுகாப்பற்ற மன்னன் :

குற்றம் கண்ட இடத்து இடித்துத் திருத்தும் பெரியாரின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளாத மன்னன் தன்னைக் கெடுக்கப் பகைவர்கள் இல்லையெனினும் தானே கெட்டழிவான்.

பெரியோர் நட்பைக் கைவிடல் :

நற்பண்புடைய பெரியோரின் நட்பைக் கைவிடுவதானது, தனியொருவனாக நின்று பகைவர் பலரைப் பகைத்துக் கொள்வதைக் காட்டிலும் பல மடங்கு தீமையைத் தரும்.

Question 4.

கொடுங்கோன்மை பற்றிய செய்தியைக் கூறு.

Answer:

ஆட்சியதிகாரம் : தன் ஆட்சியதிகாரத்தைக் கொண்டு வரி விதிக்கும் மன்னனது செயலானது, வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபறி செய்பவனின் செயலுக்கு ஒப்பானது.

தன் நாட்டை இழத்தல் : தன் நாட்டின் நன்மை, தீமைகளை ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து ஆட்சி செய்யாத மன்னன் தன் நாட்டை இழக்க நேரிடும்.

Question 5.

கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுது.

Answer:

இரக்கம் இல்லாத கண்கள் : பாடலோடு பொருந்தாத இசையால் பயன் ஒன்றுமில்லை. அதுபோல, இரக்கமில்லாக் கண்களால் பயன் ஒன்றுமில்லை

நடுநிலை : நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

நஞ்சை உண்ணும் பண்பாளர் : விரும்பத் தகுந்த இரக்க இயல்பைக் கொண்டவர்கள், பிறரது நன்மைக்காக தனக்கு நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் ஆவார்.

Question 6.

ஒருவனது செல்வம் பயனற்றதாய்ப் போவது எப்போது?

Answer:

பல கோடிப் பொருள்கள் :

பிறருக்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் இருப்பவர் பல கோடிப் பொருள்கள் பெற்றிருந்தாலும் அதனால் பயன் இல்லை.

நச்சுமரம் பழுத்தது :

பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும்.

Question 7.

பண்என்னாம் பாடற் இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணியைக் கூறி விளக்குக.

Answer:

இப்பாடலில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம் :

உவமை ஒரு வாக்கியமாகவும், உவமேயம் ஒரு வாக்கியமாகவும் உவமஉருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமை அணி ஆகும்.

உவமை : பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் பயனில்லை.

உவமேயம் : இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயன் இல்லை.

உவம உருபு : போல (மறைந்து வந்துள்ளது)

விளக்கம் : பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் பயன் இல்லை. அதுபோலவே, இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் பயன் இல்லை.

Question 8.

கீழ்க்காணும் பாடலில் உள்ள எதுகைச் சொற்களை எடுத்தெழுதி அடிக்கோடிடுக.

1. பண்என்னாம் பாடற் இயைபின்றேல் ; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

Answer: