Ads

ஞானம்-10th Std -Tamil - Book Back Questions and Answers

ஞானம்-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.

“துளிப்பா” ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் வெளிப்படும் கருத்தினைப் பற்றி வகுப்பறையில் இரண்டு நிமிடம் உரை நிகழ்த்துக.

Answer:

ஆராய்ச்சி மணி அடித்த மாடுகள்

அரண்மனைத் தட்டில்

பிரியாணி ஆகிவிட்டன.

நீதி தவறாத செங்கோல் வளையாத மரபாக இருந்தது சோழ மரபு. அச்சோழ மரபிலே வந்தவன் மனுநீதிச் சோழன்.

அரண்மனை வாயிலின் ஆராய்ச்சி மணியை அடித்த பசுவின் துயரைத் துடைக்கத் தன் ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று பசுவின் துயரைத் தானும் அனுபவித்து “வாயில்லா ஜீவனுக்கும் அறம்” உணர்த்திய மாண்பு நம் தமிழ் மண்.

ஆனால் சீர்கேடு அடைந்து உள்ள இன்றைய சமூகச் சூழலில் நீதி கேட்டுப் போராடுபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள்; அழிக்கப்படுகிறார்கள்.

இச்சமூக அவலத்தையே இக்கவிதை தோலுரித்துக் காட்டியுள்ளது. அன்று ஆராய்ச்சி மணி அடித்த போது பசுவுக்கு நீதி கிடைத்தது. இன்றோ ! நீதி கேட்கும் மாடுகள் அழிக்கப்பட்டு விடும் என்பதைக் குறிப்பாக இக்கவிதை உணர்த்துகிறது.

Question 2.

திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் தலைப்பினை எழுதி, அகரவரிசைப்படுத்தி அதன் பொருளினை எழுதுக.

Answer:

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன. அவை:

அடக்கமுடைமை – அடக்கத்தின் மேன்மை

அருளுடைமை – கருணை உடையவராய் இருத்தல் வேண்டும்.

அவாவறுத்தல் – பேராசையை விலக்கு

அழுக்காறாமை – பொறாமை நீக்க வேண்டும்.

அறன் வலியுறுத்தல் – அறத்தின் சிறப்பை எடுத்துக் கூறுதல்

அன்புடைமை – அன்பின் மகத்துவம்

இல்வாழ்க்கை – குடும்ப வாழ்வின் சிறப்பு, பெருமை

இன்னாசெய்யாமை – துன்பம் செய்யாதிருத்தல்

இனியவைகூறல் – இனிய சொற்களின் சிறப்பு

ஈகை – கொடுத்து மகிழ்தலின் சிறப்பு

ஊழ் – விதி வலிமை

ஒப்புரவறிதல் – கொடுத்தல்

ஒழுக்கமுடைமை – ஒழுக்கமே உயர் செல்வம்

கடவுள் வாழ்த்து – இறைவனை வாழ்த்துதல்

கள்ளாமை – மது அருந்துதல் கூடாது

கூடாவொழுக்கம் – பொய் ஒழுக்கம்

கொல்லாமை – உயிர்க்கொலைக் கூடாது.

செய்ந்நன்றியறிதல் – ஒருவர் செய்த நன்மையை நினைத்தல்

தவம் – துன்பத்தைப் பொறுத்தல், பிறருக்குத் துன்பம் செய்யாமை

தீவினையச்சம் – தீச் செயல் செய்ய அஞ்சுதல்

துறவு – உலகப் பற்றை நீக்குதல்

நடுவு நிலைமை – பாரபட்சம் பாராதிருத்தல்

நிலையாமை – எதுவும் நிலையன்று

நீத்தார் பெருமை – துறவு மேற்கொள்பவர் சிறப்பு

பயனில சொல்லாமை – பயனற்ற சொற்களைத் தவிர்த்தல்

பிறனில் விழையாமை – பிறர் மனைவி, பொருளை விரும்பாமை

புகழ் – சிறப்பு

புலால் மறுத்தல் – ஊன் உண்ணாதிருத்தல்

புறங்கூறாமை – ஒருவர் இலாதிடத்து அவரைப் பற்றிப் பேசாமை

பொறையுடைமை – பொறுமை

மக்கட்பேறு – பிள்ளைச் செல்வம்

மெய்யுணர்தல் – பொய் மயக்கத்திலிருந்து விடுபடுதல்

வாழ்க்கைத் துணை நலம் – நன்மனையாள் பெருமை

வாய்மை – உண்மையின் மேன்மை

வான்சிறப்பு – மழையின் சிறப்பு

விருந்தோம்பல் – விருந்தினரை உபசரித்தல்

வெகுளாமை – சினம் கொள்ளாமை

வெஃகாமை – பிறர் பொருளை விரும்பாமை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது……………………

அ) காலம் மாறுவதை

ஆ) வீட்டைத் துடைப்பதை

இ) இடையறாது அறப்பணி செய்தலை

ஈ) வண்ண ம் பூசுவதை

Answer:

இ) இடையறாது அறப்பணி செய்தலை

குறுவினா

Question 1.

காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

Answer:

காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.

வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.

வாளித்தண்ணீர், சாயக்குவளை, துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.

சிறுவினா

Question 1.

‘சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம் என்ற தலைப்பில்’, பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.

(குறிப்பு: சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

Answer:

உரைக்குறிப்புகள்:

அறம் என்பதன் விளக்கம் தரல்.

சுற்றுச்சூழல் என்றால் என்ன?

சுற்றுச்சூழலோடு அறத்திற்கு உள்ள தொடர்பை விளக்குதல்.

அறம் சார்ந்த வகையில் மாசு அடைவதைத் தவிர்க்க வழி கூறுதல்.

சட்டங்கள் வன்மையாக இருந்தாலும், அரசின் வாயிலாக மென்மைப்படுத்தல் வேண்டும்.

நெகிழி, ஆலைக்கழிவு, நச்சுக்காற்று, வாகனப்புகை இவற்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.

இக்குறிப்புகளை மையமாக வைத்து உரையாற்ற வேண்டும்.

Question 2.

வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

Answer:

வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்க, வாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு கந்தைத் துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். மூன்றாவதாக, சாயக் குவளையில் உள்ள சாயத்தைக் கட்டைத் தூரிகைக் கொண்டு சாயம் பூசி புதுப்பிக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

காலக்கழுதை – உருவகம்

கந்தைத்துணி – இருபெயரொட்டுப்

பகுபத உறுப்பிலக்கணம்.

பலவுள் தெரிக

Question 1.

‘ஞானம்’ – கவிதையின் ஆசிரியர் ……………………..

அ) அப்துல் ரகுமான்

ஆ) வேணுகோபாலன்

இ) இராஜகோபாலன்

ஈ) இராமகோபாலன்

Answer:

ஆ) வேணுகோபாலன்

Question 2.

உலகிற்கான பணிகள் எதைச் சார்ந்து வளர வேண்டும்?

அ) மறம்

ஆ) அறம்

இ) ஞானம்

ஈ) கல்வி

Answer:

ஆ) அறம்

Question 3.

‘ஞானம்’ கவிதை இடம்பெற்ற தொகுப்பு……………………..

அ) தீக்குச்சி

ஆ) மீட்சி விண்ணப்பம் இ) கோடை வயல்

ஈ) கோடைமழை

Answer:

இ) கோடை வயல்

Question 4.

தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ……………………..

அ) தஞ்சாவூர்

ஆ) திருவாதவூர்

இ) திருவாரூர்

ஈ) திருவையாறு

Answer:

ஈ) திருவையாறு

Question 5.

தி.சொ.வேணுகோபாலன் எக்காலத்துப் புதுக்கவிஞர்களில் ஒருவர்?

அ) மணிக்கொடி

ஆ) எழுத்து

இ) வானம்பாடி

ஈ) கவிக்குயில்கள்

Answer:

ஆ) எழுத்து

Question 6.

வேணுகோபாலன் பேராசிரியராகப் பணியாற்றியது……………………..

அ) கோவை மருத்துவக் கல்லூரியில்

ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

இ) சென்னை கிண்டி கல்லூரியில்

ஈ) வேளாண்மைக் கல்லூரியில்

Answer:

ஆ) மணிப்பால் பொறியியல் கல்லூரியில்

Question 7.

“மீட்சி விண்ணப்பம்” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்……………………..

அ) வேணுராம்

ஆ) வேணுகோபாலன்

இ) சி.சு. செல்லப்பா

ஈ) கபிலன்

Answer:

ஆ) வேணுகோபாலன்

Question 8.

‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள்

அ) சமூக அறப்பணி

ஆ) வீட்டைப் புதுப்பித்தல்

இ) இடைவிடாத சமூக அறப்பணியை

ஈ) உலகப் பணிகள்

Answer:

இ) இடைவிடாத சமூக அறப்பணியை

Question 9.

அறப்பணி ஓய்ந்தால்……………………..இல்லை .

அ) மனிதன்

ஆ) இயற்கை

இ) உலகம்

ஈ) கடல்

Answer:

இ) உலகம்

Question 10.

“புதுக்கொக்கி பொருத்தினேன்” – இத்தொடர் உணர்த்துவது………………………

அ) சாளரக் கதவை சீர்ப்படுத்துதல்

ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

இ) பொய்களை நீக்குதல் ஈ) வீட்டைப் புதுப்பித்தல்

Answer:

ஆ) சமூகத்தைச் சீர்ப்படுத்துதல்

Question 11.

பொருத்துக.

1. கரையான் – அ) கட்டெறும்பு

2. காலக்கழுதை – ஆ) வந்தொட்டும்

3. தெருப்புழுதி – இ) காற்றுடைக்கும்

4. சட்ட ம் – ஈ) மண்வீடு கட்டும்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

Question 12.

‘அறப்பணி ஓய்வதில்லை

ஓய்ந்திடில் உலகமில்லை !’ – இவ்வடிகளில் அமைந்த நயம்?

அ) எதுகை

ஆ) மோனை

இ) முரண்

ஈ) இயைபு

Answer:

ஈ) இயைபு

Question 13.

பொருத்துக.

1. வாளி – அ) குவளை

2. சாயம் – ஆ) தண்ணீர்

3. கந்தை – இ) தூரிகை

4. கட்டை – ஈ) துணி

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2.இ 3.ஆ 4.ஈ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

குறுவனா

Question 1.

வேணுகோபாலனின் கவிதைத் தொகுப்புகள் யாவை?

Answer:

கோடை வெயில், மீட்சி விண்ணப்பம் ஆகியவை ஆகும்.

Question 2.

‘ஞானம்’ என்னும் கவிதையில் இடம்பெறும் அஃறிணை உயிர்கள் யாவை?

Answer:

கரையான், கழுதை, கட்டெறும்பு.

Question 3

‘காலக்கழுதை

கட்டெறும்பான

இன்றும்

கையிலே’ – என இவ்வடிகளுக்கு இணையான தமிழ்ப்பழமொழி எழுதுக.

Answer:

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது.

சிறுவினா

Question 1.

தி.சொ. வேணுகோபாலன் குறிப்பு வரைக.

Answer:

பெயர் : தி.சொ.வேணுகோபாலன்

பிறப்பு : 7.11.1929)

ஊர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு.

கல்வி : சென்னை லயோலா கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம், ராஜஸ்தான் பிலானியில் இயந்திரவியல் (mechanical) பொறியியல் பட்டம்.

பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரியில் எந்திரவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

நூல்கள் : கோடைவயல், மீட்சி விண்ணப்பம்.

1959 முதல் “எழுத்து” இதழில் கவிதை எழுதத் தொடங்கினார்.

Question 2.

‘ஞானம்’ கவிதை உணர்த்தும் பொருள் யாது? (அல்லது) “அறப்பணி ஓய்வதில்லை, ஓய்ந்திடில் உலகமில்லை ” – எனக் கவிஞர் கூறக் காரணம் யாது?

Answer:

‘ஞானம்’ கவிதை இடையுறாது செய்யும் அறப்பணியாம் சமூகப் பணியை உணர்த்துகிறது.

வீட்டின் சாளரத்தில் எத்தனை முறை புழுதி ஒட்டினாலும், கரையான் மண் வீடு கட்டினாலும் துடைக்கிறோம். சுத்தப்படுத்துகிறோம்.

சுத்தப்படுத்தும் இப்பணியை முதிர் வயதாகும் வரை செய்து கொண்டேதான் இருக்கிறோம்.

சமுதாயத்திலும் சீர்கேடுகள் தொடர்ந்து ஏற்படும்.

அவலங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.

எனினும் அவற்றைத் தடுத்து சமூகத்தைச் சீர்படுத்தும் பணியான அறப்பணியை தொடர்ந்து நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Question 3.

அறப்பணி ஓய்வதில்லை

ஓய்ந்திடில் உலகமில்லை !.

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

Answer:

கோடைவயல்.

ஆ) இவ்வடிகள் இடம்பெற்ற கவிதை எது?

Answer:

ஞானம்.

இ) எது ஓய்வதில்லை ?

Answer:

அறப்பணிகள் ஓய்வதில்லை .

ஈ) இவ்வடியில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.

Answer:

ஓய்வதில்லை       –      உலகமில்லை

Question 4.

‘காலக்கழுதை

கட்டெறும்பான

இன்றும்

கையிலே வாளித்தண்ணீ ர்……..’ – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:

தி.சொ.வேணுகோபாலனின் கோடை வயல் தொகுப்பில் ‘ஞானம்’ என்னும் தலைப்புக் கவிதையில் இவ்வரிகள் இடம்பெறுகின்றன.

பொருள்:

காலமாகிய கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்துபோன இன்று வரை கையில் வாளித் தண்ணீர் மட்டுமே வைத்துள்ளோம்.

விளக்கம் :

காலக் கழுதை கட்டெறும்பானது என்பது காலம் மாறி வயது முதிர்தலைக் குறிப்பது ஆகும்.

வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.

வாளித்தண்ணீர், சாயக்குவளை,துணிகந்தையானாலும், சாயம் அடிக்கும் தூரிகைகட்டையானாலும் சுத்தம் செய்வது போல, காலக்கழுதை கட்டெறும்பான பின்னும் அறப்பணி ஓயாது தொடர்கிறது.