Ads

முல்லைப்பாட்டு-10th Std -Tamil - Book Back Questions and Answers

முல்லைப்பாட்டு-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின்

Question 1.

முல்லைப்பாட்டின் காட்சிகளிலிருந்து சங்ககால மக்களின் வாழ்க்கைச் சூழலை உணர முடிகிறதா? உங்களின் கருத்துகளைப் பதிவு செய்க.

Answer:

மக்கள் பிறருக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தனக்கு ஏற்பட்ட துன்பமாகவே கருதியிருக்கின்றனர்.

மனிதர்களுடைய துன்பங்கள் மட்டுமின்றி அஃறிணை உயிரினங்களின்  துன்பங்களையும் நீக்க முற்பட்டிருக்கின்றனர்.

தெய்வ நம்பிக்கை உடையவர்கள்.

விரிச்சி கேட்டலில் நம்பிக்கை உடையவர்கள்.

ஒருவரையொருவர் ஆற்றுப்படுத்தி மகிழ்ந்திருக்கின்றனர்.

Question 2.

குறிப்புகளைக் கொண்டு ஆர்வமூட்டும் வகையில் கதை / நிகழ்வை எழுது.

Answer:

அமைதி – வனம் – மனத்தைத் தொட்டது – கொஞ்சம் அச்சம் – ஆனால் பிடித்திருந்தது – இரவில் வீட்டின் அமைதியைவிட – வனத்தின் அமைதி – புதுமை – கால்கள் தரையில் – இலைகளின் சலசலப்பு – பறவைகள் மரங்களின் மேல் – சிறகடிப்பு – அருகில் திரும்பியவுடன் – திடீரென ஆரவார ஓசை – தண்ணீரின் ஓட்டம் – அழகான ஆறு – உருண்ட சிறு கூழாங்கற்கள் – இயற்கையின் கண்காட்சி.

இயற்கையின் கண்காட்சி

அமைதியான வனம் :

அடர்ந்த மரங்களைக் கொண்ட பசுமை மிகுந்த அமைதி நிறைந்த வனத்திற்குச் சென்றேன். வனத்தாவரங்கள் மற்றும் மலர்களின் நறுமணம் என் மனதைத் தொட்டது. அச்சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. இரவில் வீட்டில் இருக்கும் அமைதியைவிட வனத்தின் அமைதி என்னை மிகவும் கவர்ந்த து.

காட்டுயிரிகள் :

புதுமையான ஓர் அனுபவத்தைப் பெற்றேன். என் கால்கள் தரையில் ஊன்றியிருப்பதாய்த் தெரியவில்லை. இலைகளின் சலசலப்பு கேட்டு ஓசை வந்த திசை நோக்கித் திரும்பினேன். மரங்களின் மேலிருந்த பறவைகள் தங்கள் சிறகுகளை அடித்து சோம்பலைப் போக்கிக் கொண்டிருந்தன.

ஆரவார ஓசை :

திடீரென ஏற்பட்ட ஆரவார ஓசையைக் கேட்டு திரும்பிப் பார்த்தேன். குரங்குகள் தண்ணீரின் ஓட்டத்தில் தங்கள் முகங்களின் அழகைக் கண்டு ஆரவாரம் செய்து கொண்டிருந்தன.

அழகான ஆறு :

தெளிவான நீரோடையின் உள்ளே, உருண்டை வடிவில் சிறு கூழாங்கற்கள் பார்ப்பதற்கு விலையுயர்ந்த கற்களைப் போலவும், கண்ணாடியால் செய்யப்பட்ட உருண்டைகள் போலவும் தோற்றமளித்தன. இத்தகைய இயற்கையின் கண்காட்சி என் மனதை விட்டு அகலவில்லை.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

‘பாடுஇமிழ் பனிக்கடல் பருகி’ என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

ஆ) கடல்நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல்நீர் ஒலித்தல்

ஈ) கடல்நீர் கொந்தளித்தல்

Answer:

அ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

குறுவினா

Question 1.

பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

Answer:

தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்து விடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.

Question 2.

மாஅல் – பொருளும், இலக்கணக் குறிப்பும் தருக.

Answer:

நெடுவினா

Question 1.

முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுக.

Answer:

மழை:

மேகம் அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்பொழுது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.

தெய்வ வழிபாடு:

முதுபெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்த முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.

கன்றின் வருத்தம்:

சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.






வருந்தாதே :

புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டி வந்து விடுவார் வருந்தாதே’ என்றாள் இடைமகள்.

முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது :

இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டோம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே!

இலக்கணக் குறிப்பு.

மூதூர் – பண்புத்தொகை

உறுதுயர் – வினைத்தொகை

கைதொழுது – மூன்றாம் வேற்றுமைத் தொகை

தடக்கை – உரிச்சொல் தொடர்

நன்மொழி – பண்புத்தொகை

பகுபத உறுப்பிலக்கணம்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு.

பெரும்பெயல் – பண்புத்தொகை

சிறுபுன் – பண்புத்தொகை

அருங்கடி – பண்புத்தொகை

பெருமுதுபெண்டிர் – பண்புத்தொகை

நல்லோர் – வினையாலணையும் பெயர்

பகுபத உறுப்பிலக்கணம்.

பலவுள் தெரிக

Question 1.

முல்லைப்பாட்டின் மொத்த அடிகள் எத்தனை?

அ) 101

ஆ) 102

இ) 103

ஈ) 104

Answer:

இ) 103

Question 2.

முல்லைப்பாட்டு எந்த நூல் வகையைச் சார்ந்தது?

அ) எட்டுத்தொகை

ஆ) பத்துப்பாட்டு

இ) கீழ்க்க ணக்கு

ஈ) சிற்றிலக்கியம்

Answer:

ஆ) பத்துப்பாட்டு

Question 3.

முல்லைத் திணைக்குரிய பூ வகை

அ) காந்தள்

ஆ) பிடவம்

இ) தாழை

ஈ) பாதிரி

Answer:

ஆ) பிடவம்

Question 4.

முல்லைப்பாட்டு எந்தக் கணக்கு நூல்களுள் ஒன்று?

அ) பதினெண்மேல் கணக்கு

ஆ) பதினெண்கீழ்க்கணக்கு

இ) சிற்றிலக்கியம்

ஈ) காப்பியம்

Answer:

அ) பதினெண்மேல் கணக்கு

Question 5.

பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்

அ) குறிஞ்சிப்பாட்டு

ஆ) முல்லைப்பாட்டு

இ) பட்டினப்பாலை

ஈ) திருமுருகாற்றுப்படை

Answer:

ஆ) முல்லைப்பாட்டு

Question 6.

பொருத்துக.

1. நேமி – அ) மலை

2. கோடு – ஆ) வலம்புரி சங்கு (சக்கரத்துடன் கூடிய)

3. விரிச்சி – இ) தோள்

4. சுவல் – ஈ) நற்சொல்

அ) 1.ஆ 2.அ 3.ஈ. 4.இ

ஆ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

இ) 1.ஈ 2.ஆ 3.இ 4.அ

ஈ) 1.இ 2.ஈ 3.அ 4.ஆ

Answer:

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

Question 7.

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவர்

அ) முருகன்

ஆ) திருமால்

இ) மாவலி மன்னன்

ஈ) நான்முகன்

Answer:

ஆ) திருமால்

Question 8.

குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துத் தந்தவன்

அ) முருகன்

ஆ) திருமால்

இ) மாவலிமன்னன்

ஈ) நான்முகன்

Answer:

இ) மாவலிமன்னன்

Question 9.

மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து நின்றவர்

அ) முருகன்

ஆ) திருமால்

இ) மாவலிமன்னன்

ஈ) நான்முகன்

Answer:

ஆ) திருமால்

Question 10.

“கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி”

– இவ்வடிகளில் ‘மேகம்’ என்னும் பொருள்தரும் சொல்

அ) கோடு

ஆ) செலவு

இ) எழிலி

ஈ) கொடு

Answer:

இ) எழிலி

Question 11.

“கொடுங்கோற் கோவலர்” – இதில் குறிப்பிடப்படும் கோவலர் யார்?

அ) கோவலன்

ஆ) குறவர்

இ) உழவர்

ஈ) இடையர்

Answer:

ஈ) இடையர்

Question 12.

முல்லைப்பாட்டு என்னும் நூலை இயற்றியவர்

அ) கபிலர்

ஆ) மாங்குடிமதேனார்

இ) நப்பூதனார்

ஈ) நக்கீரர்

Answer:

இ) நப்பூதனார்

Question 13.

மழையின் சீற்றம் இயல்பு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் படம் பிடித்துக் காட்டுவது எது?

அ) சங்க இலக்கியம்

ஆ) திருக்குறள்

இ) நாலடியார்

ஈ) சிலப்பதிகாரம்

Answer:

அ) சங்க இலக்கியம்

Question 14.

‘நனந்தலை உலகம்’ என்பதில் ‘நனந்தலை’ என்பதன் பொருள்

அ) கவர்ந்த

ஆ) அகன்ற

இ) சுருங்கிய

ஈ) இழந்த

Answer:

ஆ) அகன்ற

Question 15.

‘நறுவீ என்பதில் ‘வீ’ என்பதன் பொருள்

அ) மலர்கள்

ஆ) மான்கள்

இ) விண்மீன்கள்

ஈ) கண்க ள்

Answer:

அ) மலர்கள்

Question 16.

பொருத்திக் காட்டுக:

i) மூதூர் – 1. உரிச்சொற்றொடர்

ii) உறுதுயர் – 2. மூன்றாம் வேற்றுமைத்தொகை

iii) கைதொழுது – 3. வினைத்தொகை

iv) தடக்கை – 4. பண்புத்தொகை

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 1, 2

இ) 1, 3, 4, 2

ஈ) 2, 1, 3, 4

Answer:

அ) 4, 3, 2, 1

Question 17.

பொறித்த – பகுபத உறுப்பிலக்கணத்தின்படி பிரிக்கும் முறை

அ) பொறி + த் + த் + அ

ஆ) பொறித்து + அ

இ) பொறி + த்(ந்) + த் + அ

ஈ) பொறி + த் + த

Answer:

அ) பொறி + த் + த் + அ

Question 18.

தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றவர்கள்

அ) இளம் பெண்கள்

ஆ) முதிய பெண்டிர்

இ) தோழிகள்

ஈ) சான்றோர்

Answer:

ஆ) முதிய பெண்டிர்

Question 19.

சிறுதாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட எது பசியால் வாடிக் கொண்டிருந்தது?

அ) பசு

ஆ) இளங்கன்று

இ) எருமை

ஈ) ஆடு

Answer:

ஆ) இளங்கன்று

Question 20.

பசியால் வாடிக் கொண்டிருந்த இளங்கன்றின் வருத்தத்தைக் கண்டவள்

அ) குறமகள்

ஆ) இடைமகள்

இ) தலைவி

ஈ) தோழி

Answer:

ஆ) இடைமகள்

Question 21.

‘கைய கொடுங்கோற் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்’ என்று யார் யாரிடம் கூறியது?

அ) இடைமகள் இளங்கன்றிடம்

ஆ) முதுபெண்டிர் பசுவிடம்

இ) தலைவன் காளையிடம்

ஈ) தலைவி மேகத்திடம்

Answer:

அ) இடைமகள் இளங்கன்றிடம்

Question 22.

‘நன்னர் நன்மொழி கேட்டனம்’ – யார் யாரிடம் கூறியது?

அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது

ஆ) தலைவி முதுபெண்டிரிடம் கூறியது

இ) தோழி தலைவியிடம் கூறியது

ஈ) தலைவி தலைவனிடம் கூறியது

Answer:

அ) முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது

Question 23.

பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டின் அடிகள்

அ) 1 – 17

ஆ) 17 – 25

இ) 4 – 16

ஈ) 5 – 20

Answer:

அ) 1 – 17

Question 24.

முல்லையின் நிலம்

அ) காடும் காடு சார்ந்த இடமும்

ஆ) மலையும் மலை சார்ந்த இடமும்

இ) வயலும் வயல் சார்ந்த இடமும்

ஈ) கடலும் கடல் சார்ந்த இடமும்

Answer:

அ) காடும் காடு சார்ந்த இடமும்

Question 25.

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்) எந்நிலத்துக்குரிய உரிப்பொருள்

அ) குறிஞ்சி

ஆ) முல்லை

இ) மருதம்

ஈ) பாலை

Answer:

ஆ) முல்லை

Question 26.

கார்காலத்துக்குரிய மாதங்கள் அ) தை, மாசி

ஆ) பங்குனி, சித்திரை

இ) ஆவணி, புரட்டாசி

ஈ) கார்த்திகை, மார்கழி

Answer:

இ) ஆவணி, புரட்டாசி

Question 27.

நப்பூதனாரின் தந்தை அ) பொன்முடியார்

ஆ) பொன்வணிகனார்

இ) மாசாத்துவாணிகனார்

ஈ) மாணிக்கநாயனார்

Answer:

ஆ) பொன்வணிகனார்

Question 28.

பொன்வணிகனாரின் ஊர்

அ) உறையூர்

ஆ) மதுரை

இ) காவிரிப்பூம்பட்டினம்

ஈ) குற்றாலம்

Answer:

இ) காவிரிப்பூம்பட்டினம்

குறுவினா

Question 1.

முல்லைப்பாட்டு நூல் குறிப்பு வரைக.

Answer:

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.

103 பாடல் அடிவரையறை கொண்டது.

ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.

முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.

பத்துப்பாட்டில் மிகக் குறைந்த அடிகளைக் கொண்ட நூல்.

Question 2.

நப்பூதனார் குறிப்பு வரைக.

Answer:

முல்லைப்பாட்டைப் பாடியவர்.

காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனாவார்.

Question 3.

விரிச்சி கேட்டல் என்றால் என்ன?

Answer:

ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்பக்கத்தில் போய்,

தெய்வத்தைத் தொழுது நிற்பர். அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.

அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும்.

தீய மொழியைக் கூறின் தம் செயல் தீயதாய் முடியும் என்று எண்ணுவர்.

Question 4.

இளங்கன்று வருந்தக் காரணம் யாது?

Answer:

சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது.

Question 5.

இளங்கன்றின் வருத்தத்தைப் போக்க இடைமகள் கூறிய செய்தி யாது?

Answer:

புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் இப்போது ஓட்டி வந்துவிடுவர் – வருந்தாதே.

Question 6.

தலைவியை முதுபெண்டிர் எவ்வாறு ஆற்றுப்படுத்தினர்?

Answer:

நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவான்.

தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே.

Question 7.

முல்லைப்பாட்டில் திருமால் குறித்து கூறப்பட்ட செய்தி யாது?

Answer:

வலம்புரிச்சங்கு பொறித்த கைகளை உடையவன் திருமால்

குறுகிய வடிவம் எடுத்தவன்.

மாவலி மன்னன் நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்தவன்.

Question 8.

மழைப்பொழிவு குறித்து முல்லைப் பாட்டில் கூறப்பட்டுள்ள செய்தி யாது?

Answer:

ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகி பெருந் தோற்றம் கொண்டது மேகம்.

அம்மேகமானது வலமாய் எழுந்தது.

மலையைச் சூழ்ந்தது.

விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிந்தது.

Question 9.

முதிய பெண்கள் (முதுபெண்டிர்) தெய்வத்தை எவ்வாறு தொழுது நின்றனர்?

Answer:

முல்லைப் பூக்களோடு நாழி அளவு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவினர்.

தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

Question 10.

பொழுது எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer:

பொழுது இரண்டு வகைப்படும். அவை: பெரும் பொழுது, சிறு பொழுது.

Question 11.

முல்லை நிலத்திற்குரிய பொழுதுகள் எவை?

Answer:

பெரும் பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி) சிறு பொழுது – மாலை

Question 12.

முல்லைப்பாட்டில் இடம்பெற்றுள்ள கருப்பொருளைக் கூறுக.

Answer:

நீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு

மரம் – கொன்றை, காயா, குருந்தம்

பூ – முல்லை , பிடவம், தோன்றிப்பூ

சிறுவினா

Question 1.

முல்லைப்பாட்டு குறிப்பிடும் மாலைக்கால செய்தி யாது?

Answer:

துன்பத்தைத் தருகின்ற மாலைப் பொழுதில் முதிய பெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர்.

யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள்.

மலர்ந்த முல்லைப் பூக்களோடு நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவுவர்.

தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.

Question 2.

முதுபெண்டிர் விரிச்சி கேட்டு தலைவிக்குக் கூறிய செய்தி யாது?

Answer:

இளங்கன்றின் பசி :

சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது.

அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.

புல்லை மேய்ந்த உன் தாயாரை வளைந்த கத்தியுடைய கம்பைக் கொண்ட எம் இடையர் இப்போதுஓட்டி வந்துவிடுவர் வருந்தாதே என்றாள் இடைமகள்.

நற்சொல்லைக் கேட்டோம் :

இடைமகளது நற்சொல்லை நாங்கள் கேட்டோம்.

தலைவன் திறைப்பொருளோடு வருவது உறுதி.

Question 3.

மழை மேகம் – மழைப் பொழிவு குறித்து முல்லைப்பாட்டு எவ்வாறு வருணித்துள்ளது?

Answer:

மழை மேகம் :

வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடையவன் திருமால்.

மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்போது விண்ணுக்கும் மண்ணுக்குமாய் பேருருவம் எடுத்தவன் திருமால்.

அப்பேருருவத்தைப் போன்றுள்ளது மழை மேகம்.

மழைப் பொழிவு :

பேருருவம் கொண்ட மேகமானது வலமாய் எழுந்தது.

மலையைச் சூழ்ந்தது.

விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிந்தது.

Question 4.

முல்லைப்பாட்டு பாடலில் இடம் பெற்றுள்ள முதல், கரு, உரிப்பொருள்களை எழுது.

Answer: