காட்சித் தொடர்பு - 10th Std Science Book Back Question And Answer
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
Question 1.
அசைவூட்டும் காணொளிகளை உருவாக்க பயன்படும் மென்பொருள் எது? [PTA-3]
அ) Paint
ஆ) PDF
இ_ MS Word
ஈ) Scratch
விடை:
ஈ) Scratch
Question 2.
பல கோப்புகள் சேமிக்கப்படும் இடம் (GMQP-2019)
அ) கோப்புத் தொகுப்பு
ஆ) பெட்டி
இ) Paint
ஈ) ஸ்கேனர்
விடை:
அ) கோப்புத் தொகுப்பு
Question 3.
நிரல் (script) உருவாக்கப் பயன்படுவது எது? [PTA-1]
அ) Script area
ஆ) Block palette
இ) Stage
ஈ) Sprite
விடை::
அ) Script area
Question 4.
நிரலாக்கத்தைத் தொகுக்கப் பயன்படுவது எது? [PTA-2]
அ) Inkscape
ஆ) Script editor
இ) Stage
ஈ) Sprite
விடை:
ஆ) Script editor
Question 5.
பிளாக்குகளை (Block) உருவாக்க பயன்படுவது எது?
அ) Block palette
ஆ) Block menu
இ) Script area
ஈ) Sprite
விடை:
ஆ) Block menu
II. பொருத்துக.
விடை:
1. நிரலாக்கப் பகுதி Script Area – உ. நிரல் உருவாக்கம் Build Scripts
2. கோப்புத் தொகுப்பு Folder – ஈ. கோப்பு சேமிப்பு Store files
3. ஸ்கிராச்சு Scratch – ஆ. அசைவூட்ட மென்பொருள் Animation software
4. ஆடை திருத்தி Costume editor – இ. நிரல் திருத்தி Edit programs
5. நோட்பேடு Notepad – அ. குறிப்புகளைத் தட்டச்சு செய்தல் Type notes
III. சுருக்கமாக விடையளி
Question 1.
ஸ்கிராச்சு (SCRATCH) என்றால் என்ன?
விடை:
அசைவூட்டல்களையும் கேலிச்சித்திரங்களையும் விளையாட்டுக்களையும் எளிதில் உருவாக்கப் பயன்படும் ஒரு மென்பொருள் ஸ்கிராச்சு எனப்படும்.
இது ஒரு காட்சி நிரல் மொழி.
Question 2.
திருத்தி (EDITOR) குறித்தும் அதன் வகைகள் குறித்தும் எழுது.
விடை:
ஸ்கிராச்சு சூழல் திருத்தி மூன்று பிரிவுகளைக் கொண்டது.
ஸ்டேஜ் (Stage)
ஸ்பிரைட் (Sprite)
ஸ்கிரிப்ட் எடிட்டர் (Script editor)
(1) ஸ்டேஜ் (மேடை) :
ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.
(2) ஸ்பிரைட் :
ஸ்கிராச்சு சாளரத்தின் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்டுகள் என்பர்.
ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
(3) ஸ்கிரிப்ட் எடிட்டர் (அ) காஸ்டியூம் (ஒப்பனை) எடிட்டர் :
நிரல்களையும் ஸ்பிரைட் படங்களையும் இச்சாளரத்தில் நாம் மாற்ற முடியும்.
Question 3.
மேடை (STAGE) என்றால் என்ன? (அல்லது) ஸ்கிராச்சு சூழல் திருத்தியில் மேடை (STAGE) என்பது பற்றி சிறு குறிப்பு எழுதுக. (Sep.20)
விடை:
ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது கிடைக்கும் பின்னணியை ஸ்டேஜ் என்பர்.
இதன் பின்னணி நிறம் வெள்ளையாக இருக்கும்.
தேவைப்படின் பின்னணி நிறத்தை மாற்றலாம்.
Question 4.
ஸ்பிரைட் (SPRITE) என்றால் என்ன?
விடை:
ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களைக் (Characters) ஸ்பிரைட்கள் என்பர்.
ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும்.
ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
PTA மாதிரி வினா-விடை
1. மதிப்பெணம்
Question 1.
கணிப்பொறியில் குறிப்புகளைச் சேகரித்து வைக்க …………. பயன்படுகிறது. [PTA-4]
அ) Notepad
ஆ) Paint
இ) Scanner
ஈ) Scratch
விடை:
அ) Notepad
Question 2.
கணினியில் இடம்பெற்றிருக்கும் செயலி மூலம் உருவாக்கப்படும் எந்த ஒரு வெளியீடும் ………… என்று குறிக்கப்படுகிறது. [PTA-6]
அ) கட்டளை
ஆ) கோப்புத் தொகுப்பு
இ கோப்பு
ஈ) Paint
விடை:
இ) கோப்பு